Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

வெற்றி நிச்சயம்

பி : வாழ்க்கையே சூன்யம்தான். அது எப்படியாகுமோனு குழப்பமாயிருக்குது.
மு : ஒவ்வொரு விளைவும் ஒவ்வொரு காரணத்தின் அடிப்படையில்தான் உண்டாகுது. அதைக் கண்டுபிடித்து, சரிசெய்தால் குழப்பம் தெளிவாகும்.

பி : எனக்கு எதிலுமே திருப்தியில்லை. என் தலையெழுத்தே தோல்வி என்பதுதான்.

மு : எந்த ஒரு மனிதனுக்கும் தோல்விதான் விதி என்று யாரும் நிர்ணயிக்கவில்லை. மதியிருந்தால் விதியையும் வெல்ல முடியும்.

பி : எனக்கு கோபம் வந்தால் என்ன நடக்குமென்பதே தெரியாது.

மு : கோபம் என்பது ஒரு உணர்வுதான். அதை அடக்குவதே அறிவுடைமை.

பி : என்னால் இனி முடியவே முடியாது.

மு : உடல் உறுப்புகள் இவை எல்லாமே மாபெரும் சொத்துதானே. அதை வைத்து பிற செல்வங்களை சம்பாதிக்க முடியும்.

பி : அப்படி நடந்திருந்தால் எல்லாமே சரியாக இருந்திருக்கும்.

மு : நடந்ததை நினைத்து வருத்தப்படுவதில் பயனில்லை. நடந்ததிலருந்து இனி எப்படி செயல்படுவதென்பதை முடிவெடுப்பதே விவேகம்.

பி : எதிரிகளைக் கண்டாலே கோபந்தான்.

மு : எதிரிகளை சமாளிக்கும் வழியை ஆராய்ந்து பார்க்கலாம்.

பி: அந்தக் காரியத்தைச் செய்ய முடிந்தாலும் மிகவும் கஷ்டமானதுதான்.

மு: கஷ்டமானதாக இருந்தாலும் செய்ய முடியுமே.

பி: நான் சொல்கிற காரணங்கள் சரியானவை. அதனால்தான் செய்ய முடியாது என நினைக்கிறேன்.

மு: காரணங்கள் சரியானதாகவே இருக்கலாம். இருந்தாலும் செய்து முடிப்பதற்கான வழிகளை ஆராய்ந்தால் அதைச் செய்ய முடியும்.

பி: பெரிய தவறு நடந்துவிட்டது. அதிலிருந்து மீளவே முடியாது.

மு: தவறுவது இயற்கைதான். அதே தவறை திரும்பச் செய்யாமல் இருந்தால் அதுவே உயர்ந்த அனுபவம்தான். சில தவறுகள் மூலமே புதிய வழிகளை அறியமுடியும்.

பி: ஆசைகளெல்லாம் எதற்கு?

மு: ஆசைகளில் தவறில்லை. பேராசையே தவறு.

பி: போட்டியாளர் அதிகமாகிவிட்டார்கள். நாம் ஒதுங்கிவிடுவதே நல்லது.

மு: திறமையுடன் வித்தியாசமாக செயல் பட்டால் போட்டியாளர்களை வெல்ல முடியும்.

பி: இனிமேல் புதியதாக திட்டமிட எனக்கு இளம் வயதா?

மு: பல சாதனையாளர்கள் நாற்பது வயதிற்குப் பின்னரே புதிய குறிக்களோஐ அமைத்து வெற்றி கண்டுள்ளார்கள்.

பி: இதெல்லாம் ஒரு தொழிலா இதிலிருந்தால் அதே கதிதான்.

மு: எல்லாத் தொழிலுமே உயர்வானது தான். தெரு கூட்டுகிற வேலையானாலும் இப்படியொரு மனிதன் திறமையாக செய்தானே என்று சொல்லுமளவிற்கு செயல்பட்டால் உயர்வடைய முடியும்.

பி: காலம் மாறிவிட்டது. அதற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது.

மு: மாற்றங்கள் தவிர்க்க முடியாது. அதற்கேற்ப தயாராக வேண்டியதே அவசியம்:

இது இருவரின் உடையாடல்கள் யார் அந்த இருவர்? நமக்குள்ளிருக்கிற நெகடிவ் மனநிலையிலும், பாசிடிவ் மனநிலையிலும் தோன்றுகின்ற எண்ணங்கள்.

பிற்போக்கு அல்லது நெகடிவ் மனநிலையை அவ்வப்போது பின்தள்ளி முற்போக்கு அல்லது பாசிடிவ் மன நிலையை ஊக்குவிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி