Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

உறுதியான குரலில் உச்சநீதிமன்றம் காவிரிச் சிக்கல் குறித்துக் கருத்துச் சொன்னது. கர்நாடகம் பணிந்தது. “நீதியின் வலிமை” என்னவென்று நாடு நன்குணர்ந்த தருணங்களில் இதுவும் ஒன்று.

தேசமெங்கும் நதிகளை இணைக்க நடுவண் அரசுக்கு உச்சநீதிமன்றம் தந்துள்ள கெடுவும் வரவேற்கத்தக்கது. இனி, மக்கள் இதில் பங்கேற்க வேண்டும். காலங்காலமாய் நதிகள் இணைக்குப்புக்குக் குரல் கொடுத்து வரும் நிபுணர்கள் மக்கள் இயக்க மேதைகள் ஆகியோரின் நெடிய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் உருவாக வேண்டும்.

தேசத்தின் நலனுக்கான இந்த மகத்தான முயற்சி. தனிமனிதர்கள் சிலரின் விளம்பர வெளிச்சங்களுக்குப் பயன்படாமல் பார்த்துக் கொள்கிற கடமையும் நமக்கு உள்ளது.

பத்தாண்டுகள் கழித்துதானே.. என்று அலட்சியம் காட்டாமல், நம்பிள்ளைகள் – பேரக் குழந்தைகள், பெரியவர்களாகும் போது, வளமான இந்தியாவை பாடப் புத்தகத்தில் காட்டாமல், பார்வையில் காட்ட மீண்டும் நம் தலை முறைக்கு தரப்படிருக்கும் நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பு.

இந்திய நதிநீர் இணைப்புத் திட்டம் எங்கிருந்து தொடங்க வேண்டும்? இந்தியர்களின் இதயங்களில் இருந்துதானே!

நம்பிக்கையுடன்
ஆசிரியர் குழு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2002

பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
மாணவர் பெற்றோர் பக்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
புதிய விற்பனை உத்திகள்
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!
மனம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
மனசுவிட்டுப் பேசுங்க
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
ஆசிரியருக்கு கடிதம்
வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
கனவே கண் வளராய்