Home » Articles » மனம் விரும்பும் பணம்

 
மனம் விரும்பும் பணம்


ஜெயசித்ரா குமரேசன்
Author:

தீபாவளித் திருவிழாவை தித்திக்கும் இனிப்பு களுடன், திகட்டாத பட்டாசுகளுடன், பட்டாடை களுடன் மகிழ்ந்திருப்பீர்கள். மற்றவர்களுக்கும் MLM அன்பர்களுக்கும் வேறுபாடு வேண்டுமல்லவா? ஆம். வேண்டும் என்பவர்கள் திட்டமிடுங்கள் திரும்பவும் தீபாவளிவருவதற்குள் நீங்கள் எந்த உயர்நிலையினை எட்ட வேண்டும் என.

மற்றவர்களை முன்னேற்றுவோம்! நாமும் முன்னேறுவோம்!

கடந்த இதழில் ஆண்டவன் கட்டளை ஆறு என்பதினை பார்த்தோம். அவற்றில் திட்டத்தைக் காட்டுவது எப்படி என்பதில் ஆர்வமிகு அழைப்பிதழ் முறையினையும், நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சினில் கனவிருந்தால் முறையினை யும் கண்டோம்.

இனி, இனிமையான சந்திப்பு இல்லத்தில் எப்படி? என பார்க்கலாமா?

ஒஒஒ. home meeting – இல்லத்தில் கூட்டம்

A House is built with
Bricks and stones,
But a Home is built with
Hearts full of love.

என்பதற்கேற்ப இல்லத்தில் தொடர்ந்து இந்த வியாபாரத்தினை பகிர்ந்து கொள்ளும்போது இல்லத்தரசிகள் இதில் ஈடுபடுகிறார்கள். இதனால் இமாலய வெற்றி கிடைக்கிறது.

MLM வியாபாரம் செய்யும்பொழுது குடும்பத் தில் உள்ள அனைவரும் அவரவரால் முடிந்த காரியங்களைச் செய்தால் வெற்றி விரைவில் வந்து சேரும்.

உங்களது பெயர் பட்டியலில் உள்ளவர் களைத் தொடர்பு கொண்டு தம்பதியராய் வருமாறு இல்லக் கூட்டத்திற்கு, இட வசதியைப் பொறுத்து அழைப்பு விடுக்கலாம். ஆனால், நினைவிற்கொள்ளவும் ஐந்து நபர்களை அழைத் தால் வருபவர் ஒருவர் எனும் நிலைதான் ஏற்படும்.

மாலை 7.00 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரத்தில் முடித்து விடும் வகையில் இரண்டு விதமான கூட்டம் நடத்தலாம்.

ஒன்று, பொருட்களை மட்டும் கூறி, நன்கு பொருள்விளக்கம் (Demo) செய்து தேவைப்படு பவர்களுக்கு வழங்கலாம் (Personal Sales). இரண்டாவது, வியாபாரத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வ முள்ளவர்களா என அறிந்து முழு வியாபாரத் திட்டத்தையும் விவரிக்கலாம் (Personal Sponcering).

ஆணுக்குப் பெண் சமம் என்கிறோம். உண்மைதான். ஆனால் பெண்களிலே வேலைக்கு செல்லும் பெண்களுக்கு “வெரிகுட்” தரலாம். காலை கணவன் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்று மாலை வீடு திரும்பும் வரை வீட்டிலேயே விருந்தாளியாய் இருக்கும் பெண்களுக்கும் நாம் தரும் மிக உயர்ந்த பதவி என்ன? “House Wife” இதனை பலபேர் பல இடங்களில் பெருமையாக வேறு சொல்லி வருகின்றனர்.

இல்லத்தரசிகளே! இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில், இந்தியாவில்!

வருமானம் பெறும் பெண்களுக்கு வெகுமானம் தேடிவரும்.

சம்பாதிக்கும் மகளிர்க்கே சமுதாயத்தில் சமத்துவம்.

எனவே, இன்றிலிருந்து TV தொடர்களில் இருந்து விடுதலையாகி, உங்கள் இல்லத்திற்கு, உங்கள் பொருளாதாரத்திற்கு பயன்தரும் செயல்களைச் செய்யலாமே!

