Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

ஆளைத்தேடி ஆஸ்தியைத் தேடு

ஹென்றி போர்டு, காரைக் கண்டுபிடித்தவர். ஆனால், படிப்பறிவில்லாதவர்.

படிப்பறிவில்லாத போர்டு வளர்ந்து கொண்டே வருவதைப் பார்த்து, படித்தவர்களால் அதைப் பெருந்தன்மையுடன் ஏற்க முடியவில்லை.

அவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குறைகளைச் சுட்டிக் காட்டினார்கள். செய்தித்தாள் களில் அவருடைய செயல்களெல்லாம் முட்டாள் தனமானவை என்று எழுதினார்கள்.

முதன் முதலில் காரைக் கண்டுபிடித்து, ஓட வைத்தபோது பின்னோக்கிச் செல்வதற்குத் தேவையான “ரிவர்ஸ் கீர்” இல்லாததால் இதை எப்படி ரோடுகளில் ஓட்டி திருப்பி வந்து சேர முடியும்? என்று கேலி விமர்சனம் செய்தனர்.

அவர் ஒரு முட்டாள் என நிரூபிக்க கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி,

“உனக்கு என்ன தெரியும்?”

“உனக்கு அறிவைப் பற்றி தெரியுமா?”

“என்ன படிப்பு படித்தாய்?”

“ஒரு படிப்பறிவும் இல்லாம பொறியியலில் சாதனை செய்ய நினைக்கின்றாயே உனக்கு என்ஜினியரிங் பற்றியாவது தெரியுமா?”

“மோட்டாரின் அடிப்படையாவது தெரியுமா?”

“சரி, எஞ்சினியரிங்தான் தெரியல வேற ஏதாவதுதான் தெரியுமா?”

இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை வக்கீல் கேட்டுக் கொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த போர்டு சொன்னார்;

“ஜென்டில்மேன், நீங்க கேட்ட கேள்வி களுக்கெல்லாம் ஒரு பட்டனை அழுத்தினால் அடுத்த நொடியில் பதில் சொல்ல ஆயிரம் பேரை வைத்துள்ளேன். அதை நான் படிக்க வேண்டிய அவசியமில்லை” என்று.

வக்கீல் வாயடைத்துப் போனார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நீதிபதி, போர்டை மரியாதையுடன் வழியனுப்பினார்.

“இவ்வுலகில் பிற எந்த ஒரு திறமையையும் விட மக்களைக் கையாளும் திறமைக்காக நான் நிறைய விலை கொடுப்பேன்” என்றார் ராக்பெல்லர்.

போர்டு அன்று துவங்கிய கார் நிலையம், இப்போது உலகெங்கிலும் அவருடைய பெயராலேயே வளர்ந்து வருகின்றன.

படிப்பே இல்லாத திறமையின் அடிப்படை என்னென்ன? ஒரு நிறுவனம் உயர்வடையத் தேவையான பணியாளர்கள் யார் யார்? என்பதை இங்கு ஆய்வு செய்வோம்.

திறமையும் தகுதியும் மிக்கவர்களை எவ்விலை கொடுத்தாவது தக்க வைத்துக் கொள்ளுதல். மாறாக,

எத்தகைய எதிர்ப்புகளிருந்தாலும் தகுதியில்லாதவர் களை வெளியேற்றுதல் மிகவும் அவசியம்.

இது நிறுவனத்திற்கு மட்டுமல்ல. தனிமனித உறவுகளிலும் யாருடைய உறவு தேவை, யாருடைய உறவைத் தவிர்ப்பது என்பதில் தெளிவு அவசியம். தகுதியானவர்களைத் தேர்வு செய்வது மிக முக்கியம்; தகுதியில்லாதவர்களை வெளியேற்று வது அதைவிட முக்கியம்.

