Home » Articles » முயற்சி வேதங்கள்

 
முயற்சி வேதங்கள்


ராஜ்கவி
Author:

ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமலே
உழைக்குது தேனி எவ்வாறு? – தன்
உருவம் போலொரு உருண்டையச் சுமக்கும்
ஒரு துளி எறும்பின் திறமென்ன?
அவிழ்மலர் தேடிப் புலர்பொழுதோடி
அலையுது வண்டினம் எப்படியோ?
எவர்எவரின் என்ன பணிதொடர்வேன் என
உலவும் கதிரின் விதி என்ன?
நிலவினைத் தழுவி ஓடிடும் மேகம்
நிறையுது நிறையுது எவ்வண்ணம்?
நிற்பதற் கிங்கே நேரம் ஏதென
நவிலும் தென்றலின் உயர்வென்ன?
அலைகடல் மோதி எழுச்சியைக் கரையில்
எழுதுது கூட்டலாய் எவ்வகையில்?
சீர்குலைத் தாலும் மீண்டும் வலைபெறும்
சிலந்தியின் செயலின் சிறப்பென்ன?
அயர்வுக ளில்லை உழைப்பே எல்லை
எதுவும் என்றும் சோராது!
ஆயிரம் தொல்லை இடரென வரினும்
அவையும் சோம்பிச் சாயாது!
உயர்வுகள் பொழுது போக்கெனப் பாடும்
உன்னதம் பறவைக் குரியதடா!
உலவித் திரியும் விலங்குகள் கூட
உழைப்பதைப் பார்த்தால் புரியுமடா!
முயற்சிகள் போதும் முடிவுகள் ஏது?
முழுதும் தொடரும் வெற்றிகளே!
முன்னேற்றத்தை மூளையில் விதைத்தால்
முளைப்பது உயர்வின் நாற்றுகளே!
இயற்கையில் உள்ள பாடங்கள் படித்தால்
அவையே வாழ்வின் வேதமடா!
இறைவன் காட்டிடும் வழிகளை உணர்ந்தால்
எதுவும் வெற்றியின் பாதையடா!

– ராஜ்கவி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2002

பாபாஜி என்ற மகான்
சிந்தனைத் துளி
மனம் விரும்பும் பணம்
முயற்சி வேதங்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நம்பிக்கை நிறைவே நலமிகு வாழ்க்கை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் பக்கம்…
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றியின் மனமே…
கேள்வி பதில் பகுதி
பொதுவாச் சொல்றேன்
உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!
உள்ளத்தோடு உள்ளம்