Home » Articles » வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்

 
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்


admin
Author:

தன்னம்பிக்கை மாத இதழுடன் இணைந்து கடந்த பல மாதங்களாக ஈரோட்டில் சுயமுன்னேற்றப் பயிலரங்கம் நடத்தி வரும் வின்னர்ஸ் கிளப், ஈரோடு கடந்த 29.09.02 ஞாயிறு அன்று தனது 25வது வெள்ளி விழாப் பயிலரங்கம் கண்டது.

இந்நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்ற 24 பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சியளித்த பயிற்சி யாளர்களின் கட்டுரைகளைத் தாங்கிய வெள்ளி விழா சிறப்பு மலர் ஒன்றும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

ஈரோடு, கொங்கு கலையரங்கில் உள்ள சக்தி மசாலா ஹாலில், நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏசியன் டெக்ஸ்டைல் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. த.ந. மனோகர் தலைமை தாங்கினார்.

கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் திரு. உ. நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். இதில் 400க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, வின்னர்ஸ் கிளப்பின் நிறுவனர் திரு.சூரியன் “வாழ்வில் முழு வெற்றி” என்னும் பொருளில் உரை நிகழ்த்தினார்.

எனது முதல் வாசகர் எனது பாட்டிதான்!

29.9.02 அன்று வெள்ளி விழாப் பயிலரங்கில் கலந்து கொண்டு டாக்டர் M. இராமலிங்கம் பேசினார். அப்போது அவர், “சுய முன்னேற்றக் கருத்துக்களைப் பேசவும், கேட்கவும் இன்று நூற்றுக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள். இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, நான் கல்லூரி படிப்பு முடித்த பின், எனது சொந்த ஊரான ஊட்டியில் இதுபோல ஒரு வகுப்பு நடத்த விரும்பி எனது நண்பர்களுக்கெல்லாம் சொல்லியிருந்தேன். நிகழ்ச்சியன்று அந்த அறைக்குள் நுழைந்தபோது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. அந்த அறையில் ஒரே ஒருவர் மட்டும்தான் அமர்ந்திருந்தார். அவர் எனது பாட்டி. மனச்சங்கடத்தோடு நான் வெளியேற முற்பட்டபோது, அவர் என்னைத் தடுத்து நான் உன்னுடைய பேச்சைக் கேட்க காத்திருக்கிறேன். நீ பேசு. உன்னுடைய பேச்சைக் கேட்க கூட்டம் வரும் காலமும் வரும் என்று கூறி என்னை உற்சாகப்படுத்தி பேச வைத்தார். அந்த உற்சாகம்தான் என்னை ஒரு பயிற்சியாளனாக ஆக்கியது” என்றார்.

“நான் என் முதல் தன்னம்பிக்கை வகுப்பை என் பாட்டிக்குத்தான் எடுத்தேன்” என்றார் நகைச்சுவையாக.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2002

சிந்தனைத்துளி
நிறுவனர் பக்கம்
வழிகாட்ட வருகிறோம்
வெள்ளி விழா கண்டது ஈரோடு பயிலரங்கம்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே
மனம் விரும்பும் பணம்
மாணவர் பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
இன்றைக்கும் காந்தீயம்
காவிரி: அறுவடை யாருக்கு?
உறவுகள் உணர்வுகள்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
விளம்பர உலகம் !வாய்ப்புகள் அதிகம்!
கேள்வி பதில் பகுதி