Home » Articles » கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்

 
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்


admin
Author:

தன்னம்பிக்கை மாத இதழ், வின்னர்ஸ் கிளப், கோவை இணைந்து நடத்திய நவம்பர் மாதத்திற்கான சுயமுன்னேற்றப் பயிலரங்கம் 24.11.2002 அன்று கோவை கொடீசியா அரங்கில் நடைபெற்றது.

திருப்பூர், யோக ஆசிரியர் திரு. யோகி ராஜேந்திரா அவர்கள் கலந்துகொண்டு உடல் – மனம் – ஆன்மா என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ஆரோக்கியமாக உடலைப் பேண, எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கிறது. நம்முடைய மனம் எத்தகைய தன்மையுடையது, மனத்தூய்மை பெறுவதன் அவசியம் என்ன, ஆன்ம பலம் பெற என்னென்ன வழிகளைக் கைக்கொள்ள வேண்டும் என விரிவாக விளக்கினார்.

இயற்கை உணவையே உண்டு, வாழ்ந்து, இயற்கை உணவின் மேன்மையைப் பற்றிப் பேசிவரும் இவர், இந்தப் பயிலரங்கில் பங்கேற்ற 150 பேருக்கும் தேநீர் இடைவேளையின்போது கொடுப்பதற்கென காய்கறி சூப் தயாரித்து, திருப்பூரிலிருந்து தானே கொண்டு வந்து வழங்கி, பங்கேற்ற அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

வாழ்க்கையைக் கண்டு
அஞ்சாதீர்கள்
வாழ்க்கையின் மீது நம்பிக்கை
வையுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2002

பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
மாணவர் பெற்றோர் பக்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
புதிய விற்பனை உத்திகள்
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!
மனம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
மனசுவிட்டுப் பேசுங்க
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
ஆசிரியருக்கு கடிதம்
வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
கனவே கண் வளராய்