Home » Articles » கனவே கண் வளராய்

 
கனவே கண் வளராய்


சரஸ்வதி குமாரன்
Author:

இளைஞனே!

கனவை இத்தோடு நிறுத்து
கற்ற கல்வியைப் பொறுத்து
காலத்தோடு உன்னை
காரியத்தில் பொருத்து.

வறுமைத் தீ உனைச்
சுட்டபோதும் உறக்கமா!
வாழ்வு வெறும்
கனவுச் சிறகாலே
உயரப் பறக்குமா!

வந்தபின்பு
காப்போமென்பது மடமை
வாழும் வகைதெரிந்து
எழுடா.. அது உன் கடமை.

அஞ்சிப் பகை வளர்த்து
அடையாளம் தெரியாமல்
போகாதே மண்ணோடு!
நெஞ்சில் தீவளர்த்து
நேர்மையாய் நீ போராடு!

உறுதி உளி கொண்டு
உன்னை நீ செதுக்கு.
உண்மை, உயர்வு தவிர்த்து
மற்றதெல்லாம் ஒதுக்கு.
உதவாக்கரையை எல்லாம்
உடைத்து நீ நொறுக்கு.

உலகம் உயர, உய்ய
உன்னுடல் வேர்க்கட்டும்
சுற்றும் பூமியும்
சற்றே நின்றுனைப்
பார்க்கட்டும்!

இது கனவல்ல, கைக்கொள்.

சரஸ்வதி குமாரன்
கோவை 15.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2002

பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
மாணவர் பெற்றோர் பக்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
புதிய விற்பனை உத்திகள்
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!
மனம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
மனசுவிட்டுப் பேசுங்க
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
ஆசிரியருக்கு கடிதம்
வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
கனவே கண் வளராய்