Home » Articles » வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்

 
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்


admin
Author:

வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறவரகள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வழிமுறைகள் பற்றி கடந்த இதழில் கண்டோம். அப்படிச் செல்வதற்கான அடிப்படைத் தகுதியாக TOEFL, GRE ஆகியவை குறித்து விரிவாக இந்தக் கட்டுரையில் காண்போம்.

டோஃப் தேர்வு (TOFEL)

கல்வித் தேர்வு சேவை (Educational Testing Services) என்ற அமைப்பு டோஃபல் தேர்வை உலகம் முழுவதும் நடத்தி வருகிறது.

இத்தேர்வு நடைபெறும் தேதி, நேரம், இடம் பற்றிய விபரங்களை அறிய Institute of Psychologican and Educational Measurement (IPEM) நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளலாம். இதன் முகவரி, 119 / 25 – A, மகாத்மா காந்தி மார்கு, அலகாபாத் – 211 001, உத்திரபிரதேசம் மின்னஞ்சல் ipem@nde.vsnl.net.in

அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தின் சில நிறுவனங்களில் படிக்கச் செல்ல வேண்டுமானால் டோஃபல் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் படிக்கவும், எழுதவும், பேசவும் உங்களுக்கு உள்ள ஆற்றலை அளந்தறியவே இந்தத் தேர்வு.

அமெரிக்க ஆங்கில உச்சரிப்பை புரிந்து கொள்ளுதல் (Listening Comprehension), ஆங்கிலத்தில் வாக்கிய அமைப்பைப் புரிந்து கொள்ளுதல் (Structure and Written Expression) , சொல்லாட்சித் திறனையும் அத்தோடு புரிந்து கொள்ளும் திறனையும் ஆற்றலையும் அறிதல் (Reading Comprehension), ஆகியவை இந்தத் தேர்வின் முக்கிய அம்சங்களாகும்.

தேர்வின் ஒரு பகுதியாக ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றலை அறிய Test of Written English (TWE) நடத்தப்படுகிறது. இதில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும். உங்கள் கருத்தைத் தெளிவாக ஆங்கிலத்தில் வெளியிட முடிகிறதா என்பதை அறிவதற்கே இத்தேர்வு நடத்தப்படுகிறது. இரு தேர்வுகளையும் ஒரே நாளில் எழுத வேண்டும்.

மேலும், ஆங்கிலத்தை பேசும் மொழியாக்க் கொள்ளாதவர்களுக்கு வாய்மொழித் தேர்வு (Test of Spoken English) நடத்தப்படுகிறது. கேள்விகளை நேரடியாக வாய் மொழியாக கேட்பார்கள். விடையையும் வாய்மொழியாகவே கூற வேண்டும். மாதம் ஒருமுறையென ஆண்டுக்கு 12 முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள 2400 கல்லூரிகள் முக்கியமானது. ஆங்கிலம் பேசப்படுகிற மற்ற சில நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களும் இத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளுகின்றன. ஆண்டுதோறும் பல இலட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

இத்தேர்வில் வெற்றி (Pass) தோல்வி (Fail) என்பது கிடையாது. குறைந்தது 550 மதிப்பெண்கள் பெற்றிருப்பது சிறப்பாகும். மதிப்பெண் 600 க்குமேல் பெற்றிருந்தால் அமெரிக்கா பல்கலைக் கழகங்களில் இடம் பிடிப்பதில் சிரமம் இருக்காது. எத்தனை முறை நீங்கள் இத்தேர்வை எழுதி இருக்கிறீர்கள் என்பது சான்றிதழில் குறிப்பிடப்படும்.

தமிழகத்தில் இத்தேர்வு சென்னையில் நடத்தப்படுகிறது. மேலும், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், குறிப்பாக பெங்களூர், கொச்சி, ஹைதராபாத், அகமதா பாத், புதுதில்லி, மும்பை, கல்கத்தா, புவனேஸ்வரம், முசௌரி, புனே, அலகாபாத் ஆகிய நகரங்களிலும் நடத்தப்படுகிறது.

ஜீ.ஆர்.இ. (GRE)

அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புகிறவர்கள் Graduate Record Examinations எழுத வேண்டும். சில பல்கலைக் கழகங்களில் இடம்பிடிக்க இத்தேர்வு மதிப்பெண்கள் பேருதவியாக இருக்கும். சில பல்கலைக்கழகங்கள GRE தேர்ச்சியைக் கட்டாயப்படுத்துவதில்லை.

எழுத்துத் தேர்வு (Written Exam) மற்றும் பொதுத்தேர்வு (General Test) ஆகியவற்றுக்குத் தயாராவது குறித்த தகவல்களை www.gre.org வெப்சைட்டிலிருந்து படியிறக்கிக்கொள்ள (Down Load) முடியும். மேலும் GRE Big Book, GRE Practicing to take the Genaral Test போன்ற புத்தகங்கள் உங்களை தேர்வுக்குத் தயார் செய்து கொள்ள துணைபுரியும்.

ஜி.ஆர்.இ. தேர்வு தொடர்பான விபரம் அறிய IPEM நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அறியலாம். இதன் முகவரி இக்கட்டுரையின் முன்பகுதியில் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு எழுதுவதற்கு உங்கள் ஆற்றலை அறிய GRE DIAGNOSTIC SERVICE என்ற சேவை உள்ளது. அதன் முகவரி http://grediagnostic.ets.org. மேலும் வெப்சைட்டில் அட்மிசன் சேவைக்கு www. gradadvantage.org என்ற இணையதளத்தில் புகுந்து பயன் பெறலாம்.

ஜிமெட் (GMAT)

மேலாண்மைக் கல்வி (MBA) பயிலச் செல்கிறவர்கள் Graduate Management Admission Test எழுத வேண்டும்.

ஆயிரத்து முந்நூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இத்தேர்வு மதிப்பெண்களை ஒரு தகுதியாக கருதி ஏற்றுக் கொள்கின்றன. இதில் பாதிக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்க இடம்பெற இம்மதிப்பெண்கள் மிகமிக அவசியம்.

எம்பிஏ படிப்பு கற்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஜிமெட் தேர்வுபற்றிய விபரங்களை www.gmat.org என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம். இத்தேர்வு எழுத அந்தந்த நாடுகளில் இத்தேர்வு எழுத அந்தந்த நாடுகளில் மையங்கள் உள்ளன. இந்தியாவில் SYLVAN TESTING SERVICES PVT,LTD., SENOR PLAZA, 160, A, GAUTHAM NAGAR, YUSUF SARAI, BEHIND INDION OIL BUILDING, NEW DELHI – 110049 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சேட் (SAT)

நமது மாணவர்கள் பள்ளிப்படிப்பை இங்கு முடித்து இளநிலை பட்டப்படிப்பை அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர விரும்பினால் SCHOLASTIC TEST (SAT) எழுதியிருக்க வேண்டும். ஏனென்றால், பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்வித்தரம் இருப்பதில்லை. எனவே, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேரவும், கல்வி உதவித்தொகை பெறவும் பள்ளிகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஒரே தரத்தில் இருக்காது என்ற அடிப்படையில இத்தேர்வு அவசியமாகிறது.

இத்தேர்வை இரண்டாகப் பிரிக்கலாம். SAT 1: Reasoning Test – Verbal & Mathematical Reasoning & SAT2: Subject Test. இது குறித்த விபரங்களை www.collegeboard.org என்ற இணையதளத்தில் பெறலாம்.

தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2002

எதிலில்லை…பாடம்….
நமது அதிர்ஷ்ட தேவதை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
உறவுகள் உணர்வுகள்
ஓ… அன்றில் பறவைகளே!
தயாராகுக! வெல்க!
தோல்வியின் மரணம்….!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
மணம் விரும்பும் பணம்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் வாணவராயர் சிந்தனைகள்
பொதுவாச் சொல்றேன்
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றிப் படிக்கட்டுக்கள்