Home » Articles » மலரட்டும் நல வாழ்வு

 
மலரட்டும் நல வாழ்வு


யோகி இராஜேந்திரா
Author:


சுமைகளை இறக்குவோம்

கழுதை பொதி சுமக்கும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஒரு சலவைத் தொழிலாளி அழுக்குத் துணிகளை எல்லாம் மூட்டைகளாகக் கட்டி, தனது கழுதையின் முதுகில் தொங்கவிட்டு ஆற்றங்கரைக்கு ஓட்டிச் செல்கிறார். அங்கு ஒவ்வொரு மூட்டையாகத்தான் எடுத்து சலவை செய்கிறார். எல்லா அழுக்கு மூட்டைகளையும் ஒரே சமயத்தில் எடுத்து சலவை செய்யமாட்டார்.

எதனால் அவ்வாறு செய்கிறார் தெரியுமா? அழுக்கு மூட்டைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக இறக்கி வைத்துவிட்டால், உற்சாக மிகுதியால் கழுதை ஓடிவிடும். பிறகு அதைத் தேடிக்கொண்டு பின்னால் நாம் ஓட வேண்டியதாகி விடும்.

முதுகில் உள்ள மூட்டைகளை இறக்கியவுடன் கழுதைக்கு ஏன் உற்சாகம் வருகின்றது என்று சிந்திப்போம்.

ஒரு கழுதைக்கு தனது முதுகில் ஏற்றப்பட்ட சுமைகளை இறக்கி வைக்கும் ஆற்றல் கிடையாது. ஏற்றியவர்தான் இறக்கியும் விடவேண்டும். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் சுமந்தபடியே தான் இருக்க நேரிடும். எனவேதான் முதுகி

லிருந்து சுமை இறங்கியவுடன் விடுதலை உணர்வுடன் வாலை ஆட்டிக்கொண்டு கழுதை ஓட ஆரம்பிக்கின்றது.

நம்மில் பலர் இந்தக் கழுதையின் நிலையில்தான் வாழ்ந்து வருகின்றோம். நமது மனச்சுமைகளை சற்றே இறக்கி வைத்தால் நாம் உற்சாகமாக வாழமுடியும். ஆனால் நம்மால் முடிவதில்லை. கழுதையின் முதுகில் அடுத்தவர்தான் சுமையை ஏற்றுகின்றனர். ஆனால், மனிதனது சுமைகளோ பெரும்பாலும் மனிதனே ஏற்படுத்திக் கொண்டவைதான்.

சுமைகளையும், பொறுப்புக்களையும் வலிய ஏற்றுச் சுமக்கத் தெரிந்த நமக்கு அதை இறக்கி வைக்கவும், அதிலிருந்து விடுபடவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த நுட்பம் தெரியாவிட்டால் வாழ்க்கையே பெரும் சுமையாகிவிடும்.

அது மட்டுமல்ல கழுதையின் வாழ்விலிருந்து நாம் (மனிதன்) மற்றொரு உயர்ந்த பாடத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் சுமப்பது நமது சொந்தப் பிரச்சனைகளை மட்டுமே. ஆனால் பிறரை வாழவைக்கவே கழுதை தன் முதுகில் மூட்டைகளைச் சுமக்கின்றது.

இங்கு நான் சுவாமி விவேகானந்தரின் கூற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“நீ பிறருக்காக உழைக்காத போது என்ன செய்கிறாய் தெரியுமா? உனது சடலத்தைச் சுமந்து கொண்டிருக்கிறாய்”.

இந்த இடத்தில், மனிதர்களைக் காட்டி லும் கழுதைகள் உயர்ந்த இடத்தில் இருப்பதை நாம் உணர முடிகிறது.

“அடசீ கழுதை” என்று யாரையாவது வசைபாடுவதற்கு முன்னால் சற்று யோசிக்க வேண்டும். ஏனெனில் மனிதனை விட சில விலங்கு களின் வாழ்வு மேலான தாக இருக்கின்றது.

எது எப்படி இருந் தாலும் இப்போது சுமை களை இறக்குவோம், உற்சாகமாக வாழத் தொடங்குவோம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2002

ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்
எழுமின்! விழிமின்!
சிந்தனைத்துளி
உறவுகள்.. உணர்வுகள்…
“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?
MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
சிந்தனைத் துளி
பெற்றோர்கள் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
மலரட்டும் நல வாழ்வு
வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?
மகாபாரத்த்தில் நிர்வாகவியல்
வெற்றி
கேள்வி பதில் பகுதி
சிந்தனைத்துளி
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
நிறுவனர் பக்கம்
சிந்தனைத் துளி
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்