Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


admin
Author:

முன்னோக்கிச் செல்லுங்கள்

தன்னம்பிக்கை உள்ளவன் பார்வை முன்னோக்கியே இருக்கும். அவன் வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கியே நடத்துவான். முன்னோக்கிச் செல்வது என்பதே அவனது வாழ்விற்கு அவன் அமைத் துக் கொண்ட சட்டமாகவும் இருக்கும். அதுவே அவனது இலட்சியம்.

முன்னோக்கிய பார்வை தேவை

குதிரைகளுக்கு மட்டும் “சீனி” என்ற முன்னோக்கிப் பார்க்கும் கண்ணாடி போடுகிறோமே ஏன்? குதிரைகள் வேகமாகச் செல்ல வேண்டி யவை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே போனால் அதன் வேகம் தடைபட்டுப் போய் விடும். செல்ல வேண்டிய இடத்தைச் சீக்கிரம் சென்று அடைய முடியாது.

நமது வாழ்க்கையையும் நாம் முன்னோக்கிய தாக அமைத்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சிக்கு அதுதான் வழி. கவனத்தைச் சிதறவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு, ஆங்காங்கே நின்று நின்று போனால், நாம் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர முடியாது.

நிகழ்காலமே உயிருள்ள காலம்

அதேபோல் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்துக்கொண்டே இருப்பதினாலும் பயன் இல்லை. நடந்ததற்காகவும், கடந்ததற்காகவும் வருந்திக்கொண்டிருப்பதும் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாகும்.

தன்னம்பிக்கை உடையவன் ஒருகாலும் கடந்தகாலக் குறைபாடுகளை எண்ணி மறுகிக் கொண்டிருக்க மாட்டான். கடந்தது இனி மீளாது என்பது அவனுக்குத் தெரியும். அதனால் நடந்த வைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். நடப் பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்று ஒரு முடிவுக்கு வருவான். நடந்த தவறுகளிலிருந்து விடு பட்டு அவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பான். முன்னோக்கிச் செல்வதில் நாட்டங்கொள்வான்.

மகிழ்ச்சியானவற்றை நினைவு கூறுங்கள்

முன்னோக்கிச் செல்வதற்கு முன்னர், வந்த பாதைகளை – அனுபவங்களை வருங்கால வளர்ச்சிக்கு உதவியாக எடுத்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உற்சாகமான செயல்பாடுகளாக இருந்தால் சிறிது நேரம் அசைபோட்டுப் பார்க்கலாம், அவ்வளவுதான்.

பழம்பெருமைகளைப் பேசாதீர்கள்

இன்றும் பின்னோக்கிச் செல்பவர்கள் பழம் பெருமைகளைச் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பழம் பெருமை யாருக்கு வேண்டும்? உங்கள் தாத்தாவும் தந்தையும் செய்தவை உங்கள் சாதனைகள் ஆகிவிடுமா? நான் இளமையில்

அப்படி இருந்தேன், வாலிபத்தில் இதைச் செய்தேன், என்று ஒருவர் சொல்வாரானால், அதற்கு என்ன பொருள்? அவரால் இப்போது எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதானே பொருள்.

ஆற்றுநீர் போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

பழம்பெருமை பேசுபவர்கள், வாழ்க் கையைப் பின்னோக்கி மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் நிகழ்காலத்தில் வாழவில்லை, ஏதோ இருக்கிறார்கள் என்று பொருள். இனி, நாம் எதுவும் செய்ய இயலாது என்று, தன்னம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பது பொருள்.

தன்னம்பிக்கை உள்ளவன் ஆற்று நீர்போல ஓடிக்கொண்டே இருப்பான். அவன் ஒருபோதும் குட்டைபோலத் தேங்குவதே இல்லை. வாழ்க்கை தேங்கினால் வளர்ச்சி முடிந்துவிட்டது என்று பொருள்.

சிலர் கை குலுக்குவதைப் பாருங்கள்

ஒருவரை ஒருவர் கை குலுக்குவதைப் பாருங்கள். கையை யார் முன்னோக்கி நீட்டுகிறார்களோ அவர்களைத்தான் கை குலுக்கி வரவேற்கிறார்கள். கையை பின்னால் கட்டிக் கொண்டு நிற்பவர்களின் தோற்றமே நமக்கு எதைப் புலப்படுத்துகிறது? இவர் கை குலுக்குவதற்குத் தயாராகவும் இல்லை, விரும்பவும் இல்லை என்பதுதானே பொருள்?

இத்தகையவர்கள்தாம் பின்னோக்கிச் செல் பவர்கள். இவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் இவர்களது நட்பு நமக்குத் தேவை யானது அல்ல.

கை குலுக்கலில் ஓர் ஆற்றல் பிறக்கிறது.

கை குலுக்குவதை கவனித்துப் பாருங்கள். 60ம் 70ம் கடந்தவர்கள்கூட ஏனோ தானோ என்று இல்லாமல் குலுக்க வேண்டியவர்கள் கையை கெட்டியாகப் பிடித்துக் குலுக்குவார். இரும்புப் பிடிபோல் ஓர் பிடிப்பு இருக்கும்.

அந்த கை குலுக்கலில் ஓர் ஆர்வம், ஓர் உற் சாகம், ஒரு வேகம் பிறக்கும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக, சுறுசுறுப்பாக வாழக் கற்றுக்கொள்; சோம்பல் முறித்துக்கொண்டு இருக்காதே என்பது அந்த கை குலுக்கல் நமக்குக் கற்றுக் கொடுக்கின்ற பாடம்.

மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்

தன்னம்பிக்கை உள்ளவன்தான் கைகளை நீட்டுகிறான். வாய்ப்பை எதிர்நோக்கிச் செல்கிறான். கை குலுக்கல் கிடைக்கிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறான். பிறர் மகிழ்ச்சியையும், தன் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக ஆக்கிக் கொள் கிறான். மகிழ்ச்சி ஆற்றலைப் பெருக்குகிறது. அவன் படிப்படியாக முன்னேறுகிறான்.

கைகளை நீட்டுங்கள்

முன்னோக்கிச் செல்வதுதான் தன்னம்பிக்கை. எழுந்திருந்தால்தான் விடியல். எழுந்து எழுந்து படுத்துக்கொண்டவர்களுக்கு விடியலும் இல்லை, விடிவும் இல்லை. எப்போதும் இருள்தான். அவர் களுக்கு நண்பகல்கூட இருளாகத்தான் தோன்றும். கைகளை நீட்டுங்கள். உங்களுக்கு நிச்சயம் கை குலுக்கல்கள் கிடைக்கும். முன்னோக்கிச் செல்லுங்கள், முன்னேற்றம் வழிதேடி உங்களுக்காக வந்துகொண்டிருக்கிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2002

ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்
எழுமின்! விழிமின்!
சிந்தனைத்துளி
உறவுகள்.. உணர்வுகள்…
“சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?
MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
சிந்தனைத் துளி
பெற்றோர்கள் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
மலரட்டும் நல வாழ்வு
வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?
மகாபாரத்த்தில் நிர்வாகவியல்
வெற்றி
கேள்வி பதில் பகுதி
சிந்தனைத்துளி
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
நிறுவனர் பக்கம்
சிந்தனைத் துளி
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்