Home » Articles » வசீகரமான வாழ்க்கைக்கு….

 
வசீகரமான வாழ்க்கைக்கு….


சாந்தாசிவம்
Author:

எதிரே வரும் உறவினரையோ, நண்பரையோ பார்த்து, “வாழ்க்கை எப்படி இருக்கிறது. என்ன செய்யறீங்க என்றால்… எப்படியோ அதுபாட்டுக்கு போகிறது. நான் என்ன செய்யறேன்” என்ற பதிலைத்தான் பலரிடம் பெரும்பாலும் எதிர்பார்க்க முடிகிறது. வாழ்க்கை அதன் இஷ்டத்திற்கு போகிறது என்பது வேறு. வாழ்க்கையை வாழ்வது என்பது வேறு.

“வாழ்க்கையின் தரம்” எங்கே இருக்கிறது என்றால் நம் மனநிலையில்தான். மனநிறைவு எங்கே? யார் யாரிடம், இருக்கும் என்கிறீர்களா?

அவரவர் கடமையை உணர்ந்து அவற்றில் ஒன்றிப்போய் செய்பவர்களிடம் நிறைந்து காணப்படும்.

நாம் குழந்தையாயிருக்கும்போது, விளையாடுவது, எதையும் உற்று நோக்குவது, சாப்பிடுவது என கவலையில்லாம் ரசித்து சிரித்து மகிழ்ந்தோம். நம்மைப் பார்ப்பவர்களும், “ஆகா, குழந்தைகள் தான் எத்தனை இன்பமாக இருக்கிறார்கள்” எனச் சொல்லி குழந்தைகளின் உண்மை நிலையிலும் அழகிலும் மயங்கிப் போனார்கள்.

ஆனால், வளர வளர நம் தேவைகள் ஆசைகள் பூர்த்தி ஆகாதபோது இவைகள் தேய்ந்து மறைந்து போய்விட்டது. நாளடைவில் இளைமைப்பருவம் முடிந்து திருமணம் என்ற இல்வாழ்கையில் காலடி வைத்து விட்டாலோ சிரிப்பு, சந்தோஷம், அமைதி, பொறுமை இவைகளை வலிய நாமே தொலைத்துவிடுகிறோம்.

காரணம் – யார் பேச்சை யார் கேட்பது என கவணன் மனைவி இருவரின் பிணக்குகளில் கணக்குப் பார்ப்பதும் அதை விஸ்வரூபமாக்கிபார்ப்பதும் தான்.

பொதுவாக, திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டை மாதிரி வெளியே இருப்பவர்கள் உள்ளேயும், உள்ளே இருப்பவர்கள் வெளியேயும் வந்து விட விரும்புகிறார்கள்.

சந்தோஷமாக இருக்கம் தம்பதிகளை (எப்போதாவதுதான் ! ) இளைய தலைமுறையினர் பார்த்து, ஆகா! நாமும் திருமணம் செய்து கொண்டு இப்படி வாழ வேண்டும் என ஆசைப்படுது கோட்டைக்குள் செல்ல விரும்புவது.

வெளியே ஓடிவரத் துடிப்பதன் காரணம், பல தம்பதிகள் ஒத்துப்போய் வாழத்தெரியாமலும், விட்டுக் கொடுத்து வாழ்வதை கௌரவக் குறைச்சலாக எண்ணுவதாலும்தான்.

இருவருக்குள்ளுமே “என்னால்தான் எல்லாமும், என் பேச்சைத்தான் கேட்க வேண்டும்” என்ற அகங்காரத்தின் வெளிப்பாடு அதிகமாக இருப்பதால் வாழ்க்கை என்ற வண்டி வழி தெரியாமல் எங்கெங்கோ செல்கிறது.

சமைப்பது மோசமானால் ஒரு நாள் / ஒரு வேளை தான் நஷ்டம். திருமணம் என்ற பந்தம் மோசமானால் வாழ்நாள் முழுவதும் நஷ்டம்.

விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை என்றுமே பட்டுப்போகாது. “ஈகோ” பிரச்சனை இருவருக்குள்ளும் இருந்தால் இல்லறம் நல்லறமாக இருக்காது.

இந்த வினாடி கோபமிருந்தால் அடுத்த வினாடி வந்த சுவடு தெரியாமல் மறைந்து விடுகிற குழந்தையுள்ளமாக இருக்க வேண்டும். “உபநிஷதமும்” இதைத்தான் குழந்தையாயிரு எனச்சொல்கிறது.

திருமணம் என்பது இருமனம் ஒன்றுபட்டு, அற்புதமாக மணம் பரப்பி, ஆல மரமாக பரந்து விரிந்து கம்பீரத்தைத் தருவது. இருவரை ஒருவராகக் காண்பது.

