Home » Articles » மாணவர் பெற்றோர் பக்கம்

 
மாணவர் பெற்றோர் பக்கம்


இரத்தினசாமி ஆ
Author:

மனச்சுமையும் மகத்தான வெற்றியும்

தேர்வுகளில் சிறப்பான வெற்றி

“மனச்சுமை (Stress) என்ற வார்த்தையே சிலருக்கு பயத்தையும், உடல் நடுக்கத்தையும் ஏற்படுத்தும். ஆனால், வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள். தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற அறிவியல் மேதைகள், ஆபிரகாம் லிங்கன் போன்ற ஆட்சியாளர்கள், டாடா, பிர்லாவைப் போன்ற தொழில் மேதைகள், சிவாஜி கணேசன் போன்ற நடிப்புத் திலகங்கள்…
குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள், கொடுக்கப் பட்ட பொருளாதார வசதிக்குள் மகத்தான வெற்றி பெற்றாக வேண்டும் என்றால், மனச்சுமை எத்தகையதாக இருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

உலகத்தில் உள்ளோரில் யாருக்கு மிகுந்த மனச்சுமை, எப்போது? எங்கே? என்ற ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட செய்திகளை இங்கே சற்று அலசுவோம்.

அறுவை சிகிச்சை அரங்கத்தில், மிக முக்கியமான அறுவை சிகிச்சையில் (இருதயம், மூளை, சிறுநீரகம் போன்ற) ஈடுபட்டுள்ள தலைமை மருத்துவரே உலகத்தில் மனச்சுமை மிக அதிகம் கொண்ட மனிதர்.

அறுவை சிகிச்சையை குறிப்பிட்ட நேரத்திற் குள், வெற்றிகரமாய் முடித்தாக வேண்டும். துணை மருத்துவர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு அவர்களின் வேலைகளைச் சொல்லி அவைகளை சரிவரச் செய்து வருகிறார்களா என்ற கவனமும் இருக்க வேண்டும்.

அவர் போராடுவது வேறு ஒருவரின், உயிருடன், அவரது வேலை மற்றவரின் வேலையைப் போல் அல்ல, சரியாக வரவில்லை என்றால் மீண்டும் திருப்பிச் செய்யவோ, வேறு நாளைக்கு தள்ளிப் போடவோ முடியாது.

அவரது முழுக் கவனமும் அவரது அறுவை சிகிச்சையிலும், அவரது குழுவை இயக்குவதிலுமே இருக்க வேண்டும். அவரது மனச்சுமை அவரை சரியான திசையில் இயக்க மகத்தான வெற்றியைப் பெறச் செய்கிறது.

மனச்சுமை சீரமைப்பு (Stress Management) என்ற வார்த்தை இப்போது பிரபலமடைந்து வருகிறது. இதைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மனச்சுமையையே மனதிற்கு சுகமானதாக மாற்றத் தெரிந்தால் உடல் நலம் சிறப்படையும். வெற்றியும் எளிதாகும்.

அறுவை சிகிச்சை நிபுணருக்கு அடுத்த படியாக யாருக்கு மிக அதிக மனச்சுமை?

கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

ஆம், பள்ளிப் படிப்பின் இறுதிக் கட்டத்தி

லிருந்து தன் எதிர்கால இலக்கை அமைக்கத் துடிக்கும் +2 மாணவர்கள் மிகுந்த மனச்சுமையுடன் இருக்கிறார்கள்.

LKG யில் சேர்க்கும்போதே தனது மகன்/மகள் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக, பொறியியல் வல்லுநராக, IAS அதிகாரியாக, நாடு போற்றும் விஞ்ஞானியாக வரவேண்டும் என்ற வண்ணக் கனவுகளில் மூழ்கி விடுகின்றனர் பெற்றோர்.

LKG, UKG படிக்கும்போதே குழந்தைகளை பன்ண்ற்ண்ர்ய்க்கு அனுப்பும் பெற்றோர்களும் உள்ளனர்.

ஆண்டுக்கு ஆண்டு, வகுப்புக்கு வகுப்பு அந்த எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே வருகிறது.

தனக்கு கிடைக்காததை, தன்னால் முடி யாததை தன் குழந்தைகள் மூலம் காண, பெறத் துடிக்கும் பெற்றோர்கள், அவர்களை அவ்விதம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அதனால் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

“படி… படி” என்று அடிக்கடி குழந்தைகளிடம் சொல்வது, “என்ன மார்க் வாங்கியிருக்க, இதை வச்சுட்டு மாடு மேய்க்கத்தான் போக முடியும்” என்று குழந்தைகளைத் திட்டுவது, “உனக்காக எத்தனை செலவு செய்கிறேன். உனக்காகத்தானே உழைக்கிறேன், உயிர் வாழ்கிறேன். ஆனால், நீ அக்கரையில்லாம, ஊர் சுற்றிக்கொண்டு, ப.ய. சினிமா பார்த்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கிறயே” என்று உணர்ச்சி பொங்க கண்ணீர் மல்கப் பேசும் பெற்றோர்.

வீட்டிலே பெற்றோரின் எதிர்பார்ப்புகள்

வாரா வாரம், மாதா மாதம் தேர்வுகள் எழுதி எழுதி சலித்துப்போன மாணவர்கள்.

“நீயெல்லாம் ஏன் படிக்க வர்ரே. உனக்கு படிப்பு சுட்டுப் போட்டாலும் வராது. ஏன் இங்க வந்து எங்க உயிர வாங்கரே.”

“நல்லா படிக்கிற நீயுமா? இந்த மார்க்க வச்சிட்டு எப்படி நற்ஹற்ங் தஹய்ந் எடுக்கறது?”

என பள்ளி வகுப்பு ஆசிரியர், முதல்வரின் சுட்டெரிக்கும் பார்வைகள் வசை மொழிகள், பிரம்படிகள், தண்டனைகள்.

இந்த பள்ளியில் படித்தால் 1200க்கு 1100 மார்க்கு மேல் வாங்கியாக வேண்டும்.

என, பள்ளியிலே முதல்வர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள்

“உனக்கென்னப்பா நல்லா படிக்கிறே. நிச்சயம் உனக்கு டாக்டர் படிப்புக்கு சீட் கெடச்சிறும்”

என நண்பர்கள், உறவினர்களின் எதிர்பார்ப்புகள்

+1ல் சேர்க்கும் போது இந்த எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகி விடுகின்றன. +2 படிக்கும்போது அவர்கள் மேல் முழு கவனமும் பதிகிறது. அவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப் படுகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் எதிர்பார்ப்புகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் +2 மாணவர்கள்.

என, அவர்களின் மனச்சுமை ஏராளம், ஏராளம்

இவைகளை எப்படி எதிர்கொள்வது? எப்படி தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவது? மனச்சுமைகளை மகத்தான வெற்றியாய் எப்படி மாற்றுவது?

இவைகள் மாணவர்களுக்காக

எப்படி தன் மகன்/மகள் தனது லட்சியத்தை அடைய பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும், உதவிட வேண்டும்?

இவைகள் பெற்றோருக்காக

தன் மாணவ, மாணவியர் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க எப்படி அவர்களை உருவாக்குவது?

இவை ஆசிரியருக்காக

வரும் இதழ்களில் காண்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி