Home » Articles » வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…

 
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…


admin
Author:

ஒருசில வளர்ந்த நாடுகளில் சென்று படிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய அல்லது வழிகாடுதல்களை நல்கிடக்கூடிய நிறுவனங்கள் குறித்த தகவல்கள் மற்றும் சில சிறப்புச் செய்திகளையும் இனி காண்போம்.

அமெரிக்காவில் படிக்க

அமெரிக்கா சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கான அத்தியாவசிய தகவல்களையும் குறிப்புகளையும், சில பயற்சிகளையும் அளிப்பதற்காக “இந்தியாவில் அமெரிக்கக்கல்வி அறக்கட்டளை (U.S. Educational Foundation in India) என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

நூலகம்

தமிழகத்தின் தலைநகர் சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில் இந்த அமைப்பின் நூலகம் உள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பட்டியல், அங்கு உள்ள பல்வேறு படிப்புகள், அதற்குரிய சேர்க்கை ( Admission) விதிமுறைகள், அவை அளிக்கும் நிதியுதவி பற்றிய விவரங்கள், மற்ற வசதி வாய்ப்புகள் ஆகியவற்றை இந்த நூலகத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த நூலகத்தில் உறுப்பினராக ஒரு மதக் கட்டணம் ரூ. 150/-, ஆண்டுக் கட்டணம் ரூ. 500/- செலுத்த வேண்டும்.

வழிகாட்டி நூல்கள்

இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களில் நமக்குத் தேவையான பக்கங்களை படிபெருக்கிக் (Xerox) கொள்ள பக்கதிற்கு ரூ. 2. வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். TOEFL, SAT, GRE, GMAT போன்ற தேர்வுகளை எழுதிட நம்மை தயார் செய்து கொள்ளத் தேவையான வழிகாட்டி நூல்கள் இங்கு உள்ளன. இத்தேர்வுகள் பற்றிய மற்ற விவரங்களையும் இங்கு அணுகி அறியலாம்.

அமெரிக்காவில் மேற்படிப்புகள் குறித்த மென்பொருள்கள், தொலைதூரக் கல்வி விவரங்கள்,மேற்படிப்புகள் பற்றிய ஒளி, ஒலி நாடாக்கள் (Video and Audio Cassettes) இங்கு இருக்கின்றன.

திங்கள் முதல் வெள்ளி வரை

அரசு விடுமுறை தினங்கள் தவிர மற்ற சமயங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, பிற்பகல் 1 மணியிலிருந்து 4.30 வரை நூலகம் திறந்திருக்கும்.

சான்றிதழ் சான்றொப்பம்

பல்வேறு மதிப்பெண் சான்றிதழ்களுக்கு United States Educational Foundation in india என்னும் இந்நிறுவனம் சான்றொப்பம் அளிக்கிறது.

சான்றிதழ்களுக்கு சான்றொப்பம் பெற விரும்புவோர் அதன்மூலம் சான்றிதழ்களை (Original Certificate) எந்த உறையில் அவற்றை வைத்து அனுப்ப எண்ணுகிறீர்களோ அதனையும் இணைத்துக்கொடுக்க வேண்டும். ஒரு சான்றொப்பத்திற்கு ரூ. 5 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

சான்றொப்பம் இடப்பட வேண்டியபடிகளை நாம் வேறு இடத்தில் படியெடுத்து (Xerox) கொடுக்கக்கூடாது. இந்த மையத்திலேயே படியெடுக்கபட்டு சான்றொப்பம் அளித்து, உறையிலிட்டு ஒட்டித் தரப்படும். அவர்களிடம் அளிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் கொடுக்கப்படும்.

வகுப்புகள்

படிப்புக்காக அமெரிக்கா செல்ல இருக்கும். மாணவர்களுக்கு அடிப்படைச் செய்திகளைக் கற்பிக்கும் வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 11 மணி வரை அமெரிக்கப் பல்கலைக்கழக்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த ஒளி (Video) காட்சிகள் நடைபெறும். பிறகு பிற்பகல் 1 மணி வரை மாணவர்களின் ஐயங்களைத் தெளிவிக்கும் பொருட்டு அவர்களின் கேள்விகளுக்கு கல்வி ஆலோசகர் பதில் அளிப்பார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் புதன்கிழமைஏ தங்கள்பெயரை முன் பதிவு செய்து கொள்வதன் மூலம் தங்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும்.

பட்டபடிப்பு மாணவர்க்கு

இளநிலைப்ப பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பை பயில அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கு விண்ண்பிப்போர்க்குத் தனியாகவும் முதுநிலை பட்டக்கல்விக்கு முனைபவர்க்குத் தனியாகவும் வழிகாட்டும் வகுப்புகள் நடத்தப்படும்.

ஒருநாள் முழுவதும் இவ்வகுப்புகள் நடைபெறும். இதில், அமெரிக்க வாழ்க்கை முறை, அங்குள்ள கலாச்சாரம், கல்வி முறை ஆகியன குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். பொதுவாக ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலும், பின்னர் டிசம்பரிலும் இந்த வகுப்புகள் நடத்தப்படும்.

இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுகிறது. விபரங்கள் அறிய பின்வரும் முகவரியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

முகவரி

United States Educational Foundation in india, American Consulate Building, Anasalai, Chennai – 600 006. Telephone L 825796, 827340.
Email: usefimas@md2.vsnl.net.in

மேலும், அமெரிக்கக் கல்வி நிறுவன்களில் சேர நடத்தப்படும் தேர்வு குறித்த விபரங்களுக்கு பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Medical College Admission Test (MCAT), MCAT Program office, P.O. Box 4056, lowa City, IA 52243 – 4056, (319) 337-1357, http://wwwaamc.org/stuapps/admiss/mcat/

Dental Admission Testing Program (DAT), 221, East Chicago Avenue, Suite 1840, Chicago IL 60611-2678 (312) 4402689. http://www.ada.org/prac/careers/dat-01.html.

Veterinary College Admission Test (VCAT), The Psychological Corporation, 555 Academic Court, San Antonio, TX 7824-2498, (210) 921-8795.

Optometry Admission Testing Program (OAT). 211 East Chicago Avenue, Chicago IL 60611- 2678 (312) 440-2693.

Pharmacy College Admission Test (PCAT), The Psychological Corporation, P.O. Box, 91581, Chicago Il 60693. (210) 921-8797.

Law School Admission Test (LSAT0 LSDAS, Lawservices, Box 2000, 661, Penn Street, New town, PA 18940-0998, (215) 968- 1001, http://www.isas.org.

தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2002

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நல்ல விதைகளைத் தூவுவோம்?
மனசுவிட்டுப் பேசுங்க
பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே…!
உறவுகள் உணர்வுகள்
ஆக்க மனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…
வாணவராயர் சிந்தனைகள்
மனம் விரும்பும் பணம்
அனுபவமில்லாதவர் அப்துல்கலாம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
பொதுவாச் சொல்றேன்
உள்ளத்தோடு உள்ளம்