“உன்னில் நான் என்னைக் கண்டேன். என்னில் நான் உன்னைக் கண்டேன்” என்ற தத்துவத்தின் அடிப்படையைத்தான் “ஈருடல் ஓருயிர்” என்று நம் முன்னோர்கள் “எத்தனையோ நல்வழிகளை சொல்லி இல்லறத்தை இனிமையாக வாழ கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஆண்களுக்கு ஒரு “இரகசியம்” சொல்கிறேன். உங்கள் மனைவி எதையாவது சொல்லி அது உங்களுக்கு தவறாக்பட்டால்.. அதை மறுக்கும்போது சற்றே இதமாக நயம்பட எடுத்துச் சொல்லுங்கள். “நீ சொல்வது ரொம்ப சரி. எப்படித்தான் எனக்குத் தோன்றாதது உனக்கு தோன்றியதோ” என ஆமோதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பின் பாருங்கள் சண்டை கோபம் என்பதையெல்லாம் தேட வேண்டியதாயிருக்கும்.

பெண்களைப் போற்றுங்கள். நம் இல்லறம் என்ற செடியில் நல்லபடி ரோஜஸ மலர்களை பூத்துக் குலுங்கச் செய்பவள் பெண்.

காதல் திருமணமாக இருந்தாலும், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணமாக இருந்தாலும் இரண்டிலுமே கருத்து வேறுபாடுகள் உண்டு.

காதலிக்கும் போது இருக்கும் அமைதி இல்லறத்தில் நுழைந்ததும் கடல் அலையாக ஆர்ப்பரிப்பது அவர்களாகவே ஏற்படுத்திக் கொள்வதுதான். வேறுயாரும் வந்து இவர்கள் அமைதியைக் கெடுப்பதில்லை.

எத்தனை பொருத்தம் பார்த்தாலும் மனப் பொருத்தம்தான் மிக அவசியம். நம் கலாச்சாரப்பட்டி திருமணம் எனபது ஒரு அழகான மாளிகை. ஆழமான அஸ்திவாரத்தால் உறுதியான உயர்வான கற்களால் கட்டப்பட்ட நிலையான கட்டிடம். அதில் வாழும் பந்தங்களும் பலரும் பாராட்டும்படி வாழ்வதுதான் திருமணம். என்ற இல்லறத்திற்கு புனிதத்திற்கு நாம் கொடுக்கும் மதிப்பும் பெருமையும்.

ஆண்கள் மரங்கள். பெண்கள் அந்த மரத்தைச் சுற்றி தழுவும் கொடிகள். குழந்தைகள்தான் அந்தச் செடியில் பூத்துமணம் பரப்பும் மலர்கள். இல்லறம் இப்படி இருந்தால் ஊர் உலகம் நம்மை உவமைகாட்டி உவகை கொள்ளும்.

மனங்கள் ஒன்றுபடாது ஒருவர் மேல் ஒருவர் குறைகள் கண்படி வாழும் வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. வாழ்கை நாம் சந்தோஷமாக வாழ்வதற்கே. கசப்பான உணர்வுகளை காலம் முழுவதும் சந்திக்க அல்ல.

என் தகுதிக்கு கணவன் அமையவில்லை. என் மனைவியும், எனக்கு ஏற்ற பெண் மனைவியாக அமையவில்லை. என கணவனும் வாழ்ந்தால், வாக்கை சுவை குன்றிவிடும். நம் தகுதிக்குத்தான் எல்லாம் அமைந்திருக்கிறது என முழுமனதுடன் ஏற்றுக்கொடு வாழத்தெரிய வேண்டும்.

ஒன்றுமில்லாத்தற்கு குறைகாணும் வாழ்க்கை என்றும் நிறைவைத் தராது. தினமும் கணவன்,மனைவி இருவரும் மனம் திறந்து பேசுங்கள்.பேச்சில் நல்லவற்றிற்கு நன்றியையும் பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள் கோபம், சண்டை என்றால்.. பேசுவதற்கு யாராவது முந்தி சமாதானக் கொடியை உயர்த்திக் காட்டுங்கள். புன்முறுவலும் புத்துணர்ச்சியும் நம் வாழ்வில் இருந்தால் இவையே நம் வாழ்க்கையை வெற்றி உடையதாக ஆக்கும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2002

வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
அச்சம் தவிர்ந்ததே ஆனந்த வாழ்க்கை
பெற்றோர் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்….
விளம்பர உலகம்! வாய்ப்புகள் அதிகம்!!
சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்படி?
வெற்றியின் மனமே
பொதுவாச்சொல்றேன்
நிகழ்காலம்
வசீகரமான வாழ்க்கைக்கு….
மனம் விரும்பும் பணம்
கிராமம் கிராமமாய் செல்லுங்கள்… இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள்…!
உள்ளத்தோடு உள்ளம்