Home » Articles » வெற்றியின் மனமே…

 
வெற்றியின் மனமே…


இராமநாதன் கோ
Author:

சிறந்த தலைவர் யார்?

ஒரு உண்மைச் செய்தி

சென்னையில் 40 அடி ஆழமுள்ள போர்வெல் குழாயில் ஒரு சிறுவன் விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அவனைக் காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் அக்குழாயில் செலுத்தப்பட்டது.

தீயணைப்பு படையினர் போராடினார்கள்.

நூற்றுக்கணக்கானோர் போராடி, அக்குழாய் அருகில் தோண்டி, இறுதியில் இரண்டு நாட்கள் கழித்து அச்சிறுவனை மீட்டார்கள்.
ஆனால் சிறுவனோ இறந்திருந்தான்.

இச்சம்பவத்திற்கு முன் அங்கு நடந்ததென்ன?
‘என்னப்பா இத்தனை ஆழமான குழாய் திறந்தே கெடக்குது’
‘அதை யாராச்சம் மூடி வெச்சுட்டா பரவாயில்லையே’
‘அது ஒண்ணும் பெரிய வேலையில்லை; பெரிய சாக்குப்பை இருந்தால்கூட அதைக் கட்டி மூடிடலாம்’.
‘யாராவது ஒரு கட்டிட மேஸ்திரி அங்க சுற்றிலும் யாரும் போக முடியாத படி அதைச்சுற்றியும் செங்கல்லை கட்டிட்டா நிரந்தரமா பாதுகாப்பா இருக்குமே’
‘இல்லை ஒண்ணும் வேண்டாம்; அது பக்கத்துல போக முடியாதபடி நாலு முள்ளு கொத்தை போட்டாக் கூட போதுமே’.

இப்படி அவரவர் பேசிக் கொண்டே போனார்கள்; யாருமே எதையும் செய்யவில்லை.

அருகில் விளையாடிக் கொண்டி ருந்த சிறுவன் தவறி விழுந்து விட்டான்.

அதைப் பார்த்த, கேள்விப்பட்ட அனை வரும் குறைபட்டுக் கொண்டார்கள். டரஉ யை திட்டினார்கள். அந்த வழியாகப் போனவர்களைப் பற்றி ஆதங்கப்பட்டார்கள்.

இறுதியில், அச்சிறுவன் இறந்த பரி தாபத்தை அறிந்ததும் ‘இப்படிக்கூடவா? நடக்கும் என ஆவேசமானார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

Somebody would do it.
Anybody can do it.
Nobody dit it.
everybody blamed it.

இதற்கு உதாரணம்தான் அச்சம்பவம்.

அரசியலில் தலைவர்களைப் பார்க்கிறோம், தொழில்துறையில் சில தலைவர்களைப் பார்க்கிறோம், நாம் யாராக இருந்தாலும் தலைமைப் பண்புகளை பெற்றால் தான் நம்மை மற்றவர்கள் ஏற்பார்கள்.

சிறந்த தலைவர் யார்?

ப் உயர்ந்த லட்சியங்களைக் கொண் டவர், போற்றத்தக்கச் செயல்களை செய்பவர்; அதைத்தாமே துவக்கி வைத்து செய்வார். உயர்ந்த பண்புகளை கொண்டவர்.

ப் எதிர்காலத்தைப் பற்றிய தொலை நோக்குப் பார்வை.
ப் தம் செயலில் நம்பிக்கை கொண்டவர்.
ப் தான் எடுத்த முடிவில் மாறாத மனம் கொண்டு செய்து காட்டுபவர்.
ப் சாதனைகளுக்கான பெருமைகளை உடனிருப்பவருக்கு பிரித்தளிப்பார்.
ப் தோல்வியடைந்தால் அதற்குரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.
ப் சுயக் கட்டுப்பாடு உள்ளவர்.
ப் சிந்தனை, சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாக இருக்குமாறு செயல்படுபவர்.
ப் தம் செயலிலேயே குறியாக கவனம் செலுத்துபவர்.
ப் லட்சியத்திற்காக திட்டமும், செயல்பாட்டு முறைகளும் கொண்டவர்.
ப் தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் உணர்ந்தவர்.
ப் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில், தெளிவாகவும் விளக்கமாகவும் செய்பவர்.
ப் தான் எடுத்த செயலில் சோதனைகள் வந்தாலும் துணிச்சலுடன் எதிர்கொண்டு செயல்படுவர். பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண்பவர்.
ப் சரி எது? தவறு எது? எனப் பகுத்தறியும் அறிவாற்றல் கொண்டவர்.
ப் போட்டியாளர்களை வெல்லும் திறமை படைத்தவர்.
ப் பெருந்தன்மை கொண்டவர்.
ப் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு, ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பவர்.
ப் சுமூகமான மனித உறவுகளை வளர்ப்பவர்.
ப் தன்னை காலத்திற்கேற்ப மாற்றி, அதற் கான தகுதிகளை வளர்த்துக் கொள்பவர்.

இத்தகைய தலைமைப் பண்புகளை (Leadership Qualities) ஒருங்கே பெற்றவரால் மட்டுமே மற்றவர்களை தம் சொல்லாலும், செயலாலும் வழி நடத்துகின்ற சிறந்த தலைவராக விளங்கமுடியும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2002

பாபாஜி என்ற மகான்
சிந்தனைத் துளி
மனம் விரும்பும் பணம்
முயற்சி வேதங்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நம்பிக்கை நிறைவே நலமிகு வாழ்க்கை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் பக்கம்…
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றியின் மனமே…
கேள்வி பதில் பகுதி
பொதுவாச் சொல்றேன்
உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!
உள்ளத்தோடு உள்ளம்