Home » Articles » கேள்வி பதில் பகுதி

 
கேள்வி பதில் பகுதி


admin
Author:

மனசுவிட்டுப் பேசுங்க…..

பணமிருந்தால் வசதியாக வாழ முடியும். ஆனால் நமது பெரியோர்களெல்லாம்’ பணத்திற்காக அலையாதே என்கிறார்கள். பணம் சேர்ப்பது குற்றமோ என்று கூட நினைக்கிறேன்.
விளக்கம் தேவை.
(எஸ்.கண்ணன், ரத்தினபுரி)

பணத்தின் முக்கியத்தை யாரும் குறைத்து சொல்லமுடியாது. மனிதனின் தேவைகளை நிறைவேற்றுவது பணம்தான்.

நான் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது.

ஒரு சிலர் பணம் சம்பாதிக்க நினைத்து பணப்பேயாகி விடுகிறார்கள். அதற்காக எந்த தவறையும் செய்கிறார்கள். பிறகு அதன் விளைவுகளால் அவதிப்படுகிறார்கள். இது பேராசையின் விளைவு.

இன்னும் சிலரோ, பணமில்லாத போது பணமில்லையே; எனக்கு இந்த உலகத்தில் எதுவுமில்லையே என ஏங்கி, வேதனைப்பட்டு, வாழ்க்கையையே துயரமாக்கிக் கொள் கிறார்கள். இது நிராசையின் விளைவு.

நேர்மையாக பணம் சம்பாதிக்க ஆசைப் படுவது நியாயமானது. ஒவ்வொருவரும் அதைச் செய்ய வேண்டும்.

ப் பணத்தால், கட்டிடத்தை வாங்கலாம்; குடும்பத்தை வாங்க முடியாது.
ப் கட்டிலை வாங்கலாம்; தூக்கத்தை வாங்க முடியாது.
ப் புத்தகத்தை வாங்கலாம்; ஆனால் அறிவை வாங்க முடியாது.
ப் கடிகாரத்தை வாங்கலாம்; ஆனால் நேரத்தை வாங்க முடியாது.
ப் மனிதர்களை வாங்கலாம்; ஆனால் உண்மையானவர்களை வாங்க முடியாது.
ப் உணவை வாங்கலாம்; ஆனால் ஜீரணத்தை வாங்க முடியாது.
ப் மருந்தை வாங்கலாம்; ஆனால் உடல் நலத்தை வாங்கமுடியாது.
ப் பொருட்களை வாங்கலாம்; ஆனால் மகிழ்ச்சியை வாங்கமுடியாது.
ப் இரத்தத்தை வாங்கலாம்; ஆனால் உயிரை வாங்க முடியாது.
ப் இன்சூரன்ஸ் வாங்கலாம்; ஆனால் பாதுகாப்பை வாங்கமுடியாது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2002

பாபாஜி என்ற மகான்
சிந்தனைத் துளி
மனம் விரும்பும் பணம்
முயற்சி வேதங்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நம்பிக்கை நிறைவே நலமிகு வாழ்க்கை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் பக்கம்…
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றியின் மனமே…
கேள்வி பதில் பகுதி
பொதுவாச் சொல்றேன்
உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!
உள்ளத்தோடு உள்ளம்