என்ன திறமை இல்லை உங்களிடம்;

ஏன் கையேந்த வேண்டும் கணவரிடம்;

நீ ஒழுங்காக பாடுபடு உன் வீட்டில்;

உலகமே உலகமே உனை பாராட்டும்.

இல்லத்தரசிகளே! இதயத்தில் சபதமெடுங்கள்!

இனி ஒவ்வொரு மணித்துளியில் “Money” வரும் வகையில் பணி செய்வோம் என!

ஏனெனில், MLM வியாபாரத்தில் வெற்றி பெற தேவைப்படும் அனைத்து தகுதிகளும் இயற்கை யாகவே இல்லத்தரசிகளிடம் உள்ளது. மகளிர்க்கே மகத்தான வெற்றி! MLM ல்! ஆணுக்குப் பின் பெண் என்பதெல்லாம் அந்தக் காலம். பெண்களுக்கே பொற்காலம்!

புதுமை பெண்களே! புறப்படுங்கள் புனிதமான வியாபாரத்திற்கு!

வெற்றி! நிரூபிக்கப்பட்ட வெற்றி! இல்லங்களில் உள்ளங்கள் சந்தித்தால்!

1. அழைப்பு விடுத்தலை உங்களது ஸ்பான்சர்/ அப்லைன் உதவியுடன் மட்டுமே செய்யவும். அனுபவம் ஏற்படும் வரை தனியாக செய்யாதீர்.

2. சிலர் வருவார், சிலர் வரமாட்டார், சிலர் வருகிறேன் எனக்கூறி வரமாட்டார் என்ன தான் நடந்தாலும் குறிப்பிட்ட கூட்டம் நடத்த வேண்டும்.

3. வந்தவர்களை வரவேற்று வாய்ப்பினைக் கூறுங்கள். வராதவர்களை நினைத்து வருந்தாமல் வருவார்கள் வருங்காலத்தில் என நம்புங்கள்.

4. அதிகம் பேரை அழைத்து, அதிசயமாக ஒரேயொருவர் மட்டுமே வந்திருந்தால், மன மகிழ்வுடன் One to One Plan என்று ஆனந்தப்படுங்கள்.

5. யாருமே வராவிடில், ஆகா! இன்று நமது அப்லைனிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்ளலாம் என ஆனந்தப்படுங்கள்.

6. நேற்று வரை நீங்கள் எப்படியிருந்தாலும், இல்லக்கூட்டத்திற்கு வருபவர்கள் உள்ளத்தை கவரும் வகையில் Product Demon
stration- உடன் இருங்கள்.

7. பொருள்கள் விளக்கம் (Product Demon
stration), வியாபாரத் திட்ட விளக்கம் (MLM Business Plan) செய்ய தேவையான அனைத்தையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்.

8. முன்னரே குறிப்பிட்டிருந்த நேரத்தில் கூட்டத்தைத் தொடங்க வேண்டும். ஓரிரு கூட்டங்களில் தாமதமாக வருபவர்கள் தங்களை திருத்திக் கொள்வர்.

9. 100% வியாபாரக் கூட்டம். எனவே சிறப்பு விருந்துகளைச் செய்தல் கூடாது.

10. இல்லக் கூட்டத்தினை நடத்த வந்துள்ள சிறப்புப் பேச்சாளரை நன்கு அறிமுகம் செய்து நீங்களும் உடனிருந்து திட்டத்தை கவனிக்கவும்.

11. இறுதியில் புதிதாக வந்தவர்கள் கேள்விகள் கேட்டு விளக்கங்கள் பெற சிறப்புப் பேச்சாளருடன் சில நிமிடங்கள் கலந்துரை யாடி தெளிவு பெற ஏற்பாடு செய்யவும்.

12. புதிதாக வந்தவர்களை கூட்டம் முடிந்தவுடன் வழியனுப்பி, தவறாது அடுத்த சந்திப்பிற்கு உரிய நாள், நேரம் குறித்துக் கொள்ளவும்.

இல்லத்தில் சந்திப்பு (மாதிரி)

சந்திப்போம்! சிந்திப்போம்! சிறகை விரிப்போம்! சிகரங்களைத் தொடுவோம்!

