Home » Articles » ஓ அன்றில் பறவைகளே…!

 
ஓ அன்றில் பறவைகளே…!


கந்தசாமி இல.செ
Author:

தங்கம்

என் முகவாட்டத்தைக் கண்டு “ஏன் என்னைப் பிடிக்கவில்லையா” என்றார்.

“நோ. நோ.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என் சிரிப்பில் அசடு வழிந்தது. “அப்பா, அம்மா இருக்கிறார்கள். அதோடு என்னுடைய நிலையைச் சொல்லிவிடத் துடித்தேன்.

“என்ன அதோடு அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

யாரோ தெரிந்தவர்கள் வரவே, புறப்பட்டு விட்டோம்.

“உன் விருப்பமில்லாமல் தொடமாட்டேன். ஆனால், நீ இல்லாவிட்டால் மீண்டும் நான் கெட்டு விடுவேன். உன் விருப்பம் போல் செய்” என்றார்.

கார் வீட்டை நோக்கி வேகமாகச் செல்ல என் உள்ளம் அதைவிட வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. அன்று அவர் அம்மா எங்கோ வெளியில் சென்று இருந்தார்கள். வரச் சற்று தாமதம் ஆகி இருந்தது. அதற்குள் பலமுறை என் அறைக்கு வருவதும் போவதுமாக இருந்தார்.

“வடபழனி கோவிலுக்குப் போயிருந்தேன். வர நேரமாகி விட்டது” என்று வந்தார்கள் அம்மா. மகனுக்குத் திருநீறு கொடுத்துவர மேலே சென்றார்கள். மகன் தன் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டார்போல் இருந்து. அம்மா நேரே என் அறைக்கு வந்தார்கள்.
“தங்கம், தங்கம்” என்று உச்சி மோந்தார்கள். என்னம்மா சேகர் உன்னிடம் ஏதாவது சொன்னானா?” என்றார்கள்.

“சொன்னார்” என்றேன்.

“நீ என்னம்பா சொன்னாய்” – நான் வாய் திறக்கவில்லை.

“எங்க குடும்பத்தை நீதானம்மா வாழவைக்கணும். நீ காலெடுத்து வைத்தவுடனே எல்லாம் நல்லதா நடக்குது..” என்னென்னவோ சொன்னார்கள்.

கார் மீண்டும் வட பழனிக்குப் புறப்பட்டது. இரவு நெடு நேரம் கழித்துத் திரும்பினோம்.

நான் என்ன செய்வேன்? என் நிலை என்ன? மறுநாளில் இருந்து அம்மாவின் கண் காணிப்பில் கொஞ்சம் தளர்வு கூட இருந்தது. இதுவரையில் காரில் பின்னால் உட்கார்ந்து செல்வேன். இப்பொழுது வற்புறுத்தி முன்னால் உட்காரச் சொன்னார். நான் மறுத்தபோது தன் நண்பர்களைப் பின் சீட்டில் உட்கார வைத்து, என்னை முன்னால் உட்கார வேண்டிய நிலைக்கு ஆளாக்குவார்.

அன்று அம்மா என்னையும் உடன் அழைத்தார்கள். போயிருக்கலாம். என்னுடைய கெட்ட நேரம் “நீங்கள் மட்டும் போய் வாருங்கள். உங்கள் மகனும் வருகிறார் அல்லவா?” என்றேன்.

“ஆம் என்றார்கள். வாரியார் சொற்பொழிவு – சீதா கல்யாணம் என்கிறார்கள்.

அம்மாவை விட்டுவிட்டு, கார் இருபது நிமிடத்துக்குள் மீண்டும் வந்துவிட்டது.

“எட்டு மணிக்குத்தான் சொற்பொழிவு முடியும். அது வரை அங்கு இருக்காவிட்டால் என என்று வந்துவிட்டேன்.” என்று கூறிக்கொண்டே என் அறைக்குள் புகுந்தார்.

நான் எழுந்து நின்றேன். என் கைகளைப் பற்றினார். மெதுவாக விடுவித்துக் கொண்டேன். “நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் பொறுமையாக்க் கேட்பீர்களா?” என்றேன்.

நாள் வேளுடன் பழகியதெல்லாம் சொல்லிவிட வேண்டும், என்று தொடங்கினேன். அதற்குள், “நீ என்னை வெறுக்கிறாயா?” என்றார்.

“நான் முதலில் அவரை விரும்பிவிட்டேன் உள்ளத்தளவில், ஏன்? உடலளவால் கூட நான் அவருக்கு உரியவளாகி விட்டேன்” என்றேன்.

