Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

இந்தியாவில், ஏகப்பட்ட விஷயங்களிலே ஆராய்ச்சி பண்றாங்க. அந்த ஆராய்ச்சிகளிலே உதாரணம் காட்டறபோது, அமெரிக்க நாட்டோட ஒப்பீடு செய்துதான் ஒவ்வொண்ணும் சொல்றாங்க. அப்படி ஒரு ஆராய்ச்சியாளர்கிட்டே பேசிக்கிட்டிருந்த போது, “அது என்ன எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவையே உதாரணம் காட்டறீங்க” அப்படீன்னு கேட்டேன் – அதுக்கு அவர் சொன்ன பதில் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.

“தனி நபர் வருமானம், மக்கள்தொகை, போன்ற விஷயங்களிலே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு. ஆனா, வாழ்க்கை முறைன்னு எடுத்துகிட்டா அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கு. செயற்கை உணவுகள், அடைக்கப்பட்ட உணவுகள்னு சின்ன விஷயங்களிலே தொடங்கி மன அழுத்தம், நுகர்பொருள் பயன்பாடுன்னு பல விஷயங்களிலே அமெரிக்கர்கள் மாதிரியே இந்தியர்கள் வாழறாங்க” அப்படீன்னாரு.

நான் பொதுவாச்சொல்றேன், இது ரொம்ப ஆபத் தான அறிகுறி. அமெரிக்காவிலிருக்கிற வாழ்க்கைச் சூழல், வாய்ப்புகள், வருமானம் போன்றவற்றுக்கும் இந்தியாவிலுள்ள வாழ்க்கைச் சூழல், வாய்ப்புகள், வருமானம் போன்றவற்றுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதுன்னு நமக்கு நல்லா தெரியும்.

இந்தியர்களுடைய உடை, உணவு, பழக்க வழக்கத்திலே மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் இருக்கிறதே பண்பாட்டுக்கு எதிரான விஷயம்னு நாம் எதிர்க்கிறோம். ஆனா பொருளாதாரம், சமூகவியல், தனிமனித அணுகுமுறைன்னு எல்லோமே அமெரிக்கா வின் தாக்கத்தோட இருக்கிறது நல்லதில்ல.

நான் பொதுவாச் சொல்றேன், போதை மருந்துப் பழக்கத்தையே எடுத்துக்குங்க. தனிமனித அளவிலே அது நம்ம உடல் நிலையை பாதிப்பதோட வளர்ச்சியையும் தடுக்குதுன்னு தான் அதை எதிர்க் கிறோம். ஆனா போதைப் பொருள் இளைஞர்கள் மத்தியில் பரவினா அவங்க போராட மாட்டாங்க, கேள்விகேட்க மாட்டாங்க, விழிப்புணர்வு இருக்காதுன்னு சில உலக வல்லரசுகள் நினைக்குது. அதன் விளைவா, வளர்ந்த நாடுகளிலே மறைமுகமா போதைப்பொருள் ஆதரவு பெருகுது. இந்தியாவிலே அரசாங்கம் எவ்வளவோ விழிப்பா கண்காணிப்பில் இருந்தாலும், அதையும் மீறி, போதைப்பொருள் நம்மிடம் இருந்துகிட்டேதான் இருக்கு.

நான் பொதுவாச்சொல்றேன், இந்தியா வுக்குரிய இயல்பான வாழ்க்கை முறையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். குறிப்பா இளைய தலைமுறையை இந்திய வாழ்க்கை முறைக்கு திரும்பக் கொண்டு வரணும்.

எல்லோருமே மேற்கத்தியக் கலாச்சாரத் திலிருந்து இந்திய இளைஞனை மீட்கணும்னு சொல்றாங்க. வெறுமனே மீட்டா போதாது. மேற்கத்தியக் கலாச்சாரத்துக்கு மாற்றா இந்தியாவுக்குரிய வாழ்க்கை முறையை இளைஞர்கள் மத்தியிலே கொண்டுபோய் சேர்க்கணும்.

மண்ணுக்குப் பொருத்தமான வாழ்க்கை, மனதுக்குப் பொருத்தமான உணர்வுகள், சூழலுக்குப் பொருத்தமான சிந்தனைகள் இவை யெல்லாம் இந்திய இளைஞனை சரியான திசையிலே வழிநடத்தும். அதை வீடுவீடா தொடங்க வேண்டிய கடமையும் கட்டாயமும் நமக்குதான் இருக்கு.

இந்திய இளைஞன் இந்தியாவுக்கே!

இந்திய வாழ்க்கை இந்தியர்களுக்கே!!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி