Home » Articles » கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!

 
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!


admin
Author:

கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா கரூர், சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் 10.11.2002 அன்று நடைபெற்றது. கரூர் டிஸ்னி ஃபேப் எகஸ்போர்ட் உரிமையாளர் திரு. நல்லுசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தன்னம்பிக்கை வாசகர்கள் பங்கேற்றனர்.

இந்த அறிமுக விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தன்னம்பிக்கை சுயமுன்னேற்றப் பயிலரங்கம் நடைபெற்றது. ஆல் டைம் சர்ட்ஸ் உரிமையாளர் திரு.அன்புத் தம்பி கலந்துகொண்டு சுயமுன்னேற்றப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார்.

திரு. சக்சஸ் ஜெயச்சந்திரன் அவர்கள் வெற்றியின் ரகசியம் இதோ.. என்கிற தலைப்பில் சுமார் 2 மணி நேரம் உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரூர் தன்னம்பிக்கை முகவர் திரு. கண்ணன், திரு. கல்யாண ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில், கோவை திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் பயிலரங்கம் போல கரூரிலும் மாதந்தோறும் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது.

உழைப்பை உதாசீனப்படுத்தாதீர்கள்.
அது உங்களை உதாசீனப்படுத்தி விடும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2002

பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
மாணவர் பெற்றோர் பக்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
புதிய விற்பனை உத்திகள்
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!
மனம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
மனசுவிட்டுப் பேசுங்க
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
ஆசிரியருக்கு கடிதம்
வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
கனவே கண் வளராய்