Home » Articles » பெற்றோர்கள் பக்கம்

 
பெற்றோர்கள் பக்கம்


admin
Author:

வளமாக்கும் மாற்றங்கள்

அமெரிக்காவின் ஜனாதிபதி லிங்கன்.

சிக்கலான உள்நாட்டுப் போர். நிறைய தீவிரவாதிகளைக் கைது செய்து சிறையிலடைத்தார் கள். லிங்கன் சிறைக்குச் சென்று ஒவ்வொரு தீவிரவாதியிடமும் நேரிடையாகப் பேசுகிறார்.

இதைப் பார்த்த பலரும், “இவங்ககிட்ட யெல்லாம் பேசக்கூடாது அவங்களை அடக்கணும் அழிக்கணும்” என ஆலோசனைகளைச் சொல்ல, லிங்கன் “அவர்களை எதிரிகளாகப் பார்க்காமல், நண்பர்களாகப் பார்த்து நட்பாக்கிவிட்டால் என்ன?” என்றார்.

தீவிரவாதிகளை நண்பர்களாக்குவதில்

லிங்கனின் அளவிற்கு நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால், நடைமுறையில் புதிய மனிதர்களை சந்திக்கும் போதும், புதிய சூழ்நிலை களை எதிர்கொள்ளும் போதும் சில அடிப்படை களை பிள்ளைகளுக்கு புரிய வைப்பது பெற்றோர் களின் கடமை.

படிப்பிற்காக அல்லது வேலைக்காக புதிய இடங்களுக்குச் செல்லும் போது, திருமண வாழ்க்கையின் போது, புதியவர்களுடன் சேர்ந்து செயல்படும்போது போன்ற பல்வேறு புதிய சூழ்நிலைகளில் எந்த அளவிற்கு தம்மனதை சமாளித்து செயல்படுகிறார்களோ அந்த அளவே அவர்களின் முன்னேற்றம் அமையும்.

அதன் முக்கிய அம்சங்கள்:

புதிய மாற்றங்களுக்கு தம் மனதை தயார் செய்தல், அதை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப செயல்படுதல்.

புதிய சூழ்நிலைக்குப் போகும்போது சில குறைகளும், சில நிறைகளும் இருக்கவே செய்யும். நிறைகளை நினைத்து, மகிழ்ந்து, குறைகளை சமாளிப்பதே புத்திசாலித்தனம்.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. மாற்றங் களை எதிர்கொள்ளும்போது ஏமாற்றங்கள் குறைந்துவிடும்.

புதிய மாற்றங்களின் மூலமே புதிய வாய்ப்பு களும், முன்னேற்றங்களும் பிறக்கின்றன. புதிய மனிதர்களை சந்தித்துப் பழகும்போதுதான் புதிய பழக்கங்கள் உண்டாகின்றன.

புதியவர்களை எப்போதும் சந்தேகத்தோடு பார்க்க வேண்டியதில்லை. பெரும்பாலோர் நமக்கு உதவவே விரும்புகிறார்கள்.

ஒரே வகையான வாழ்க்கை மற்றும் உறவு களினால் சலிப்பும் விரக்தியும் ஏற்படுவது மனதின் இயல்பு. அதனால் அவ்வப்போது சில புதிய மாற்றங் களைச் செய்வதன் மூலம் புத்துணர்வை உருவாக்க முடியும்.

புதிய புதிய சூழ்நிலைகளை சமாளிக்கும் போதுதான் மனம் வலிமை பெறுகிறது.

இன்றைய உலகில் சிறந்த தகவல் தொடர்பினால் உலகமே ஒரு கிராமம்போல் எளிதாகிவிட்டது. இவை போன்ற மாற்றங்களின் உண்மைகளை உணர்ந்தால் புதியவைகளை உற்சாகத்துடன் ஏற்பார்கள்.

மேலும், குழந்தைகள் வாழ்க்கை முறைகளை இரண்டு வழிகளில்தான் அமைக்கிறார்கள். ஒன்று பெற்றோர்கள் சொல்கிற வழி. இத்தகைய வழி முறைகள் பெரும்பாலும் சிக்கலில்லாத வழிகள். தாமாக கற்றுக்கொள்ளாமல் பெற்றோர்கள் கற்றுக் கொண்டதை அப்படியே காப்பியடிக்கிற வழி.

இரண்டாவது, புதுமையான வழி. இதில் அவர்களாகவே தனியாக சென்று சில சிரமங்களைச் சந்தித்து, சமாளித்து, அந்த அனுபவத்திலிருந்து எடுக்கிற வழி. இந்த இரண்டாவது வழி முதல் வழியைவிட வித்தியாசமானது. திறமையை வளர்க்கக்கூடியது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2002

ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்
எழுமின்! விழிமின்!
சிந்தனைத்துளி
உறவுகள்.. உணர்வுகள்…
“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?
MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
சிந்தனைத் துளி
பெற்றோர்கள் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
மலரட்டும் நல வாழ்வு
வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?
மகாபாரத்த்தில் நிர்வாகவியல்
வெற்றி
கேள்வி பதில் பகுதி
சிந்தனைத்துளி
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
நிறுவனர் பக்கம்
சிந்தனைத் துளி
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்