Home » Articles » மனசுவிட்டுப் பேசுங்க

 
மனசுவிட்டுப் பேசுங்க


admin
Author:

கேள்வி பதில் பகுதி

எனக்கு படிப்பிலும் செயலிலும் ஆர்வம் குறைந்து விடுவதால் சோர்வடைகிறேன். தவறு என அறிந்தும் மீண்டும் தவறு செய்கிறேன். இதற்கு என்ன செய்வது?

பதில்: பொதுவாக ஆர்வம் குறைதல், தவறு செய்தல் எல்லோருக்கும் உள்ள பிரச்சனைதான். அதைக் கையாள்வதில் தான் நாம் திறமையாளராக மாறமுடியும்.

எல்லோருக்கும் எல்லாமும் பெற வேண்டும். என்ற ஆசைதான். ஆனால், அது சிலருக்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே உண்டு. சிலருக்கு சில நாட்களுக்கு மட்டுமே உண்டு. சிலருக்கு சில வருடங்களுக்கு உண்டு. சிலருக்கு வாழ்நாள் முழுவதும் உண்டு.

நீங்கள் உங்களுடைய ஆர்வத்தை எவ்வளவு ஆண்டுகள் அதிகரிக்க முடியுமோ அந்த அளவிற்கு வெற்றியும் பலன்களும் இருக்கும்.

ஒரு போட்டியில் முதல் பரிசுக்கு வெற்றி பெற்றவரை பரிசளிக்க அழைக்க இருக்கும்போது, அவருடைய மனநிலை எப்படியிருக்கும்? அந்தப் பரிசை பெறப்போகிறோம் என்பதில் ஒரு துளியும் சந்தேகமிருக்காது. அதைப் போலவே உங்களுடைய படிப்பிலும், வாழ்க்கையின் வெற்றியிலும், முழு நம்பிக்கையிருந்தால் ஆர்வம் குறையாது. ஆர்வம் குறைவதற்குக் காரணமே, செயலிலும் எதிர்காலத்தின் மீதும் உள்ள சந்தேகமே.

ஆகவே, முழு நம்பிக்கையுடன் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வெற்றி நிச்சயம். ஆங்கில மொழியில் சிரமம் இருந்தாலும் தொடர்ந்து படிக்கப் படிக்க அத்தடையும் நீங்கி விடும்.

ஒரு முறை தவறு செய்ததலிருந்து அனுபவப்பாடத்தைக் கற்று, அதிலிருந்து புதிய வழிமுறையை அறிந்து அந்தத் தவறை திரும்பச் செய்யாமலிருப்பவர்கள் அறிவாளர்கள். அதே தவறை திரும்பத் திரும்ப செய்தால் அதுவே குற்றம்.

இனி, மனதில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒன்று, தவறு எனத் தெரிந்த பின் என்ன சூழ்நிலை வந்தாலும் அதைத் திரும்பச் செய்வதில்லை என்ற உறுதியோடு செயல்படுங்கள்.

விடாமுயற்சியுடன் செயல்படுவதே எந்த துறையிலும் வெற்றிபெற அடிப்படை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2002

பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
மாணவர் பெற்றோர் பக்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
புதிய விற்பனை உத்திகள்
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!
மனம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
மனசுவிட்டுப் பேசுங்க
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
ஆசிரியருக்கு கடிதம்
வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
கனவே கண் வளராய்