![]() |
Author: அப்துல்கலாம் ஏ.பி.ஜே
Jul 2002 | Posted in Cover Story |
“அடுத்த குடியரசுத் தலைவர், திரு.ஏ.பி.ஜே. அப்துல்கலாம்” என்பதை இந்தியா முடிவு செய்யப்போகும் நேரத்தில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு அவர் பொருத்தம் என்கின்றனர். சிலர் என்ன அனுபவம் இருக்கிறது? என்று கேட்கின்றனர் சிலர்.
முதல்தரப்பின் கருத்துப்படி அணு அறிவியல் விஞ்ஞானியாய், அடுத்த தலைமுறை மீது அக்கறை கொண்ட பொது மனிதராய், தனக்கென்று குடும்பமோ குடும்பப் பொறுப்போ இல்லாதவராய், புகழும், பெயரும் தன் பணிகளை பாதிக்க விடாத அளவு சமநிலை கொண்டவராய் காட்சி தருகிறார் அப்துல்கலாம்.
“20202ல் இந்தியா வல்லரசாகும்” என்று சொன்னதோடு நில்லாமல், அதற்கான வழிமுறைகளையும் வகுத்து இந்த தேசத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துகிறது.
இவையெல்லாம் ஒரு குடியரசுத் தலைவருக்குப் போதுமா?
அவருக்கு அரசியல் அனுபவம் இருக்கிறதா? என்பது கேள்வி.
இந்தியாவில் அரசியல் என்பது, ஒவ்வொரு தனிமனிதனுக்கேற்ப தனித்தனி பொருள் தரும் அளவுக்கு விசித்திரத்தன்மை வாய்ந்தது.
டீக்கடையில் அமர்ந்து பேப்பர் படிகும் சிலருக்கு, அது அரட்டை கட்சி அலுவலகத்தில் இருந்து பேசும் தொண்டனுக்கு, தன் தலைமை மீதான மயக்கம், எதிர்க்கட்சி மீதான வெறுப்பு.
சட்டமன்றத்தில் அமைச்சரவையில், ஆளுநர் மாளிகையில் என்று சூழலுக்கு சூழல், ஆளுக்கு ஆள் அரசியல் என்ற சொல்லின் அர்த்தம் மாறுபடுகிறது.
படிப்பறிவில்லாத பாமரன் கூட, தவறான ஒரு திட்டமோ, சட்டமோ அறிமுகம் ஆனால், அதனை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்வதை நாம்பார்க்கிறோம். எனவே அரசியல் என்பது இந்தியாவில் அன்றாட வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயம்.
அரசியலோடு நேரடித் தொடர்பில்லாத சராசரிக் குடிமகனின் கவனத்திற்கு அரசியல் நிகழ்வுகள் அத்தனையும் வருகிறது என்றால், நாட்டின் தலைமை விஞ்ஞானிக்கு இவை தெரிந்திருக்கும் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும்.?
நெருக்கிக் கேட்டாள், “அப்துல்கலாமுக்கு அரசியல் அனுபவம் கிடையாது” என்பார்கள்.
அதாவது கட்சி அரசியலில் அவருக்கு அனுபவமில்லை. மக்கள் நலன் என்பதொரு பக்கம் இருக்க, தன் கட்சியில் கருத்தை மட்டும் கண் மூடித்தனமாக ஆதரிப்பதில் அவருகு அவருக்கு அனுபவமில்லை. எனவே, கோஷ்டி அரசியல், ஆதாய அரசியல் போன்றவற்றில் அவருக்கு அணு அளவு கூட அனுபவமில்லை.
எந்த முன் முடிவும் வைத்துக்கொள்ளாத ஒது மனிதர் ஒருவர் முதல் முதலாக குடியரசுத் தலைவராகிறார். குறிப்பிட்ட கூட்டணி அவர் பெயரை முன் மொழிந்தாலும், அவர் தார்மீக அளவில் பொது வேட்பாளர் தான்.
மக்களுக்குப் பாதகமான விஷயங்களில் அவருக்கு அனுபவமில்லை.

July 2002















No comments
Be the first one to leave a comment.