Home » Articles » சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்படி?

 
சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்படி?


தயாநிதி
Author:

எப்போதும் கற்றுக்கொள்ளும் தயார் நிலையில் உங்கள் மனதை வைத்திருந்தால், நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளலாம். வாழ்க்கையின் கையிருப்பில் இருப்பதோ ஏராளம். நமக்குத்தான் பெற்றுக்கொள்ள நேரமும் இல்லை.. மனமும் இல்லை.

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், 12 ஆண்டுகள் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றிவிட்டு, சமீபத்தில் விருப்ப ஓய்வில் வந்தவன் நான். மார்கெட்டிங்கில் MBA பட்டம்பெற்றிருந்தாலும், அதிகபட்ச சம்பளம் பெற்றாலும், எனக்கு அத்துறை முழுக்க முழுக்க திருப்தியளிக்கவில்லை.

கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட கவிதை நாட்டம், எனக்கு இருமுறை மாநில முதற்பரிசினைப் பெற்றுத்தந்தது. அந்நாளில், எனது கவிதைகள் கோவை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாயின. தினமணிக் கதிர், தீபம், அன்னம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன.

நான் எழுதிய முதல் சிறுகதையே “ஆனந்த விகடனில்” பிரசுரமாயிற்று. இடையில் நேர்ந்த துறைமாற்றத்தால், அதுவே கடைசியுமாயிற்று.

பள்ளி நாட்களிலேயே சிறப்பாக ஓவியம் வரையத் தொடங்கிய நான்,சமீப நாட்களில் அதனை முறையாக்க் கற்றுக் கொண்டேன். நீர் வண்ணம,பாரம்பரிய தஞ்சை ஓவியம், கண்ணீடி ஓவியம்ம் போன்ற பல ஓவியங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தேன்.

பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேரும் முன், கோவையின் பிரபல விளம்பர நிறுவனத்தில், ஓராண்டு தமிழ் காப்பி ரைட்டராகவும், வாடிக்கையாளர் சேவைப் பணியாளராகும் கடமையாற்றினேன்.

எதற்கிந்த சுயபுராணம்.. என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.

B.com., MBA என்கிற பட்டங்கள், மார்க்கெட்டிங்கில் 12 ஆண்டுகள் பன்னாட்டு நிறுவன அனுபவம், ஓவிய ஆசை, கதை – கவிதை என்கிற இலகிய தாகம், விளம்பர நிறுவனப் பரிச்சயம்…

VRS – ல் வந்துவிட்ட எனக்கு, இனி எந்தத் துறையில் கவனம் செலுத்துவது என்பது விடை தெரியாத கேள்வியானது. என்னால் துஎல்லாம் செய்ய முடியும் என்று யோசித்தேன். எனது மனம் , முழுக்க முழுக்க எதை நாடுகிறது என்பதை என்னால் தெரிந்துகொள்ள இயலிவில்லை. நான் சென்று சேரவேண்டியிலக்கு எது? புரியவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகப் புரிந்தது – எனது மனம் ஒரு துறையில் குவியவில்லை – என்பது மட்டும்!

இதற்கு என்ன செய்வது? யாரிடம் கேட்பது? கற்ற ‘தன்னுதவி நூல்கள்’ எதுவும் விடை தரவில்லை. எங்கே எனது கங்கரை விளக்கு? என் கால்கள் பயணிக்க வேண்டிய சரியா ப ஆதை எது?

இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது, ஏதேச்சையாக மனோவசியம் பற்றி நாளிதழில் விளம்பரம் கண்டேன். நாம் ஏன் உளவியல் ரீதியாய் இந்த மனோவசிய நிபுணரை அணுகி, ஆலோசனை பெறக்கூடாது? என்று யோசித்தேன். சுமார் ஒரு மணிநேர ஆலோசனைக்கு ரூ. 275/- செலவு செய்து, பெற்ற பலன், அவ்வளவாய் திருப்தியளிக்கவில்லை.

மீண்டும் மனம் முழுக்க எண்ணங்கள் ஆக்கிரமிப்பு. ஏதாவது ஆக்கபூர்வமாய் செய்தாக வேண்டும். ஆனால், என்ன செய்வது?

தற்செயலால் ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் பார்க்க வேண்டி, லிப்கோ அகராதியை புரட்டினேன். ஒரு பக்கதில் இருந்த வாசகங்கள் என்ன மிகவும் கவர்ந்தன. இவைதான் அந்த வாசகங்கள்:

“ஒரே ஒரு கருத்தைத்
தெரிவு செய்யுங்கள்.
அதையே உங்கள்
வாழ்வாகத்
தீர்மானியுங்கள். அது
பற்றியே சிந்தியுங்கள்;
அதையே கனவு
காணுங்கள். அதற்காகவே
வாழுங்கள். உங்கள் மூளை, தசைகள்
நரம்புகள்… ஏன்..
உடம்பின் ஒவ்வொரு
பகுதியிலும் அக்கருத்தே
நிரம்பியிருக்கட்டும்.
மற்ற எல்லாக்
கருத்துக்களையும் ஒதுக்கி விடுங்கள்.
இதுவே வெற்றிகான் வழி”

இந்த இணையற்ற மந்திர வரிகளைச்சொல்லயிருந்தவர் வீரத்துறவி விவேகானந்தர்.

சுவாமிகளின் இச்சத்திய வரிகள் துறவிக்கு மட்டுமின்றி வாழ்வின் எல்லா நிலையில் இருப்போர்க்கும் மிகச்சரியாய் பொருந்தும்.

சிதறிய கவனத்தை, ஒரு நிலையில் குவித்து, வெற்ற காண விழைவோர் ஒவ்வொருவருக்கும் இவ்வரிகள் நிச்சயம் கரை காணாத் தோணிக்கு, கரை காட்டும் கலங்கரை விளக்கு.

இவ்வைர வரிகளை பெரிதாய் எழுதி, ஒவ்வொருவரும் தங்களது இல்லங்களில் வைத்து, அனுதினமும் வாசித்து வர, எண்ணம் குவிந்து வலுப்பெறும்! செயல் துவங்கும்.

தன்னம்பிக்கை வாசகர்களாகிய உங்களுடன் இதனைப் பகிர்ந்து கொள்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. உங்களுக்கும்தானே!

 

2 Comments

  1. M.J. SYEDABDULRAHMAN says:

    நன்றி நல்ல சிறப்பான கட்டுரை
    Thank you for Reminding

  2. shaja says:

    ரொம்ப அருமையான யோசனை. i wil fallow it .
    thank you .

Post a Comment


 

 


August 2002

வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
அச்சம் தவிர்ந்ததே ஆனந்த வாழ்க்கை
பெற்றோர் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்….
விளம்பர உலகம்! வாய்ப்புகள் அதிகம்!!
சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்படி?
வெற்றியின் மனமே
பொதுவாச்சொல்றேன்
நிகழ்காலம்
வசீகரமான வாழ்க்கைக்கு….
மனம் விரும்பும் பணம்
கிராமம் கிராமமாய் செல்லுங்கள்… இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள்…!
உள்ளத்தோடு உள்ளம்