Home » Articles » வெற்றி

 
வெற்றி


admin
Author:

ஒவ்வொரு நிகழ்காலமும் மறுநாள் இறந்த காலமாக மாறிவிடுகிறது. அதே போன்றே ஒவ்வொரு எதிர்காலமும் நாளைய தினம் நிகழ்காலமாக மாறி விடுகிறது.

எனவே “நாளை” என்று ஒரு வேலையினையும் தள்ளிப்போடாதே. அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் என்பதற்கிணங்க உனக்கென்று உள்ள பணியினை நீ தான் செய்து முடிக்கப்போகிறாய். நீ விரும்பி அப்பணியினை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிடினும் உன் கடமையினை, குறித்த காலத்தில் செய்து முடிக்க கற்றுக்கொள். வெற்றி உனைத்தேடி வந்தடையும்.

“வெற்றி” என்பது கடைகளிலோ, ஆலயங்களில் தொழுவதாலோ கிடைப்பதன்று. ஒவ்வொருவரின் மனம் தளராத கடின உழைப்பு, விடா முயற்சியின் காரணமாக வந்தடைவதேயாகும்.

சிறிதளவேனும் நேரம் கிடைக்குமாயின் அதனை நல்வழியில் செலவிட கற்றுக் கொள்ளல் அவசியம். படிப்பது, நல்ல சொற்பொழிவு கேட்பது, கருத்துப் பரிமாற்றம் செய்தல் போன்ற வழியில் செலவிட கற்றுக் கொள்ள வேண்டும். சிறிது சிறிதாக கற்றுக் கொள்கின்ற விஷயங்கள் மூலமாக, பிறிதொருநாளில் மலையளவு விஷயங்களைக் கற்றறிந்தவராக நம்மால் மாற முடியும்.

– மா. கிருஷ்ணமூர்த்தி, கோவை -6

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2002

ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்
எழுமின்! விழிமின்!
சிந்தனைத்துளி
உறவுகள்.. உணர்வுகள்…
“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?
MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
சிந்தனைத் துளி
பெற்றோர்கள் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
மலரட்டும் நல வாழ்வு
வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?
மகாபாரத்த்தில் நிர்வாகவியல்
வெற்றி
கேள்வி பதில் பகுதி
சிந்தனைத்துளி
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
நிறுவனர் பக்கம்
சிந்தனைத் துளி
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்