தகுதியானவர்களை அமர்த்தி, அவர்களின் திறமைகளை வெளிக்கொள்வதில்தான் நிறுவனத் தின் வளர்ச்சியே அமைகிறது. நிறுவனத்தில் பணிபுரிவர்களை அதன் அங்கமாகக் கருதி செயல் படுதல் அதன் வளர்ச்சிக்கு உதவும்.

நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் சிறப்பினைப் பொறுத்தே அந்நிறுவனத்தில் தகுதி அமையும். பெரிய நிறுவனம், அல்லது பெரிய திட்டம் என்பதாலோ சிறப்பு வந்து விடாது.

ஊழியர்கள் தங்களுடைய உணர்வுகளை (பிரச்சினைகள், நல்ல கருத்துகள்) வெளிப்படுத்து கிற வாய்ப்பு அமைதல் அவசியம். மேலும், ஒவ்வொரு மனிதனும் தங்கள் திறமையினை வெளிப்படுத்தி செயல்படுவார்கள்.

பல பட்டங்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்களாக சான்றிதழ்கள் பெற்றவர்களை விட சாதாரண நிலையில் பலருடன் சேர்ந்து பணி யாற்றியவர்களே திறமையானவர்களாக இருக் கிறார்கள்.

பணியாற்றுபவர்களிடையே தொய்வு அல்லது சோர்வு ஏற்பட்டால் அதை துப்பறியும் பார்வை யோடு ஆய்வு செய்து விவரங் களை சேகரித்து, அவர் களுடைய உற்சாகத்தை வளர்த் தல் மிகவும் முக்கியமானது.

மனிதனின் “சைக்காலஜி” என்னவென்றால் தான் விரும்பு வதை அடையும் போதுதான் மனிதனுக்கு மனச்சோர்வு வருவதில்லை.

சில விஷயங்கள் நமக்குப் பிடிக்காததாக இருக்கலாம். ஆனால், நிறுவனத்திற்குத் தேவையானதென்றால் அவசியமாக செய்து விடுதல் மிக முக்கியமாகும்.

ஒரே மாதிரியான செயல்பாடுகளோ, பழைமையான செயல்பாடுகளோ அல்லது முற்றிலும் நவீனமான செயல்பாடுகளோ அவசிய மில்லை. அந்தந்த சூழ்நிலைக்கேற்ற செயல்பாடு களே முக்கியம்.

திறமையானவர்களிடம், அவர்களுக்கேற்ற வேலைகளையும், பொறுப்புகளையும், இலக்கு களையும், அவர்களை நம்பி ஒப்படைத்தால் அவர்களுடைய ஆற்றலை வெளிக் கொண்டுவர முடியும்.

மேலும், அறிவுத் திறன், முடிவெடுத்தல், சிக்கலை சமாளித்தல், நேர்மை, மனச்சாட்சியுடன் செயல்படுதல், ஊக்கம், எடுத்ததை முடித்தல், தெளிவான மனநிலை போன்ற குணமுள்ளவர்களே நிறுவனத்திற்கு தகுதியான வர்கள்.

நிறுவனத்தலைவர் எளிமையானவராகவும், சிக்கலான விஷயங்களையும் எளிமையாக்குபவராகவும் இருத்தல் அவசியம். பலவீன மான தலைமை, நிறுவனத் தையும் பலவீனமாக்கிவிடும்.

மனித சக்தி மற்ற எல்லாவற்றையும் விட மிகவும் வலிமையானது. அதை நன்கு வெளிப்படுத்துவதில்தான் நிறுவனங்களின் வளர்ச்சி அமையும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2002

ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்
எழுமின்! விழிமின்!
சிந்தனைத்துளி
உறவுகள்.. உணர்வுகள்…
“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?
MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
சிந்தனைத் துளி
பெற்றோர்கள் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
மலரட்டும் நல வாழ்வு
வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?
மகாபாரத்த்தில் நிர்வாகவியல்
வெற்றி
கேள்வி பதில் பகுதி
சிந்தனைத்துளி
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
நிறுவனர் பக்கம்
சிந்தனைத் துளி
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்