Home » Articles » வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க

 
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க


சண்முக வடிவேல் இரா
Author:

“இந்தப் பிள்ளையாருக்கு எத்தனை முறை தேனபிஷேகம் பண்ணியிருப்பேன்? எத்தனை தடைவை சந்தக்க் காப்பு செஞ்சிருப்பேன்? என்னை இப்படி சோதிக்கிறாரே? செய்யலாமா?”

“அந்த மனுஷன் மகா நன்றிகெட்டவன் சார்? அவருக்கு ஒடம்பு சரியில்லேன்னதும் ஆஸ்பத்திரிக்கு ‘லொங்கு லொங்கு’ ன்னு ஓடி ஓடிப் பார்த்துக்கிட்டேனே? ஒரு நூறு ரூபா கேட்டப்போ இல்லேன்னு எடுத்தெறிஞ்சி பேசிட்டானே? இனிமேதான் அவனுக்கு இருக்கு. பாருங்க அவன் படாதபாடு படப்போறான்!”

“பெரிய பயலப் பாருங்க சார்! அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லே ஓர் ஆயிரம் ரூபா அனுப்புடான்னு எழுதினேன். இப்ப முடியாது எழுதியிருக்கான் சார். இந்தப் பயல வளர்த்து ஆளாக்க நான் என்ன பாடுபட்டிருக்கேன்! மெட்ராஸ்ல பார்க்காத வைத்தியம் இல்லை! எவ்வளவு செலவழிச்சிருக்கேன்?”

இப்படி பலபேர் அங்கலாய்ப்பதைக் கேட்டிருக்கிறோம். இந்த மனச்சங்கடத்துக்கு என்ன காரணம்ழ நாம் எது ஒன்றையும் செய்யும்போது பலனை எதிர்பார்த்துச் செய்வதே இதற்குக் காரணம்.

மகனுக்கே சாபம்

பெண் குழந்தை பிறந்தால் பரிதவிக்கிறோம். ஆண் குழந்தை பிறந்தால் அகமகிழ்கிறோம். என்ன காரணம்? பெண் குழந்தை பிறந்தால் திருமணச் செலவு ஆகும். படிக்க வைக்கச் செலவு ஆகும். படித்து முடித்துக் கணவனுக்குத்தான் பயன். வேறு குடும்பம் நன்மையடைய நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்? ஆண்குழந்தைத என்றால் அவன் படித்து முடித்து வேலைபார்த்து நமக்கு உதவுவான். கடைசிக்காலத்தில் அவன் தயவில் நாம் வாழலாம். எனக்கும் மனைவிக்கும் கவலையில்லை. இவ்வாறு நினைப்பதால் தான், பெண் குழந்தை பிறந்ததும் மனக்கஷ்டப்படுவதும் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் ஆகாயத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதிபதும் நடக்கிறது. அந்த ஆண் குழந்தை கடைசிக்காலத்தில் நமக்கு உதவாதபோது துன்ப்ப் படுகிறோம். மனம் தாங்குவதில்லை. நாம் பெற்ற மகனுக்கே சாபமிடுகிறோம்.

பக்தியா – கடமையா?

முகம்மது நபி, எப்போதும் எல்லாக்காலங்களிலும் ஒருவர் தொழுகையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து, நண்பர்களிடம் ‘இவர் எப்போதும் தொழுகையில் ஈடுபட்டிருக்கிறாரே, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்?’ என்று கேட்டிருக்கிறார். ‘இவர் அண்ணன் விறகு வெட்டியாக வேலை செய்து வருகிறார். அவர் வீட்டில் இவர் சாப்பிட்டுக் கொள்கிறார்’ என்றார்களாம்.

அப்போது முகம்மது நபி அவர்கள்,

அவரிடம் சொல்லுங்கள், ‘பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டு, தொழுகையல் சதா ஈடுறபடுகிறவர்களின் வணக்கத்தை அல்லா ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று சொன்னாராம்.

எவ்வளவு அருமையாகச் சொல்லியிருக்கிறார்..! இறைவனிடம் பக்தி செலுத்துவதை முக்கியந்தான் என்று ஏற்றுக்கொண்டாலும், கடமையைச் சரிவரச் செய்வது அதைவிட முக்கியம் என்றே மேலோர்கள் சொல்லுகிறார்கள்.

