Home » Articles » மணம் விரும்பும் பணம்

 
மணம் விரும்பும் பணம்


ஜெயசித்ரா குமரேசன்
Author:

MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

கடந்த இதழில் பயிற்யின் அவசியத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். எந்த வியாபாரமானாலும் அடிப்படை விசயங்கள் இரண்டு தான். விற்பனை செய்யவுள்ள பொருள்களை பற்றிய, விற்பனை திட்டத்தைப் பற்றிய தெளிவான அறிவு மற்றும் மக்களை அணுகும் முறை. இவ்விரண்டில் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களுக்கு நிச்சயமான வெற்றிதான். எனவே, கற்க,, கசடற…

பொருள்களை பற்றிய அறிவு

எல்லோரும் ஏதோ ஒரு பொருளை விற்பனை செய்து வரும் விற்பனையாள்ளே! எப்படி? உதாரணமா ஆசிரியர் அவரது மருத்துவர், வழக்கறிஞர், எஞ்ஜினியர் அவரவரது தொழில் திறனை விற்பனை செய்கின்றனர். இதேபோல பலவிதமான பொருள்களை பலர் அப்பொருளைப் பற்றிய அறிவுத்திறன் மூலம் விற்பனை செய்கிறார்கள். எனவேதான், அனைவருக்கும் அவசியம் Product Knowledge.

எப்படிப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப் போகிறார்கள்?

1) அனைத்து மக்களும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களா? (உ.ம்) அரசி, சோப்.

2 ) அனைத்து மக்களும் எப்போதாவது ஒருமுறை வாங்கும் பொருட்களா? (உ.ம்) TV. Fan

3) குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் தேவைப்படும் பொருட்களா? (உ.ம்) மருந்துப் பொருட்கள்.

மக்களுக்கு விற்பனை செய்யப்போகும் பொருட்களின் தரத்தை நீங்கள் உரசிப் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் முதல் முறை மட்டுமே உங்களது திறமையால் விற்பனை செய்ய முடியும். தொடர்ந்து விற்பனை செய்யப் போவது நீங்களல்ல.. பொருட்களின் தரமும், விலை சிக்கனமும் தான், மறந்துவிடாதீர்கள்.

மேற்குறிப்பிட்டவற்றில் அன்றாடம் பயன்படுத்தும் அவசியமான பொருட்களைப் பற்றி புரிந்துகொள்வதற்குரிய பயிற்சிதான் மிகவும் எளிதானது. எல்லோருக்கும் ஏற்றது. எப்படித் தெரியுங்களா?

மிகவும் சுலபமே! பயன்படுத்திப் பார்த்தால் தரம், சுவை, விலை மதிப்பு, அனைத்தும் அனைவருக்கும் தெரியுமே! இதற்கென தனிப்பயிற்சி தேவையில்லை!

கண்ணால் காண்பதும் பொய், காதால், கேட்பதும், பொய். பயன்படுத்தப் பார்ப்பதே மெய்.

பொருட்களைப் பற்றிய விபரங்கள் அறிந்துகொள்ள அருமையான பயிற்சி அவரவரின் சொந்த உபயோகமே.. கற்றபின் நிற்க அதற்குத் தக.

சொந்த உபயோகத்தினால் எப்படி வெற்றி கிடைக்கும் என, விரிவாக வரும் தொடர்களில் பார்ப்போம்.

பொருட்களை விற்பனை செய்வதென்பது உங்கள் திறமையில்தான் உள்ளது.

ஒருவர்க்கு ஒருமுறை புதிய பொருள் அறிமுகம் செய்வது முட்டுமே உங்கள் வேலை. பிடித்த பின்னர் அவர் பயன்படுத்தும் போதெல்லாம் வருமானம் தொடர்ந்து வருவது உங்களுக்குத் தானே? ஆகவே, Product Presentation மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். First impression is the best impression.

பொருட்களின் சிறப்பினை துல்லியமாக எடுத்துக்கூறி, வாங்குங்கள் என வற்புறுத்தாமல் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

விற்பனை செய்வதெப்படி? என விரிவாக விளக்கமாக வரும் தொடர்களில் விவாதிக்கலாம். விற்பனை செய்தவுடன் வெற்றி பெற்று விட முடியுமா? ஒவ்வொருவரும் வெற்றிபற அவரின் கீழ் குழுவாக விற்பனையாளர்களை உருவாக்க வேண்டுமல்லவா?

MLM வியாபார திட்டம்

மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபார திட்டம் என்பது,

ஒருவர் பின் ஒருவராக பொருட்களை தூக்கிச் சென்று விற்பனை செய்யும் திட்டமுமில்ல;

மாதந்தோறும் அவரவர்குக்குத் தவேபைபடம் பொருட்களை வாங்குவதுடன், தம்மால் முடிந்த அளவு பொருட்களை மக்களுக்கு அறிமுகம் செய்வதும், வருமானம் தேவை என்று எண்ணுபவர்க்கு வியாபார திட்டத்தை அறிமுகம் செய்வதுமே MLM வியாபாரமாகும்.

குறைந்த விலை, உயர்ந்த தரம், அவசியத் தேவை, அனைவருக்கும் தேவை வேறு எங்கும் கிடைக்காத நிலை – போன்ற பொருட்கள் அடங்கிய MLM திட்டமே தொடர்ந்து வெற்றி பெறும். இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு வியாபார திட்டத்தில் வெற்றி பெற முடிவு செய்யுங்கள்.

பார்ப்பவர்களை எல்லாம் வியாபார திட்டத்தில் இணைக்க எண்ணாமல் பணம் தேவைப்படுபவரகளை மட்டும், கற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்களை மட்டும், வாழ்க்கைத தரம் உயர முயற்சி செய்ய முடிவெடுத்தவர்களை மட்டும் இணையுங்கள்.

சுருங்கச்சொன்னால், கஷ்டப்படாமலிருக்க கஷ்டப் படலாம் என்போரை மட்டும் இணையுங்கள். ஏனெனில், சாதனைக் குழந்தைகள் பிறப்பது சோதனை பிரசவங்களுக்குப் பிறகுதான். எனவே,

விற்க விவேகமுடன், விற்றபன்
விற்பனையாளராக்கு அதற்கு தக்கவரை.

என்ற புதிய குறளின்படி செயல்படுபவர்களுக்கு வெற்றி நிச்சயம் இந்த MLM வியாபாரத்தில்.

யாரிடம் விற்னை செய்யப்போகிறோம்? மக்களிடம்.

யாரை விற்பனையாளர் ஆக்கப் போகிறோம்?

மக்களை, அதே மகளைத்தான்.

இதில், வெற்றி பெற எதனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிந்து கொண்டால், கற்றுக்கொண்டால் வெற்றிதான் பார்க்கலாமே!

மக்களை அணுகும் முறை

இதனை மட்டும் கற்றுத் தேர்ந்து விட்டால், தொழிலில் வெற்றி பெறலாம். குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம். சமூக வாழ்வில் மிகப் பெரிய வெற்றி பெறலாம். மக்களை அணுகி வெற்றி கொள்ள கீழ்க்கண்டவற்றில் சிறந்த பயிற்சி பெறவேண்டும்.

1. மக்களை புரிந்து கொள்ளல்; சமாளித்தல்.

2. மக்களுடன் திறம்பட எப்படிப் பேசுவது, உடன்படுவது, கேட்பது.

3. மக்களை எப்படி சமாதானப்படுத்துவது, புகழ்வது, விமர்ச்சிப்பது, நன்றி சொல்வது.

4. மக்கள் மனநிலையை நெறிப்படுத்துவது, நல்ல எண்ணத்தை உருவாக்குவது.

மக்களை புரிந்து கொள்ளுதல்

மனிதனின் குணமே, தன்மையே சுயநலம் தான். இதில் சந்தேகமேயில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும், தன்னைப் பற்றிதான் அகறையே தவிர மற்றவர்கள் மீதோ, உங்கள் மீதோ அல்ல.

எனவே, மக்கள் தங்களைப் பற்றித்தான் அக்கறை கொள்கின்றனர். என்பதை புரிந்து கொள்ளும் அறிவுதான் மக்களை அணுகும் முறைக்கு அடிப்படையாகும்.

மக்களுடன் திறம்பட பேசுதல்

மக்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? அவர்கள்தான் அவர்களைப் பற்றி பேசினால், ஆழ்ந்து கவனிப்பார்கள், மயங்கிப் போவார்கள். உங்களுடைய கருத்துக்களையும், விஷயங்களையும் நீங்கள் எந்த அளவு விரும்புகிறீர்கள் என்பதைவிட நீங்கள் பேசுவதை கேட்பவர்கள் அதனை விரும்புகிறார்களா என்பதே முக்கியம்.

நான், எனது, எனக்கு, என்னுடைய இந்த வார்த்தைகளை உபயோகிக்காமல் பேச, பழகிக்கொள்ளுங்கள். வெற்றி பெற்றுவிடலாம். இதற்கு மாற்றாக சக்தி மிகுந்த ஒரே சொல்லால் மிகப்பெரிய அளவு சாதிக்கலாம்.

அந்த சொல், வார்த்தை ‘நீங்கள்’ என்பதாகும். உதாரணமாக, நீங்கள் வெற்றி பெறுவீர்கள், உங்களுக்கு இலாபம் கிடைக்கும் இவையனைத்தும் உங்களுக்கே போன்றவை.

மக்களுடன் உடன்படுதல் & கேட்டல்

தங்களுடன் உடன்படுபவர்களை மக்கள் நேசிக்கிறார்கள், தங்களுடன் உடன்படாதவர்களை மக்கள் விரும்புவதில்லை.

மனித உறவில் விரிசல் ஏற்படுவது வாதாடும் முறையால்தான். வாதாடி நண்பர்களைப் பெற முடியாது. உங்களுக்கு சரி என்று தோன்றினால் கூட வாதாடாதீர்கள்.

சண்டைக்கார்ர்களிடம் கூட ஜெயிப்பதற்கு வழி உள்ளது. என்ன தெரியுமா? அவருடன் சண்டை போட மறுப்பதுதான்.

மேலும், தவறு என்று தோன்றியதற்கு உடனே, ஆம் நான்தான் தவறு செய்துவிட்டேன் என ஒப்புக்கொள்ளுங்கள். மக்கள் உங்களை மதிப்பார்கள்.

நீங்கள் எவ்வளவு அதிகம் கேட்கிறீர்களோ அந்த அளவிற்கு திறமைசாலியாகி வெற்றியாளராகலாம். ஒருவர் பேசுவதை நன்கு கேட்பவர் அவரைக் காட்டிலும் சிறப்பாக பேசுபவராகலாம்.

மக்களை சமாதானப்படுத்துதல்

நீங்கள் பொருள்களைப் பற்றி என்ன நன்மைகள் கூறினாலும் அதை உங்களது லாபத்திற்காக கூறுகிறீர்கள் என மக்கள் நினைப்பார்கள். எனவே, மற்றவர்கள் சொன்னதாக கூறுங்கள். புள்ளி விவரங்களை எடுத்துக்கூறுங்கள். நீங்கள் நேரியாக சொல்லாமல் இன்னொருவர் சொன்னதாக சொல்வது சிறந்த வழியாகும்.

மக்களைப் புகழ்தல், விமர்ச்சித்தல், புகழ்ந்து பாராட்டிப் பேசுதல்

மனிதனுக்கு உணவு எப்படி அவசியமோ, அதேபோல் உணர்வுக்கு புகழ்ச்சியே உணவாகியது.

முதலில் யாராவது உங்களைப் பாராட்டுவதுபோன்ற சூழலில் எப்படி இருந்தீர்கள் என கற்பனை செய்து பாருங்களேன். எனவே, தாராளமாக, மிகவும் தாராளமாக பாராட்டுங்கள். குறிப்பாக சிலவற்றைக் கண்றிந்து பாராட்டுங்கள். மனிதரை பாராட்டுவதற்கு அவரது செயலைப் பாராட்டினாலே போதுமானது. தினமும் ஒருவரையாவது பாராட்டிப் பாருங்களேன்.

விமர்ச்சித்தல்

மனித உறவில் விரிசல் தோன்றக் காரணமே இந்த விமர்சனம்தான். உங்களது மனக்குறையை வெளிப்படுத்த, மற்றவரை மட்டம் தட்ட நீங்கள் விமர்சனம செய்தால் நன்மை ஏற்படாது. அதற்காக பிறரை விமர்சிகவே கூடாதா என்று கேட்கலாம். உங்கள் விமர்சனத்தை வெற்றிகரமானதாக்கலாம் அதெப்படி?

விமர்சனம் அந்தரங்கமாகக் கூட செய்யலாம்.

விமர்சிப்பதற்கு முன் அன்பாக, புகழ்ச்சியாக சிலவற்றைக் கூறுங்கள்.

மனிதனை விமர்சிக்காமல் அவனது செயலை மட்டும் விமர்சியுங்கள்.

விமர்சிக்கும்போதே, அவரது தவறை சுட்டிக்காட்டும்போதே சரியானது எது என்றும் கூறுங்கள்.

நீங்கள் விமர்சிப்பது நியாயமானதாக இருந்தாலும் ஒருமுறை மட்டுமே விமர்சியுங்கள்.

இறுதியில் நமது கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துவிட்டோம். இனி, நாம் நண்பர்கள், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம் என வெற்றிகரமாக முடிக்கலாம்.

MLM வியாபாரம் பல்வேறுபட்ட மக்கள் இணைந்து குழுவாக செயல்படும் வியாபாரமாதாலால் குழுவில் உள்ள அனைவரும் அவரவர்க்கு உரிய கடைமையை தொடர்ந்து செய்தால்தான் குழுவாக வெற்றி பெறலாம்.

அதிகாரத்தால் சாதிக்க முடியாததை, பணத்தால் சாதிக்க முடியாத்தை பண்பால், அன்பால் சாதிக்கலாம் என்பதைப் புரிந்து, ஏன், எதற்கு, என காரணங்களை ஆராயாமல், சொல்வதைச் செய்தால் நிச்சயமாக வெற்றிதான்.

உங்களுக்கு இந்த வியாபாரம் நன்கு புரியும் வரை, நீங்கள் ஒரு நல்ல அங்கீகாரம், நிரந்தர வருமானம் பெறும் வரை சாதனையாளர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டால் ஜெயிக்கலாம். அது மட்டுமின்றி உங்களது குழுவிற்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது, ஆமாம் போடுதான்.

உங்களுக்கு மிகப்பெரிய புதையல் இருப்பது தெரிந்துவிட்டது. ஆனால், அங்கு செல்வதற்குரிய வழியில் பல அறைகள் பூட்டப்பட்டுள்ளன. உங்களிடமோ பல்வேறுவகையான சாவிகள் உள்ளன. என்ன செய்வீர்கள்?

பலரும் சரியான சாவியை தேர்ந்தெடுத்து பூட்டை நீக்குவதற்கு முயற்சி செய்வதை விட்டு விட்டு அவசரத்தினாலும், உடனடியாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தாலும் தவறான வழியில் (பூட்டை உடைக்க) அல்லது சரியான சாவி தெரியாமல் மாற்றி, மாற்றி பொருத்தி தடுமாறுகிறார்கள். அதனால் தோல்வியைத் தழுவுகின்றனர். பாதி முயற்சியில் சோர்ந்து விடுகின்றனர், சோகத்திற்கு சொந்தக்காரர் ஆகிவிடுகின்றனர்.

MLM வியாபாரம் என்பது 100 மீ, 200 மீ, ஓட்டப்பந்தயம் அல்ல. இதில் வெற்றிபெற முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வியாபாரம் மாரத்தான் வகை ஓட்டப்பந்தயம் என்று தொடர்ந்து… தொடர்ந்து செய்து வர வேண்டும்.

உங்களது வெற்றிக்கு மிகச் சரியான திறவுகோல்களைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளவும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றியும் அடுத்த இதழில் பார்ப்போம்.

வழிகாட்டுதல் தொடரும்..

இணைந்த கரங்கள் எதையும் சாதிக்கும்.

 

3 Comments

  1. Divya.S says:

    நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும்
    ரொம்ப பயனுள்ளதாக உள்ளது. இனி அடுத்த
    எந்த மாதிரி சிறு தொழில் எப்படி பண்றதுன்னு
    சொல்லி தாருங்கள, ரொம்ப நன்றி மேம்

  2. Dinesh.R says:

    நீங்கள் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது இதை நான் கடைபிடிப்பேன் நன்றி

  3. Mohamed Rikaz says:

    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,இன்னும் வியாபாரம் சம்மந்தமாக எதிர்பார்கிறேன் …..மிக நன்றி

Post a Comment


 

 


June 2002

எதிலில்லை…பாடம்….
நமது அதிர்ஷ்ட தேவதை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
உறவுகள் உணர்வுகள்
ஓ… அன்றில் பறவைகளே!
தயாராகுக! வெல்க!
தோல்வியின் மரணம்….!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
மணம் விரும்பும் பணம்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் வாணவராயர் சிந்தனைகள்
பொதுவாச் சொல்றேன்
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றிப் படிக்கட்டுக்கள்