“இல்லை, நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய். நீ கெட்டிருக்கவே முடியாது. உன்னுடைய பண்பு அப்படிப்பட்டதல்ல. எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

“இல்லை, நான் அவருக்கு…” என்னைப் பேசவிடவில்லை.

“இப்போது தற்காலிகப் பாதுகாப்பிற்காக ஒரு பெரும்பழியை உன்மீது நீயே சுமத்திக்கொள்கிறாய். அப்படியே தவறு நேர்ந்திருந்தாலும், அதை நான் தவறாகவே கருதமாட்டேன். நீ என்னுடையவள், எனக்கே உரியவள், நீயின்றி நான் வாழ முடியாது..”

அவருடைய காம்ம் தலைக்கு ஏறி இருந்தது. என் அனுமதிக்காக அவர் கொஞ்சமும் காத்திருக்கவில்லை. மாடிக்கு என்னை அழைத்து – இழுத்து – இல்லை தூக்கிச் சென்றார். நான் வேண்டாங்க…. எவ்வளவோ போராடினேன்.

என்ன போராடினால் ஆண்மைக்குப் பெண்மை தோற்றே விடுகின்றது. ஆண்மை பெண்மையை அன்பால் அடிபணியவைக்க முடியவில்லை என்றாலும் ஆற்றலால் தோற்கடித்தே விடுகின்றது.

மணி எட்டு அடித்தது. அவர் அவசர அவசரமாகக் காரை எடுத்துக் கொண்டு அம்மாவை அழைத்துவரச் சென்றார். அம்மா வந்தார்கள். வந்ததும் அவர்கள் மடியில் விழுந்து கதறினேன்.

“சீதா கல்யாணம் முடிந்துவிட்டது” என்றேன். மகனைப் பார்த்துக் கோபித்துக் கொண்டார்கள். அந்தத் தாய்க்கு வந்த சீற்றம் “அவரை அறைய கையை ஓங்கியபோது நான் தடுத்துவிட்டேன்.

“அவசரப்பட்டு எல்லாவற்றையும் கெடுத்துவிட்டாயே” என்றார்கள். அவர்கள் கண்களிலும் நீர் துளித்தது.

“ஒரு பெண்ணின் உள்ளத்தைப் புரிந்து கொள்ள முடியாத முரட்டு மனிதனாக ஆகிவிட்டாயே? படித்தும் என்ன பயன்?” என்று ஏதேதோ பேசினார்கள்.

மறுநாள் மூவரும் கிராமத்துக்குச் சென்றோம். திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. என் தந்தை இதை எதிர்பார்த்து தான் அங்கே வற்புறுத்தித் தங்கவைத்தார் என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன். என் தாய், பாவம் அப்பாவி! இதெல்லாம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது. தெரிந்தாலும் அவர் கருத்தை யார் கேட்கப் போகிறார்கள்.

எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று, ஒரு நாள் வேள் எனக்குச் சொல்லி அனுப்பிவிட்டு வந்தார். கடைசியாக ஒருமுறை எல்லாவற்றையும் விளக்கிச்சொல்லிவிட எண்ணினேன். எல்லாம் முடிந்துவிட்டது பிறகு விளக்கம் என்ன வேண்டிகிடக்கிறது?

மீண்டும் அதே புன்னை மரத்தடியில்தான் சந்தித்தோம்.அந்த நாள் – இனி வரவே வேண்டாம்.

“திருமணமாமே” என்றார்.

“ஆம்” என்றேன்.

“என்னிடம் பழகியதெல்லாம்? என்னை விரும்பியதெல்லாம்?” என்னென்னோ சொன்னார்.

அவர் குரலில் துக்கம் தொனித்தது. நான் மட்டும் மகிழ்ந்தா இருந்தேன்?

“இறுதியாக ஒரு கேள்வி, என்னுடன் வர விரும்புகிறாயா இல்லையா?”

“விருப்பமில்லை” இது எனது பதில்.

அதற்குப் பிறகும் அவரது வார்த்தைகள் என் நெஞ்சைத் துளைத்தன. ஆனால் நான் பதில் சொல்லாமலேயே இடத்தை விட்டு நகர்த்த போது என்னையே நான் விரும்பவில்லை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2002

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நல்ல விதைகளைத் தூவுவோம்?
மனசுவிட்டுப் பேசுங்க
பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே…!
உறவுகள் உணர்வுகள்
ஆக்க மனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…
வாணவராயர் சிந்தனைகள்
மனம் விரும்பும் பணம்
அனுபவமில்லாதவர் அப்துல்கலாம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
பொதுவாச் சொல்றேன்
உள்ளத்தோடு உள்ளம்