எதையாவது ஒன்றை வேண்டிப் பெறுவதற்காகவே இறைவனைத் தொழுதால் அது வியாபாரமாக ஆகிவிடுகிறது. இறைவனிடமே ஒன்றை எதிர்பார்த்து பக்தி செய்யக்கூடாது என்னும்போது,மனிதர்களிடம் ஒன்றை எதிர்பார்த்து எதையாவது செய்வதை எவ்வாறு ஏற்க முடியும்?

என்னை நன்றாக இறைவன் படைத்தன்ன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

என்று திருமூலரின் திருமந்திரம் கூறுகிறது.

அவன்ப் பாடுவதற்காகவே – போற்றுவதற்காகவே நான் இருக்கிறேன் என்ற உணர்வுதான் பக்தி, அன்றாட வாழ்வுக்கு வளர்த்துக் கொண்டு வீணே அல்லல்பட வேண்டியதில்லை.

நல்லது செய்

நல்லது செய்வது மானுடப்பிறவியின் பணி. அதற்காகவே நல்லது செய்கிறேன் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். நல்லது நல்ல விளைவைத்தான் உண்டாக்கும். ஆனால், விளைவது நமக்கே கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது பிழை.

நல்ல பெண் குழந்தை, நிறையப் படிக்க வைக்கிறோம். உரிய பருவம், கவர்ச்சி தரும் அழகு. வியக்க வைக்கும் அறிவு. எல்லாம் நிறைந்துவிடுகிறது. பின் என்ன செய்கிறோம்? இந்த எல்லா நிறைவுகளையும் சேர்த்து ஒரு ஆண் மகன் கையில் கொடுத்துவிடுகிறோம் இல்லையாழ இதுதான் மனித வாழ்வின் மாண்பு ஆகும்.

இதோ ஒரு கதை!

சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும்ப் பூவும் மணக்க நெய் த்தும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம். ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார். எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே,

ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் தின்று முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.

நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள்.

“நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன். அவர் எடுத்து எனக்கு ஊட்டினார். இவ்வாறு எல்லோரும் மற்றவர்களுக்கு ஊட்டினோம். அனைவரும் உண்டோம். அண்டாவும் காலி, எங்கள் பசியும் போச்சு” என்றனர். நரகவாசிகள் தங்களுக்கு இந்த தந்திரம் தெரியாமல் போயிற்றே என்று நினைத்து வெட்கப்பட்டனர்.

எது சொர்க்கம்?

இந்தக் கதை என்ன சொல்கிறது? எல்லோரும் மற்றவர்களுக்கு உதவும் நிலை வந்தால் ஒருவரும் துன்ப்ப்படமாட்டார். சொர்க்கம் என்பதே எல்லாரும் எல்லார்க்கும் உதவிசெய்து வாழும் இடந்தான். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க. தன்னைப் பற்றியே கவலைப்படுகிறவர்கள் நிறைந்த இடமே நரகம்.

அரிச்சந்திரன் நாட்டை இழந்தான். மனைவியை விற்றான். மகனை இழந்தான். ஆயினும் பொய் சொல்லாமல் உண்மையே பேசினேன். என்று பாடம் நடத்தி விட்டு இதிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்? என்று கேட்டேன்.

ஒரு மாணவன் சொன்னான், “உண்மை பேசினால் மனைவியை விற்க நேரும்” என்றான். தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொள்வோம்.

(முற்றும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2003

திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்
நிறுவனர் பக்கம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
திறந்த மனமே சிந்தனை தெளிவாம்
உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
வாணவராயர் சிந்தனைகள்
வெற்றி நிச்சயம்
பொதுவாச் சொல்றேன்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றிமுகம்
உள்ளத்தோடு உள்ளம்
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் மாணவர் பக்கம்
வெற்றியின் மனமே……
எமது பண்பாடு
நூல்கள் வெற்றியின் தூண்கள்
கேள்வி பதில் பகுதி
மாற்றம் மலரட்டும்
உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? கேளுங்கள் என்னை