Home » Articles » வழிகாட்ட வருகிறோம்

 
வழிகாட்ட வருகிறோம்


admin
Author:

சாதிக்க விரும்பும் ஒவ்வொரு வருக்கும் விரிந்து கிடக்கின்றன வாய்ப்புகள். தேச எல்லைகளைக் கடந்தும் வளர்ந்திருக் கின்றன. மாவட்ட எல்லைகள் – மாநில எல்லைகள் என்பவையெல்லாம் நேற்றைய கதை. உலகளாவிய உறவுகளே இன்றைய நிலை. ஆங்கில அறிவும், ஆங்கிலத்தில் உரையாடும் வல்லமையும் இன்று அனைவருக்குமே அவசியமான கலை.

ஒருவர் முழுமையான சமூக மனிதராகத் திகழ, வணிக ரீதியில் உறவுகள் உயர ஆங்கில அறிவு அவசியம். ஆங்கில அறிவைப் போலவே, பழகும் முறையும் உடலசைவுகளும், மிக மிக முக்கியம்.

எனவே, ஆங்கில அறிவு, பழகும் கலை, உரையாடல் முறை என்று அனைத்து விதங்களிலும் ஆக்கபூர்வ மான வழிகாட்டுதலைத் தந்து வெற்றியாளர் களை வடிவமைத்து வருகிறது Zeal வழங்கும் Speak Easy.

1991ல் நம்பிக்கை மற்றும் உரையாடல் கலை நிபுணர் திரு.ராஜன் Zeal நிறுவனத்தை சென்னையில் தொடங்கி னார். Zeal நிறுவனத்தின் அங்கமான Speak Easy, மிக நவீனமான முறையில் ஆங்கில அறிவு, உரையாடல், பழகும் முறைகள் போன்றவற்றைப் பயிற்றுவித்து வருகின்றன.

ஒரு மனிதன் வசீகரத் தோற்றம், ஆடை அணியும் முறை, உணவருந்தும் போது பின்பற்றப்பட வேண்டிய மரபுகள், அலுவலகத்தில் நடந்து கொள்ளக் கூடிய முறை, தொலைபேசி உரையாடல் கலை, நேர்காணல்களில் பங்கேற்று வெற்றி பெறும் வழிமுறைகள் என்று சமூக வாழ்க்கையில் சிறப்புடன் திகழ்வதற் கான அனைத்து அம்சங்களும் Speak Easy Centreலில் போதிக்கப்படுகின்றன.

“comfort” என்ற 2 மாத வகுப்பும், “command” என்ற 2 மாத வகுப்பும் இத்தகைய கலைகளில் உங்களை முழுமையாக மிளிரச் செய்யும். பல்வேறு வாழ்க்கை முறையி லிருந்தும், விதம்விதமான பின்னணி களில் இருந்தும் பயிற்சி பெறுவோர் வருவதால் அவரவர் வாழ்க்கை முறைக்கேற்ப பல்வேறு நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

“தாழ்வு மனப்பான்மை” என்னும் நத்தைக் கூட்டுக்குள் சுருங்கியிருந்தவர் களும் கூட, Speak Easy வகுப்புகளுக்குப் பிறகு வெற்றியாளர்களாக விசுவரூப மெடுத்திருக்கின்றனர்.

“மனிதர்களை சந்திக்கவும், சவால் களை எதிர் கொள்ளவும் கற்றுக் கொண்டேன். என் நடவடிக்கைகளை சீரமைத்துக் கொள்ள சில மாற்றங் களை பரிந்துரை செய்தனர். அதன் விளைவாக மிகுந்த நம்பிக்கையுள்ள மனிதனாக என்னை நானே உணர் கிறேன். ஒரு “ZEALIAN” என்று சொல் வதில் மிகுந்த பெருமிதம் கொள் கிறேன்” என்கிறார், இங்கு பயிற்சி பெற்ற திரு. சக்கரபாணி.

“என் இலக்குகளையும், கனவு களையும் எட்ட இணையற்ற உந்து சக்தியாக Zeal திகழ்கிறது. பள்ளியில் படித்த ஆங்கில இலக்கணம் கூட போரடித்தது. ஆனால் Speak Easy சொல்லித் தந்த நடைமுறை இலக்கணம் மிகவும் சுவாரஸ்யமாகவும் எளிதில் புரிந்து கொள்கிற விதத்திலும் இருந்தது” என்கிறார் திருமதி.மல்லிகா.

உரையாடல் கலையில்

பங்கேற்பாளர் களின் ஆர்வத்தை ஊக்குவிக்க குழு உரையாடல் பேச்சுப் போட்டி, வாசக உருவாக்கம், திரைப்படக் காட்சி போன்ற சிறப்பு அம்சங்களும் இடம் பெறுகின்றன.

Zeal வழங்கும் மற்றுமொரு புதுமையான திட்டம், Speak Easy Junior. 10 லி 15 வயதுக்குட் பட்டவர்களுக்கான இந்தப் பயிற்சி வகுப்பு, மகத்தான தொலைநோக்கோடு தொடங்கப் பட்டுள்ளது. இளம் வயதிலேயே தலைமைப் பண்புகள், தனித்தன்மை வாய்ந்த திறமைகள், உரையாடல் கலை, போன்றவற்றைக் குழந்தை களிடம் ஏற்படுத்திவிட்டால் தன்னம்பிக்கை மிக்கவர்களாக அவர்கள் வளர்வார்கள்.

எட்டுபடி நிலைகள் கொண்ட இந்த வகுப்பில்…. இலக்கு நிர்ணயித்தல், திட்டமிடுதல், சிக்கல் தீர்வு, குழு உருவாக்கம், முடிவெடுத்தல் போன்ற நிர்வாகக் கலைகளும், தன்னொழுக்கம், தன்னம்பிக்கை, சுயமரியாதை, முனைப்பு, உற்சாகம், பொறுமை, உறுதி போன்ற வாழ்வியல் குணங்களும், உரையாடல், உறவுகள், கவனம் செலுத்துதல், நினைவாற்றல், படைப்பாக்கம், மேடைப்பேச்சு போன்ற ஆற்றல் மேம்பாடும், ஆங்கில உரையாடல், உணவக, அலுவலக சூழல்களில் நடந்து கொள்ளும் முறை போன்ற வழிகாட்டுதல்களும் போதிக்கப்படுகின்றன.

அது மட்டுமல்ல! என்ஜினியரிங் முடித்த பல பட்டதாரிகள் கூட சரளமாக ஆங்கிலத்தில் பேசத் தயங்குகிற சூழலைப் பார்க்கிறோம். இந்தக் குறையை பள்ளிப் பருவத்திலேயே களைத்து விட்டால் பிற்காலத்தில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் மிகுந்த தன்னம்பிக்கையோடும், திறமையோடும் அவர்களால் பிரகாசிக்க முடியும் என்கிறார் திரு.ராஜன்.

நடைமுறை வாழ்க்கையில் நம்பிக்கையோடு திகழவும், உரையாடல் கலை மூலம் உறவுகள் மேம்படவும் இலக்குகளை எட்டவும் Speak Easy, உற்ற நண்பனாய் உன்னதமான வழிகாட்டியாய் உங்களுடன் வருகிறது.

கோவையில் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் நிறுவனங்கள் Zeal ன் மைய உரிமை பெற்று, தேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்தி வருகின்றன. குடும்பத் தலைவி கள், உயர் அலுவலர்களில் தொடங்கி, சராசரி ஊழியர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதன் பல்வேறு வகுப்புகளில் பயன் பெறுகின்றனர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி