Home » Articles » விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்

 
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்


முத்தையா ம
Author:

விளம்பரத்திற்கென்று ஒரு தயாரிப்பு வருகிறதென்று வைத்துக்கொள்வோம். அது பற்றிய விவரங்களைத் துல்லியமாக சேகரதித்துக் கொண்டுவர வேண்டியது. வாடிக்கையாளர் சேவைத்துறை அலுவலரின் பொறுப்பு. தேவைப்பட்டால் கள ஆய்வுப் பிரிவின் உதவியையும் அவர் நாடலாம்.

தான் சேகரித்த விவரங்களை அடிப்படையில், படைப்பாக்கப் பிரிஉக்கு ஒரு அறிக்கையை அவர் வழங்குவார் அந்த அறிக்கைக்கு Brief என்று பெயர்.

வாடிக்கையாளராகிய CLIENT – தாயரிப்பு BRAND – விலை – அந்த தயாரிப்பை வாங்கக் கூடிய நுகர்வோர் (Target segment) யார் – அவர்கள் பொருளாதார / கல்வித்தகுதிகள் என்னவாக இருக்கக்கூடும். இந்தத் தயாரிப்பின் போட்டித் தயாரிப்புகள் எவை – அவற்றின் விளம்பர அணுகுமுறைகள் என்னென்ன – இந்தத் தயாரிப்பின் தனித்தன்மை (Unique Selling Proposition) என்ன – ஒருவேளை இந்த தயாரிப்பு ஒரு பிரபலமான மனிதருடன் ஒப்பிடக் கூடியதெனில் யாருடன் ஒப்பிடலாம் (Brand Personality). இது போன்ற விவரங்களை அந்த அறிக்கையில் வழங்குவார் வாடிக்கையாளர் சேவைத்துறை அலுவலர்.

அப்படியொரு அலுவலரை நாம் இப்போது பார்க்கப் போகிறோம். தடதடத்துக் கொண்டிருக்கும் ரயிலில் உட்கார்ந்தபடி சூட்கேஸை மேஜையாக்கியபடி எழுதக்கொண்டிருக்கிறாரே அவர்தான் மோகன்..

இவர், திருச்சியில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு அலுவலர். கொச்சியில் ஒரு வாடிக்கையாளரைப் பார்த்துவிட்டு கொச்சின்- திருச்சி எக்ஸ்பிரஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை அலுவலகம் போனதும் படைப்பாக்கப் பிரிவுக்குத் தர வேண்டிய பிரிஃப் எழுதிக் கொண்டிருக்கிறார், மோகன்.

இரவு 12.00 மணி. ரயில் கோவையை நெருங்கியது. தூக்கம் கண்ணைச் சுழற்றுகிறது. மோகனுக்கு கொச்சியில் சந்தித்து வந்த நிறுவன உரிமையாளர், தமிழகமெங்கும் வீட்டு உபயோகப் பொருள் நிறுவனங்களை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

புதிய புதிய நிறுவனங்கள் போட்டிக்கு வரும்போது தன் பாரம்பரியத்தையும் நம்பகத் தன்மையையும் வலியுறுத்தி தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்க அவருக்கு ஆசை. “மறமற” வென்று எழுதிக் கொண்டு வரும் மோகனுக்கு Brand personality யார் என்று தோன்றவேயில்லை.

உடம்பிலோ அதிகபட்ச அலுப்பு மோகனுக்கு. சரி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணினார். மேல்பர்த் ஒதுக்கப்பட்டிருக்கிறது மோகனுக்கு. கீழ் பர்த் காலியாகத்தானே இருக்கிறது! கோயமுத்தூரில் யாராவது ஏறினால் பார்த்துக்கொள்ளலாம் விளக்கை அணைத்து விட்டு கீழ் பர்த்திலேயே படுத்துக்கொண்டார் மோகன்.

நடுநிசி, கோவையில் நிற்கிறது ரயில். அயர்ந்து தூங்குகிற மோகனை யாரோ தட்டி எழுப்புகிறார்கள். விளக்கு அணைக்கப்பட்டிருப்பதால் முகம் தெரிவதில்லை. கண்விழித்த மோகன் படுத்தபடியே சொல்கிறார், ‘ஐயா! எனக்கு காலிலே அடிபட்டிருக்கு! மேலே ஏறமுடியாது’ – பொய்தான், பொருத்தமான பொய்.

எதிரே நிற்பவர் ‘அட்டா! தெரியாம எழுப்பிட்டேன்! நம்ம பர்த்திலேயே படுத்துக்குங்க தம்பி! நான் மேலே படுத்துக்கறேன்’ குரல் பரிச்சயமாக இருக்கிறது. யாரென்று யோசிக்குமுன் மீண்டும் தூக்கம் கண்களைக் கவ்வுகிறது.

காலை நேரம் திருச்சியை நெருங்குகிறது ரயில் கீழ் பர்த்தில் எழுந்து அமரும் மோகன் பர்த்தை விட்டுக் கொடுத்த புண்ணியவான் யார் என்று மேல் பர்த்தைப்பார்த்தால் தூக்கி வாரிப்போட்டது! அடக்கடவுளே! சாலமன் பாப்பையா! இவரது தீவிர ரசிகன் ஆயிற்றே! நான். அநியாயமாகப் பொய் சொல்லி ஒரு அறிஞரை ஏமாற்றி விட்டேனே! என்ற குற்ற உணர்வு மோகனுக்கு.

சிறிது நேரம்தான்! கீழே இறங்கிவரும் பாப்பையா, மோகனைப் பார்த்துப் புன்னகைக்கிறார். “என்ன தம்பி கால்வலி பரவாயில்லைங்களா?” பேச்சுக் கொடுக்கிறார். இயல்பாகப் பேசப்பேச இன்னும் வருத்தம் மோகனுக்கு.

திருச்சியில் இறங்குகிறார். “அப்ப வர்றேன் தம்பி” என்று புறப்படும் பேராசிரியரிடம் “ஐயா! ஒரு நிமிஷம்” என்கிறான் மோகன். “உடம்பிலே அலுப்பு வந்தது, நீங்கள் என்று தெரியாமல் பொய் சொல்லிவிட்டேன்! என்னை மன்னிச்சிடுங்க ஐயா!”

“கட கட” வென்று சிரிக்கிறார் பாப்பையா” அதனால என்னய்யா! வேலைக்குப்போற புள்ளே! ரயிலிலே நல்லா தூங்கினாத்தான் காலையிலே சுறுசுறுப்பா இருக்கும்! நல்லா தூக்கத்திலே பொய் சொன்னா தப்பில்ல தம்பி’

பொய்மையும் வாய்மை யிடத்த – புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

“நான் ஃபெமினா ஹோட்டலுக்குப் போறேன். சாயங்காலம்தான் கூட்டம். பகல்ல நல்லாத் தூங்கிடுவேன்! வருத்தப்படாதீங்க!” என்று தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்பினார் பாப்பையா.

காலை 10.00 மணி விளம்பர அலுவலகத்தில் படைப்பாக்கப் பிரிவு இயக்குநரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் மோகன். நம் 30 வருஷ நிறுவனம் ஏற்கனவே எல்லார்க்கும் தெரியும். இப்ப அதையே முக்கிய வாசகமா (Theme Line) வைச்சுக்கலாம். “அனைவர் வீட்டிலும் அறிமுகம்’ இதுதான் Theme Line என்றார் படைப்பாக்கப் பிரிவு இயக்குநர்.

“அப்படீன்னா, Testimonial approach போகலாமா!” என்றார் மோகன். ஒரு தயாரிப்பைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர தானே திரையில் தோன்றி அந்தத் தயாரிப்பின் சிறப்புகளைப் பேசுவதற்கு Testimonial approach என்ற பெயர்.

“நான் நினைச்சேன், நீங்க சொல்லீட்டீங்க! ஒரு பிரபலமான மனிதர் பேசினா நல்லது. அனைவர் வீட்டிலும் அறிமுகம் அப்படீங்கிற விளம்பர வாசகத்துக்குப் பொருத்தமா ஒரு பிரபலம் பிடிங்க! அவர்தான் நம்ம Brand personality” என்கிறார் படைப்பாக்கப் பிரிவு இயக்குநர்.

“டாக்டர் மாத்ருபூதம்” என்கிறார் மோகன். கொஞ்சம் யோசித்துவிட்டு, உதடு பிதுங்குகிறார் படைப்பாக்கப் பிரிவு இயக்குநர். “டாக்டர் மாத்ருபூதம் இளம் தம்பதிகள் என்கிற Segment லதான் பாப்புலர். எல்லா வயதினருக்கும் தெரியற மாதிரி.

பளிச்சென்று தோன்றியது மோகனுக்கு. “சாலமன் பாப்பையா” “சரியான சாய்ஸ்! அனைவர் வீட்டிலும் அறிமுகம் அவர்தான் நம்ம பிராண்ட் பர்சனாலிட்டி. அவர் விளம்பரங்களிலே நடிக்க ஒத்துக்குவாரா தெரியலையே” என்கிறார். படைப்பாக்கப் பிரிவு இயக்குநர்.

விளம்பரத்தில் நடிக்க பாப்பையா ஒத்துக்கொண்டாரா! இல்லையா! அதெல்லாம் அவர்கள் பட வேண்டிய கவலை! நமக்க வேண்டியது Brief எழுதுவது எப்படி,, Theme line என்றால் என்ன, Brand personality எப்படி முடிவு செய்வது? – இதுபோன்ற விஷயங்கள்தான்!

ஒரு விளம்பரத்தின் அடிப்படைத் தகவல்களை அறிந்தபிறகு அது வடிவமைக்கப்படுவது எப்படி?

அடுத்த இதழில்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2002

எதிலில்லை…பாடம்….
நமது அதிர்ஷ்ட தேவதை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
உறவுகள் உணர்வுகள்
ஓ… அன்றில் பறவைகளே!
தயாராகுக! வெல்க!
தோல்வியின் மரணம்….!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
மணம் விரும்பும் பணம்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் வாணவராயர் சிந்தனைகள்
பொதுவாச் சொல்றேன்
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றிப் படிக்கட்டுக்கள்