Home » Articles » பெற்றோர் பக்கம்…

 
பெற்றோர் பக்கம்…


இராமநாதன் கோ
Author:

குழந்தைகளை அணுகும் முறை

குழந்தைகளை அணுகும் முறை

நாம் எந்த மனநிலையில் குழந்தைகளை அணுகுகிறோமோ அதற்கேற்ப அவர்களின் மனநிலையும் அமையும். இதற்கு மனங்களின் திறனாய்வின் அடிப்படையை சற்று பார்ப்போம்.

பெற்றோர்கள் குழந்தைகளை நான்கு வகைகளாகத் தான் அணுகுகிறார்கள்.

முதல் வகை – “நான்தான் சரி, உனக்கு ஒன்றும் தெரியாது. நான் எல்லாம் அறிந்தவன், உனக்கு என்ன வேண்டும், எப்போது அதைச் செய்ய வேண்டும், என்பதை நான் முடிவு செய்வேன். நீ அதற்கு அடங்கி நான் சொல்வதைப் போல செய்” – என்ற நான்தான் சரி எனும் அடக்குமுறை அணுகுமுறை.

இரண்டாவது வகை – “எனக்குத் தெரிந்தது கொஞ்சம்தான். எங்கள் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தது அவ்வளவுதான். உனக்கு நிறைய அறிவு உள்ளது. உனக்கு சின்ன வயசிலேயே கம்ப்யூட்டர் போன்ற நவீன உலகம் தெரியும். என் அறிவு அந்தளவிற்கு இல்லை” – என்ற நான் சரியில்லை எனும் அடங்கிவிடும் அணுகுமுறை.

மூன்றாவது வகை – “எனக்கு அந்தக் காலத்தில் சரியா யாரும் சொல்லித்தரவில்லை. சரியா வழிகாட்டவில்லை. அதனால் முன்னேறாமலேயே வாழ்ந்துவிட்டேன். நான்தான் அப்படியாயிட்டேன் என்றால் நீயும் அப்படித்தான் இருக்கிறாய். நீ செய்வதும் சரியில்லை. நீயும் உருப்படமாட்டாய்” – என்ற யாருமே சரியில்லை என்ற தாழ்வான அணுகுமுறை.

நான்காவது வகை – “நான் எனக்குத் தெரிந்ததை சரியாகச் சொல்கிறேன். நீயும் உனக்குத் தோன்றுவதைச் சொல். இரு வருக்கும் எது சரியோ அதை ஏற்று இருவரும் செயல்படு வோம்; நாம் முன்னேறுவோம்” – என்ற உயர்ந்த அணுகுமுறை.

இதைத்தான் நானும் சரி – நீயும் சரி ( I am okay; you are okay) மனப்பான்மை என்று சொல்வார்கள். இதுதான் சரியான அணுகுமுறை.

இதன் அடிப்படையில் அணுகும்போது பெற்றோர் – பிள்ளை உறவு தொடர்ந்து சிறப்புடன் வளர்ச்சி பெறும்.

அதற்கு எப்படிச் செயல்படுவது?

பிள்ளைகள் ஒரு தவறைச் செய்தாலும், உன்னுடைய வயதில் நானும் இப்படித்தான் இருந்தேன். ஆனால் வளர்ந்த பிறகு அது சரியில்லை என்று தெரிந்ததும் என்னை மாற்றிக் கொண்டேன். நீயும் உன்னை மாற்றிச் செயல்பட்டால் உனக்கு சிரமம் குறையும், என்ற கோணத்தில் அவர்களை அணுகலாம்.

இப்படி அணுகும்போது, அவர்களுடைய மன உணர்வு களை மதிக்கிறோம் என்ற நல்லெண்ணம் உருவாகிறது. அவர்களுக்கும் தவறை உணரும் பக்குவம் ஏற்படும். வீண் பிடிவாதம் குறைந்து விடும்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் தாம் உயர்ந்தவன்தான் என்ற சுயமதிப்பு தொடர்ந்து வளர்ந்து திறமையானவராக உயர்வு பெறுவார்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2002

பாபாஜி என்ற மகான்
சிந்தனைத் துளி
மனம் விரும்பும் பணம்
முயற்சி வேதங்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நம்பிக்கை நிறைவே நலமிகு வாழ்க்கை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் பக்கம்…
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றியின் மனமே…
கேள்வி பதில் பகுதி
பொதுவாச் சொல்றேன்
உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!
உள்ளத்தோடு உள்ளம்