Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


இராமநாதன் கோ
Author:

ஹலோ! ராஜவா?

‘ஆமாம். என்னப்பா அசோ. இந்த நேரத்தில போன் செய்யற? எங்கே இருக்கே?”

‘சென்னையிலதான் ரொம்ப நேரமா யோசிச்சேன்; சரி உங்ககிட்டேயே பேசிடலாம்னு கூப்பிட்டேன்.

‘என்ன சொல்லு!’

‘அதான் உங்க பையன் மேட்டர் டி.வி.யிலே பார்த்தேன். ரொம்ப ஷாக்காயிட்டேன்!’

‘பையனா? டி.வி.யிலா? என்ன சொல்றே? அவன்தான் ப்ரண்ஸோட டூர் போயிருக்கானே!’

‘ஆமாம் ராஜன்.. முதல்ல அவனுடைய போட்டோவை டி.வி.யில காட்டினப்போ நானும் நம்பல அப்புறம் அவனுடைய அப்பா, அம்மா விவரங்களை சொன்னதும் அதிர்ந்து போயிட்டேன்.

‘என்னப்பா சஸ்பென்ஸா பேசற விஷயத்தை சொல்லு?’

‘கொடூமான கொள்ளையில் கைதான கூட்டத்தில் முக்கியமானவனாக உங்க பையனை காட்டினாங்க”

“ஈஸ் இட்? மை காட்”

*****************************

சிறைச்சாலை

கம்பிக்கு வெளியிலிருந்து பெற்றோர்கள் மகனைப் பார்த்து சொன்னார்கள். இவ்வளவு பெரிய அவமானத்தை எங்களுக்கு தருவீன்னு எதிர்பார்க்கல’

மகன், இதெல்லாம் பெருசா? உங்க நல்லதுக்குதான் இந்த வேலையில இறங்கினேன். நீங்க ரிடையர் ஆகப் போறீங்க. வசதி வாய்ப்போட வாழ்ந்த உங்களை வசிதயா பார்த்துக்கறதுக்குதான் இதைச் செய்தேன்.

*****************

ப்ளாஸ்பேக்.

அந்த இளைஞன் சிறுவனாக இருந்த போது நடந்த சம்பவங்கள்.

ஒருநாள் தந்தை ராஜனை தேடிவந்த ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார். சிறுவனான மகன் கேட்கிறான். “அப்பா அந்த வேலையை உங்களால வாங்கித்தர முடியாதுன்னு தெரியும். அப்புறம் ஏன் லஞ்சம் வாங்கறீங்க.”

“இதெல்லாம் உன்னோட எதிர்காலத்துக்குத்தான் வாங்கி சேர்க்கறேன். – அப்பா.

ஒருமுறை தாயுடன் வெளியே செல்கிறான். துணிக்கடையில் துணி வாங்கினாள்.

ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்று மீதிப் பணத்தோடு சேர்ந்து வந்துவிட்டது. கடையை விட்டு வெளியே வரும்போது அதைப் பற்றிக் கேட்ட சிறுவனிடம் தாய் சொல்கிறாள் ‘இதெல்லாம் பெரிசில்லை எல்லோரும் செய்யறதுதான். உன்னோடு எதிர்காலத்துக்கு பயன்படும்னு தான் இதை திருப்பிக் கொடுக்கல’

இதுபோன்ற பெற்றோர்களின் செயல்களால் பிள்ளைகளுக்கு என்ன விளைவு ஏற்படும்?

இளம் உள்ளங்களின் மூளை ஒரு கம்ப்யூட்டர் போல, அதில் எதை செலுத்துகிறோமோ அதை அப்படியே திருப்பி செய்துவிடும். அதில் என்ன செலுத்துவது என்பதுதான் முக்கியம்.

வலிமையான நேர்மையான மனமாக வளர என்ன செய்ய வேண்டும்?

ஆழ்மனத்தில் ‘ரெட்டிகுளர் சிஸ்டம்’ என்ற பகுதி உண்டு. அதில் நாம் எதை பகுதுகிறோமோ அதை அப்படியே பதிய வைத்துவிடும். அதறகு சில அடிப்படைகளைக் கையாள வேண்டும்.

முதலாவதாக, விடுமுறைகளிலும், படிப்பை முடித்ததும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்துதல். எந்த வேலையையும் செய்யாமல் இருக்கின்ற மனமே தவறான சிந்தனைகளில் தடம் புரளும்.

இரண்டாவதாக சுயமுன்னே வளர்ச்சி மனவளக்கலைப் பயிற்சி புத்தங்களில் ஈடுபடுத்துதல்.

மூன்றாவதாக, நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பகளை உருவாக்கி அவர்களுடன் பழக வாய்ப்பளித்தல்.

நான்காவதாக, நல்ல ஆசிரியர்களை அடிக்கடி சந்தித்து உரையாடும் பழக்கத்தை உருவாக்குதல். இளம் வயதில் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு அதிக பலன் கிடைக்கும்.

ஐந்தாவதாக நல்ல கருத்தரங்குகள், பாசிடிவ் சிந்தனைகள் பற்றி ஆடியோ, வீடியோக்களில் ஈடுபடுத்துதல்.

ஆறாவதாக, முக்கியமாக தற்போது ஒளிபரப்பும் டி.வி. சேனலகளை பார்ப்பதைத் தவிர்த்தல்; அப்படியே பார்க்க வேண்டியிருந்தால் குறிப்பிட்ட நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்தல்.

இவை அனைத்தும் பிள்ளைகளின் நன்மைக்காக பயனளிக்கும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2002

எதிலில்லை…பாடம்….
நமது அதிர்ஷ்ட தேவதை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
உறவுகள் உணர்வுகள்
ஓ… அன்றில் பறவைகளே!
தயாராகுக! வெல்க!
தோல்வியின் மரணம்….!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
மணம் விரும்பும் பணம்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் வாணவராயர் சிந்தனைகள்
பொதுவாச் சொல்றேன்
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றிப் படிக்கட்டுக்கள்