Home » Articles » நமது அதிர்ஷ்ட தேவதை

 
நமது அதிர்ஷ்ட தேவதை


வேங்கை மார்பனார்
Author:

அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என அனைவரும் பேசுவதைப் பார்த்திருப்பீர்கள். யாராவது ஒருத்தர் உயர்நிலையை அடைந்தால், அவரைப் போன்றமற்றவர்கள் கூறுவது என்ன? கொடுத்து வைச்சவன்யா, அதிர்ஷ்ட தேவதை அள்ளிக் கொடுத்துவிட்டாள் என்பதுதான்.

இந்த அதிர்ஷ்டம் என்றால் என்ன? அதிர்ஷ்ட தேவதை எப்படிப்பட்டவள், யாருக்கு அவள் அள்ளி, அள்ளிக் கொடுப்பாள் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். அதைத் தெரிந்து கொண்டால், நாமும் அதிர்ஷ்டசாலி ஆகிவிடலாம். அந்த தேவைதை அள்ளிக் கொடுப்பதை பெறலாம் அல்லவா?

“திருஷ்டம்” என்றால் கண்ணால் பார்க்க்கூடியது. அதிர்ஷ்டம் என்றால் கண்ணால் காண முடியாது. கண்ணால் காண்பட முடியாத சக்தி எவனொருவனுக்கு உதவி செய்கிறதோ, அவன் வாழ்வில் வெற்றி அடைய முடியும். அவனே அதிர்ஷ்டசாலி ஆகிறான்.

கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியைத் தரக்கூடிய தேவதை எப்படிபட்டவள் தெரியுமா? தன்னை தேடிக்கொண்டிருக்கும் ஒவருவரையும் அவள திரும்பிப் பாக்க மாட்டாள். அவளாக தேடி வந்தால் தான் உண்டு. அவள் எப்படிப்பட்டவரைத் தேடி வருவாளெனில், எவனொருவன் வாழ்வில் ஒரு இலட்சியத்தைத் தேர்ந்தெடுத்து, கடினமாக உழைக்கிறானோ, அனையே அவள் விரும்பி வருவாள்.

ஆகவே, நாம் அதிர்டசாலியாக மற்றவரகளின் கண்களுக்குத் தோன்ற வேண்டுமென்றால், வாழ்வில் ஒரு இலட்சியத்தை தேர்ந்தெடுத்து அதை அடைவதற்குரிய வழிமுறைகளை கற்று, அதன்படி செயல்பட வேண்டும்.

தெய்வம் எப்போது நமக்கு உதவி செய்யுமென்றால், நாம் செயலைச் செய்யும்ப போதுதான் என்பதை கீழ்கண்ட ஒரு சம்பவத்தின் மூலம் அறியலாம்.

வண்டிக்காரன் ஒருவன் வண்டி நிறையபொருட்களை ஏற்றிக்கொண்டு, ஒருகாட்டு வழியே வந்தான். அவன் மிகுந்த பக்திமான். அது அடர்ந்த காடு, அக்காட்டை பகல் பொழுதில் எளிதாக கடந்து விடலாம் ஆனால் இரவில் புலி, யானை, சிங்கம் போன்ற மிருகங்கள் உலவ ஆரம்பிக்கும். ஆகவே, வழிப்போக்கர்கள் பகலிலேயே அதைக் கடந்து விடுவார்கள். இது அந்த வண்டியோட்டிக்கும் தெரியும்.

அவன் பொருட்களை ஏற்றிக்கொண்டு கிளம்பி அக்காட்டருகே வருவதற்கே மதியம் ஆகிவிட்டது. அப்போது ஒரு புதை குழிக்குள் வண்டிச் சக்கரம், மாட்டிக் கொண்டது. அவன் கடவுள் நம்மைக் கைவிடமாட்டார் என எண்ணி, “கடவுளே எப்படியாவது என் வண்டிச் சக்கரத்தை மேலே கொண்டு வந்து விடு என வேண்ட ஆரம்பித்தான்.

அவன் எவ்வளவு வேண்டியும் வண்டிச்சக்கரம் மேலே வரவில்லை. மாலை ஆகிவிட்டது. அவன் கடவுள் நம்மை கைவிட மாட்டார் என எண்ணி வேண்டிக் கொண்டே இருந்தான். இரவு சூழ்ந்ததும், புலி, சிங்கம் முதலியவை இரை தேடி கிளம்பின.

ஒரு புலி இவனைப்பார்த்து விட்டது. இவனும் புலியைப் பார்த்துவிட்டான். நாம் இன்று தொலைந்தோம். புலி நம்மை உண்டு விடும் என நினைத்தான்.

அப்போது புலி மண்டியிட்டு “இறைவா எனக்கு இன்று உணவளித்த உனக்கு நன்றி!” எனக்கூறி பிரார்த்தனை செய்த்து. அதைக்கண்ட வண்டிக்காரன், “புலியே கடவுள் என்பதே கிடையாது. அப்படியிருந்திருந்தால், மிகவும் பக்திமானான என்னை, நான் இவ்வளவு வேண்டியும், இந்த சக்கரத்தை புதைகுழியிலிருந்து எடுக்காமல், உன்னிடம் என்னை சிக்க வைப்பாரா?” எனக் கேட்டான்.

அதற்கு புலி, “அடே முட்டாள், கடவுளிடம் சக்கரத்தை மேலே ஏற்றச்சொல்லி வேண்டிய நேரத்தில், நீ சக்கரத்தைமேலே ஏற முயற்சி செய்தாயா? அப்படி சக்கரத்தை தூக்க முயலாமல், கடவுளை வேண்டினால் போதாது. ஏனெனில் வெறுமனே வேண்டுபவர்கள் உலகத்தில் பலர் இருக்கிறார்கள். ஆனால், யார் செயலில் இற்குகிறார்களோ, அவர்கள் வேண்டுதலை மட்டுமே ஏற்று இறைவன் உதவி செய்வார்.

நான் இப்போது இரை தேட வராமல், குகைக்குள் உட்கார்ந்து கொண்டு இறைவனை வழிபட்டிருந்தால் எனக்கு உணவாக நீ கிடைத்திருக்க மாட்டாய்” என சொல்லிவிட்டு, அவனை அடித்து உண்டது.

எவனொருவன், தனக்குத் தானே உதவிக் கொள்ள மறுக்கிறானோ, அவனுக்கு தெய்வமும் உதவி செய்யாது. எவனொருவன் தனக்குத் தானே உதவிக் கொள்கிறானோ, அவனுக்கு தெய்வமும் உதவி செய்யும். அதிர்ஷ்ட தேவதையும் அள்ளிக் கொடுப்பாள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2002

எதிலில்லை…பாடம்….
நமது அதிர்ஷ்ட தேவதை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
உறவுகள் உணர்வுகள்
ஓ… அன்றில் பறவைகளே!
தயாராகுக! வெல்க!
தோல்வியின் மரணம்….!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
மணம் விரும்பும் பணம்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் வாணவராயர் சிந்தனைகள்
பொதுவாச் சொல்றேன்
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றிப் படிக்கட்டுக்கள்