Home » Articles » வாணவராயர் சிந்தனைகள்

 
வாணவராயர் சிந்தனைகள்


admin
Author:

வாசகர்களின் கேள்வியும் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்களின் பதில்களும்

தோல்வியே வெற்றியின் முதல்படியாக, அமைந்ததுண்டா உங்களுக்கு….

– புன்னகை சிவா, சமத்தூர்

வெற்றி தோல்வி இரண்டும் அனைவரது வாழ்க்கையிலும் மாறி மாறி வருகிற இயல்பான ஒன்று. இரண்டையும் சரியாகப் புரிந்து கொண்டு சமமாகப் பாவித்து, அதன் மூலம் ஒரு தெளிவைப் பெற்றுவிட்டால் அவை இரண்டுமே வாழ்க்கைக்கு உதவும்.

தோல்வியின் மூலமாக ஒரு புதிய அனுபவத்தைப் பெறுகிறோம்.எனப்புரிந்துகொண்டு, மேலும் முயன்று பல சாதனைகளைப் புரிந்த பலரை நாம் அறிவோம்.

கடின உழைப்பும், விடா முயற்சியும்,தன்னம்பிக்கையும் எடுத்துக்கொண்டு லட்சியத்தில் முழுமையான ஈடுபாடும் இருப்பின் சவால்களை எல்லாம் சந்தர்ப்பங்களாக மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.

காலம் காலமாக அனைத்து அறிஞர்களும் முன்னேற்றச் சிந்தனையாளர்களும் இளைஞர்களை முன்னேற்றுவதிலேயே கவனம் செலுத்தியும் இளைஞர் சமுதாயத்தில் இன்னமும் விழிப்புணர்வு பெறாமல் லட்சியம் இன்றி வாழ்பவர்களின் விடிவு காலம் எப்போது?

– சி. பெரியசாமி, எரிசின்னம்பாளையம்

அறிஞர்களது முன்னேற்ற சிந்தனைகள் இளைஞர்களைப் பல வகையிலும் விழிப்புணர்வு பெறச் செய்து, விவேகமாக சிந்தித்து செயல்பட உதவியிருக்கிறது. இருப்பினும் தாங்கள் கூறியதுபோல் பெரிய அளவில் ஒரு விழிப்புணர்வு அவர்களிடையே வராதது ஒப்புக் கொள்ளப்பட வேண்டியதுதான்.

அதற்குக் காரணம் ஒரு பக்கம் அறியாமை, இன்னொரு பக்கம் இளைஞர்களைத கவனத்தை திசை திருப்பும் வகையில் அவர்களது முழு ஆற்றலையும்,வெளிப்படுத்த இடயூறாக இருக்கின்ற பல்வேறு மலிவான சாதனங்கள். இத்தனை இடர்பாடுகளுக்குக்கிடையேயும் நம் இளைஞர்களிடையே ஒரு நல்ல மனமாற்றமும் ஆக்கபூர்வமான சிந்தனைகளும் எல்லாவற்றுக்கும் மேலாக வளர்ந்து வரும் போட்டிகளிடையே கால சூழ்நிலைக்கேற்பத் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்கின்ற உணர்வு அதிகரித்து வருவதையும் நாம் பார்க்க முடிகின்றது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2002

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நல்ல விதைகளைத் தூவுவோம்?
மனசுவிட்டுப் பேசுங்க
பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே…!
உறவுகள் உணர்வுகள்
ஆக்க மனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…
வாணவராயர் சிந்தனைகள்
மனம் விரும்பும் பணம்
அனுபவமில்லாதவர் அப்துல்கலாம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
பொதுவாச் சொல்றேன்
உள்ளத்தோடு உள்ளம்