Home » Articles » விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்

 
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்


முத்தையா ம
Author:

விளம்பர உலகில் வேலை வாய்ப்புகளை வாரிவழங்கும் துறை, வாடிக்கையாளர் சேவைத் துறை.
]
வாடிக்கையாளர் சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கென்று தனி முக்கியத் துவம் உண்டு. ஒரு வாடிக்கையாளரின் தேவைகளைத் தெரிந்து, அதனை விளம்பர நிறுவனத்தின் படைப்பாக்கக் குழுவிடம் தெளிவாகத் தெரிவித்து உருவாக்கிய விளம்பரத்தை, வாடிக்கையாளருக்கு விளக்கி, அது எந்த ஊடகம் வழியாக வெளிப்படுத்தலாம் என்பதைச் சொல்வதோடு, உரிய நாளில் உரிய ஊடகம் வழியாக அதை வெளிவரச்செய்வது வரை…… மூச்சு முட்டுகிறதா?

ஆனால், நடைமுறையில் செய்து பார்க்கும்போது மிக சுலபமாக இருக்கும். இதற் கென்று எம்.பி.ஏ., கம்யூனிக் கேஷன் என கல்வித் தகுதிகளை பெரிய விளம்பர நிறுவனங்கள் எதிர்பார்ப்பதுண்டு.

எல்லாவற்றையும் விட அடிப்படையான தேவை மக்கள் தொடர்பில் இதமான அணுகு முறையும் மனோநிலையும் தான்.

வாடிக்கையாளர் சேவை அலுவலர் வழியாகத்தான் விளம்பர நிறுவனத்தை வாடிக்கை யாளர் எடைபோடுகின்றார். எனவே, இவர் தன் விளம்பர நிறுவனத்தின் முகமாகவும் முகவரியாகவும் விளங்குகிறார்.

சில சமயங்களில் வாடிக்கை யாளர் சேவைப்பிரிவில் ஈடு படும் அலுவலர்கள் ஒரு வினோ தமான சிக்கலில் மாட்டிக் கொள் வதுண்டு. சில வாடிக்கையாளர் கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பர மாக இருப்பார்கள். அல்லது அவர்கள் தங்களை அவ்வாறு நினைப்பார்கள்.

விளம்பர உருவாக்கம், வாசகம் வெளியிட வேண்டிய ஊடகம் வரை அவர்களே முடிவு செய்து சொல்வார்கள். அது சரியான கணிப்பாக இருந்தால் தவறில்லை. ஆனால் தாங்களே தவறான முடிவுகளை எடுத்து அதனை விளம்பர நிறுவனம் மீது திணிக்க விரும்பும் வாடிக்கை யாளரும் உண்டு.

அத்தகைய சூழ்நிலை களைப் பக்குவமாகக் கையாள வேண்டியவர்கள், இந்த அலுவலர் தான். பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்குவதும் பாய வேண்டிய இடத்தில் பாய்வது மாய் ஜகஜால வித்தைகள் காட்ட வேண்டிய துறை இந்தத் துறை.

வாடிக்கையாளரின் வேண்டாத பிடிவாதங்களை அலட்சியப்படுத்துவது அலுவலருக்கு நல்லது. அதனால், வாடிக்கையாளர் கோபப்பட்டு, விளம்பர நிறுவனத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்தால் அது இவருக்கு நல்லதல்ல.

விளம்பர உலகின் பிதா மகர்களின் ஒருவரான டேவிட் ஒகில்வி, இந்த சூழலைக் கையாள மிக நல்ல யோசனை ஒன்றை முன்மொழிந்தார்.

“உங்கள் வாடிக்கையாளர் அதிருப்தியில் அலறுகிறாரா? அவர் நிறுவனத்தின் லோகோ அளவை விளம்பரத்தில் இரண்டு

மடங்கு ஆக்குங்கள். இன்னும் அவர் மனத்திருப்தியடைய வில்லையா? அவர் தொழிற் சாலையின் புகைப்படத்தைப் போடுங்கள். வேறு வழியே இல்லை என்ற நிலை வந்தால் அவரது புகைப்படத்தையே போடுங்கள்.

If your client groans and cries,
make his logo twice the size;
If he is still regractory
put a picture of his factory;
only in the gravest cases
You should show the clients, faces.

பெரிதாக பட்டப்படிப்பு பின்புலம் இல்லாதவர்கள் கூட சிரமமான சூழலை சமயோசித மாகக் கையாளும் திறனிருந்தால் இந்தத் துறையில் பரிணமிக்க முடியும்.

ஒரு தயாரிப்புக்கு விளம் பரம் செய்யும் தொழிலை மேற் கொண்டால், அதன் விற்பனை விகிதம், சந்தையில் அந்தத் தயாரிப்பின் பங்கு, உடனடிப் போட்டிகள், சந்தையில் அவர் களுடைய பங்கு, இந்தத் தயாரிப்பின் பலங்கள், பலவீனங் கள், விற்பனை வினியோக முறை என்று இத்தனை விவரங்களை யும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

இன்று, விளம்பர உலகம் குறித்து விழிப்புணர்வு வளர்ந் துள்ள காலச்சூழலில், சேவைப் பிரிவுக்குள் இளைஞர்கள் வெகு எளிதாக நுழைத்துவிட முடியும்.

விளம்பர உலகம் ஒரு கிரிக்கெட் மைதானம். வாடிக்கை யாளர் சேவையை மேற் கொள்ளும் அலுவலர், அங்கே ஒரு அம்பயர். எதையும் தாங்கும் இதயம் இருந்தால் மட்டுமே சிரமங்களை சகித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் செயல்பட முடியும்.

நல்ல வருமானத்தை நல்கும் வளர்ச்சிக்கும் வாய்ப்புள்ள துறை இது. ஆனால், ஒருவர் ஒரே விளம்பர நிறுவனத்தில் நீண்ட நாட்கள் தங்குவது சிரமம். மாறிக் கொண்டே இருப்பவர்கள் என்கிற பெயர், இந்தத் துறை யினருக்கு உண்டு.

கொஞ்சம் படைப்பாக்கம், கொஞ்சம் ஊடகத் தகவல்கள், கொஞ்சம் யூகம், இனிமையான பழக்க வழக்கம், சமயோசிதம், நிறைய கனவுகள், அதைவிட அதிகமாய் தன்னம்பிக்கை இத்தனையும் இருந்தால் வாடிக்கையாளர் சேவையில் சாதிப்பது சுலபம்.

(தொடரும்….)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2003

திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்
நிறுவனர் பக்கம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
திறந்த மனமே சிந்தனை தெளிவாம்
உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
வாணவராயர் சிந்தனைகள்
வெற்றி நிச்சயம்
பொதுவாச் சொல்றேன்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றிமுகம்
உள்ளத்தோடு உள்ளம்
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் மாணவர் பக்கம்
வெற்றியின் மனமே……
எமது பண்பாடு
நூல்கள் வெற்றியின் தூண்கள்
கேள்வி பதில் பகுதி
மாற்றம் மலரட்டும்
உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? கேளுங்கள் என்னை