1. வரவேற்பு 2 நிமிடங்கள்

2. சிறப்புப் பேச்சாளர் அறிமுகம் 3 ,,

3. ஆக்கப்பூர்வ மனநிலை உருவாக்குதல் (Dreams) 5 ,,

4. வேலை / வியாபாரம் / MLM விளக்கம் 5 ,,

5. நேரம் + வியாபாரம் + பாதுகாப்பு 5 ,,

6. உயர்நிலை வருமானம், உயர்நிலை வாழ்க்கைத்தரம் 5 ,,

7. எங்கிருந்து பணம் வருகிறது Trade Vs Network 10 ,,

8. நிறுவனம், MLM திட்டம், பொருள்கள் 10 ,,

9. மேல்நிலை சாதனையாளர்களின் சரித்திரங்கள் 10 ,,

10. 50 வருட வேலை (வியாபாரம்) / 5 வருட ஒய்வு யள் 5 ,,

5 வருட ஙகங வியாபாரம் / வருட ஓய்வு மொத்தம் 60 நிமிடங்கள்

4. வாராந்திர திட்டம் (Weekly Meeting)

தன் – நம்பிக்கை எனும் ஒளிவிளக்கினை

நமக்குள் ஏற்றி வைக்கும் திருக்கோயில் –

MLM வாராந்திர கூட்டம்.

இந்த உலகிலே இன்றுவரை விடை தெரியாத கேள்வி என்ன தெரியுமா? இறைவன் என்றொருவர் இருக்கிறாரா? என்பதே.

இருப்பினும் ஒவ்வொரு மதத்தினரும் நம்பிக்கையுடன் அவரவர் வழக்கப்படி

கிறிஸ்துவர்கள் வாராவாரம் சர்ச்சிற்கு ஞாயிறன்றும்,

முஸ்லீம்கள் வாராவாரம் மசூசிக்கு வெள்ளியன்றும்,

இந்துக்கள் வாராவாரம் கோவிலுக்கு வெள்ளியன்றும்

சென்று வழிபட்டு வருவது ஏன்? ஒரு நம்பிக்கைதான். எனவே, நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கேற்ப, கடவுள் ஒவ்வொரு மனிதனின் தன்-நம்பிக்கை…. தன்னம்பிக்கையில் இருக்கிறார், இருப்பார் என ஏற்றுக்கொள்வோமா!

MLM அன்பர்கள், அவர்கள் எம்மதமா யிருந்தாலும் வாராவாரம் கோவிலுக்கு செல்வது போல, MLM வாராந்திர கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெற முடியும்.

புதிய நண்பர்களுக்கு MLM வியாபாரம் எப்படித் தோன்றும் தெரியுமா? ஒரே சம அளவில் தூளாக்கப்பட்ட உப்புத்தூள்/கோலப்பொடி/சர்க்கரைத்தூள் இவற்றைப் பார்த்தவுடன் எப்படி கண்டுபிடிக்க முடியாதோ அதுபோல தோன்றும்.

கண்டுபிடிக்க, சந்தேகம் தீர எளிய வழி என்ன? ஒவ்வொன்றையும் சுவைத்துப் பார்ப்பது தான். ஙகங வியாபாரம் பற்றி சந்தேகம் தீர வழி என்ன? வாராந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதுதான்.

MLM வாராந்திர கூட்டம் என்பது வழக்கமாக, வாராவாரம், நகரின் மையப்பகுதியில் ஏதாவது ஒரு ஹோட்டல் Meeting Hall-ல் குறிப்பிட்ட நேரத்தில் தவறாது நடைபெறும். ஒரு வெற்றியாளர் வியாபாரத் திட்டத்தினை விபரமாக எடுத்துக் கூறுவார். புதிய நண்பர்கள் 100% புரிந்து கொள்ள புதிய சூழ்நிலை இருப்பதால் முழுமையான வெற்றி கிடைக்கும்.

முதன் முதலாகவோ, ஆர்வமுறை / நேருக்கு நேர் / இல்ல சந்திப்பு / இவற்றில் பார்வையிட்டு இரண்டாம் முறையாகவோ புதிய நண்பர்களை வாராந்திர கூட்டத்திற்கு அழைத்து வரலாம்.

வாராந்திர கூட்டத்திற்கு வருபவர்கள், வருங்கால சாதனையாளர்கள். இதனை, பழக்க மாக்கி தன்னை பட்டை தீட்டிக் கொள்பவர்கள் வருங்கால வைரங்களே!

