Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

ஒரு விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டா, “அடடா! இதை இப்படி செய்திருக்கலாமேன்னு” தோணும் கேள்விப்பட்டு பலகாலம் ஆகியும் யாருக்கும் ஏதும் செய்யலைன்னா , அது அலட்சியம்னு அர்த்தம்.

நான் பொதுவாச் சொல்றேன். எங்க பார்த்தாலும் மருத்துவர்களுக்கு, தேவை அதிகரிச்சுகிட்டே இருக்கு. +2 முடிச்சதுமே எம்.பி.எபி.எஸ். நுழைவுத் தேர்வுக்குன்னு பல பயிற்சிகள் தரப்பட்டு வருது. ஆனா எம்.பி.பி.எஸ். முடிச்சு மருத்துவ மேல்படிப்பு படிக்க ஆசைப்படற வங்களுக்கு தமிழ்நாட்டிலே பயிற்சி வகுப்புகள் கிடையாது.

பக்கத்திலே இருக்கற கேரளாவிலே அதுக்கு தனி வகுப்புகள் இருக்கு. கேரளா மணவர்களுக்கு வாரம் முழுக்க பயிற்சி. வெளி மாநில மாணவர்களுக்கு வார இறுதியிலே மட்டும் பயிற்சின்னு வைச்சிருக்காங்க. நான் பொதுவாச்சொல்றேன். அந்த மேல்நிலைப் பயிற்சி வகுப்பை தமிழ்நாட்டிலே தொடங்க நமது அரசாங்கமோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளோ முன்வரலை.

பல மாணவர்கள், கேரளா வரை போய் பயிற்சி வகுப்புகளிலே கலந்துகிட்டு வர்றாங்க. இது ஒருபுறம்.

மரம் வளர்ப்போம் மரம் வளர்ப்போம்னு சொல்றாங்க. மரக்கன்றுகளும் கிடைக்குத். ஆனா, மரக்கன்றுகளை காப்பாற்ற இரும்பு வேலி தேவைப்படுது. அதுக்கு நிறைய பணம் தேவைப்படுது. மரக்கன்று வைக்கணும்னு நினைக்கறவங்க, வேலி வாங்கற செலவை நெனைச்சு வெலகிடறாங்க. “சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணம்” என்கிற கதைதான். நான் பொதுவாச்சொல்றேன், இந்த நாட்டிலே இரும்பாலைகள் எத்தனையோ இருக்கு.

ஆலைகள் எல்லாம் ஆண்டுக்கு இவ்வளவு இரும்பு வேலிகளை உற்பத்தி பண்ணி தன்னிச்சையா, அரசாங்கத்துக்குத் தரலாம்னு ஒரு திட்டத்தை அரசாங்கமோ, ஆலைகளோ கொண்டு வந்தா சமூகத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

நான் பொதுவாச் சொல்றேன், சமூக அக்கறைங்கறது நிர்வாகத்திலே இருக்கற எல்லாருக்கும் வந்தாதான் பொதுவான வளர்ச்சி ஒரு நாட்டுக்கு கிடைக்கும்.

மருத்துவ வளர்ச்சி, தரமான வல்லுனர்களின் வளர்ச்சிலேதான் அடங்கியிருக்கு. அதை தள்ளிப்போடறதிலேயோ, தாமதப்படுத்தறதிலேயோ அர்த்தம் கிடையாது.

பயிற்சியின் அவசியத்தை மாணவர்கள் உணர்றாங்க! மாநிலம் உணரணும். வேலிகளின் அவசியத்தை ஆலைகள் உணரணும்.

உணர்ந்து பார்ப்பதே உயர்வுக்குப் பாதை தேவைகள் அறிவதே தேசத்தின் வேலை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2002

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நல்ல விதைகளைத் தூவுவோம்?
மனசுவிட்டுப் பேசுங்க
பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே…!
உறவுகள் உணர்வுகள்
ஆக்க மனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…
வாணவராயர் சிந்தனைகள்
மனம் விரும்பும் பணம்
அனுபவமில்லாதவர் அப்துல்கலாம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
பொதுவாச் சொல்றேன்
உள்ளத்தோடு உள்ளம்