வாழ்க்கைத்தரம் உயர வாராந்திர கூட்டம்!

வளமான வாழ்க்கைக்கு வாராந்திர கூட்டம்!

கடமைகள்

1. வாராவாரம், வாராயோ தோழா/தோழி என பத்து பேரை அழைக்க வேண்டும்.

2. நேரடியாக அழைப்பிதழ் கொடுத்து அழைத்து, முன்தினம் நினைவூட்ட வேண்டும்.

3. தம்பதியர்களை, தம்பதியராய் வருமாறு அவசியம் அழைக்க வேண்டும்.

4. வழக்கமாக தொடங்கும் நேரத்திற்கு 15 நிமிடம் முன்னதாக வருமாறு கூறி வருபவர்களை உங்களது குழுவினருக்கு பரஸ்பர அறிமுகம் செய்ய வேண்டும்.

5. புதிய நண்பர்கள் வரும் வேளையில் நீங்களும், உங்களது குழுவினரும் சிறந்த வணிகருக்குரிய (Dress Code) உடையில் இருக்க வேண்டும்.

6. வாராந்திர கூட்டம் முடிந்தவுடன், புதிதாக வந்திருந்தவர்களை உங்களது ஸ்பான்ஸர் / அப்லைன் சாதனையாளரிடம் அறிமுகப் படுத்த வேண்டும்.

7. என்னால் இயலாது, யாரையும் தெரியாது என்போருக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

8. வியாபாரத் திட்டத்தைப் பார்த்தவரிடம் தகுந்த புத்தகங்கள், ஆடியோ கேசட்டுகள் கொடுத்து மறு சந்திப்பிற்கு நாள், நேரம் உறுதிப்படுத்த வேண்டும்.

பலன்கள்

1. Dress Code பழக்கமாகும். ஸ்பான்ஸர், அப்லைன், Down Line ஒரே இடத்தில் சந்திக்கலாம்.

2. பார்த்தேன், ரசித்தேன் என்றிருந்த நீங்களும் மேடையேறி, மைக் பிடித்து…. சுயவளர்ச்சி, தலைமைத்துவம் பெறலாம்.

3. புதிய தகவல்களைப் பெறலாம். நாளும், நாளும் கற்கலாம்.

4. நாம் சந்திக்கும் எதிர்மறை எண்ணங்களினால் (Negatives) ஏற்படும் மனச்சோர்விற்கு, மனதிற்கு Positive Charge என்று மருந்திடலாம்.

5. தொடர்ந்து கூட்டத்திற்கு வருபவர்கள்

Learners. இவர்களே நாளைய Leaders. இதனை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து பணிபுரியலாம்.

6. சாதனை புரிந்தவர்களுக்கு, சோதனைகளை மறக்கும் வகையில் பாராட்டுகளையும் பரிசு களையும் பலர் முன்னிலையில் வழங்கலாம்.

7. வியாபார வளர்ச்சிக்கு தேவைப்படும் Tools அனைத்தையும் வாங்கலாம்.

8. புதிய நண்பர்கள் இத்திட்டத்தைப் புரிந்து கொண்டு விரைவில் விநியோகஸ்தராக மாற உங்களது குழு வேகமாக வளரும்.

இனி, வாய்ப்பாளர்களை விநியோகஸ்தர் களாக்கியே தீர வேண்டும் என்ற இலட்சியத்துடன் உள்ள இலட்சியவாதிகளுக்காக

பின்தொடர்தல் & பிறந்த விநியோகஸ்தரை

நிறைவேற்றுதல் பேணிக்காத்தல்

Follow up & Parenting the Born
Follow Through Distributors

இவற்றினை இந்த 2002 ஆம் ஆண்டில் இறுதி மாதத்தில் இணைந்து தெரிந்து கொள்வோம்.

இன்னொரு இன்ப அதிர்ச்சி!

2002 ஜனவரியில் பிறந்த இந்த தொடரும் இறுதி மாதத்துடன் இறுதியாகிறது.

தங்களது பேராதரவும், தன்னம்பிக்கையின் அன்பும், ஆதரவும், ஆசிகளும் கிடைத்து மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்! சாதிப்போம்! 2003ம் புத்தாண்டில்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி