Home » Articles » வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்

 
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்


admin
Author:

வளர்ந்த நாடுகளுக்கு சென்று படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் அடிப்படையாக சில தகுதிகளைப் பெற்றிருப்பது அவசியமாகும்.

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு நிகராக நமது நாட்டிலும் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து இக்கல்வி நிறுவனங்களில், சேர்ந்து படிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு, குறிப்பாக வளர்ந்த நாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் “தரமான நிறுவனங்கள்” என்று சொல்லிவிட முடியாது. எனவே, முன்னதாக அதைத் தீர விசாரித்துக் கொள்வது.

கல்விக் கண்காட்சிகள்

பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் நமது மாணவர்களை கவர்ந்து இழுப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. அதற்காகவே, இந்தியாவில் முக்கியப் பெரு நகரங்களில் இந்தப் பல்கலைக் கழகங்கள் கல்விக் கண்காட்சிகளை நடத்துகின்றன.

தங்களது பல்கலைக கழகங்களில் உள்ள பாடத்திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், சிறப்புக் கூறுகள் போன்ற விபரங்களை மாணவர்களுக்கு விளக்கி அவர்களை தமது பல்கலைக் கழகங்களுக்கு கல்வி கற்க ஈர்க்க முயற்சிக்கின்றன.

சொந்தப்பணம்

பெரும்பாலும் சொந்தப் பணத்தில், படிக்க விரும்பும் மாணவர்களைத் தான் இந்தப் பல்கலைக்கழகங்கள் விரும்புகின்றன.

வளர்ந்த நாடுகளின் பல்கலைக் கழகங்களில் கல்விக் கட்டணங்கள் மிகவும் அதிகம். எனவே வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்புவோர் முன்னதாகவே அதற்கு எவ்வளவு செலவாகும என்பதை அறிந்து தங்கள் வசதிக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.

உதவித் தொகை

சில பல்கலைக் கழகங்களில் பட்ட மேற்படிப்பு அல்லது முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்புகள் மேற்கொள்ள உதவித் தொகைகள் (Fellowship) அளிக்கப்படுகின்றன. அது அந்த படிப்புகளுகும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒருசில படிப்புகளுக்கு மட்டும் கிடைக்கலாம்.

நான் விண்ணப்பிக்கும் படிப்புக்கு உதவித் தொகை கிடைக்குமா என்ற விபரத்தை முன்னதாகவே அறிந்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் போதே சேர்க்கை (Admission) மற்றும் உதவித்தொகை (Fiancial Aid or Fellowship) இரண்டுக்கும் தனித்தனியே விண்ணப்பங்கள் வேண்டும். இரண்டுக்கும் தனித்தனியாக பரிசீலித்து முடிவு அறிவிப்பார்கள்.

பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி செய்ய செல்கிறவர்களுக்கு சிலசமயம் பயிற்சி உதவியாளர் (Teaching Assistant) ஆராய்ச்சி உதவியாளர் (Reseach Assistant) போன்ற பணிகள வழங்கி அதற்கான ஊதியத்தை அளிப்பார்கள். படிப்பதற்கு அத்தொகை பயனுடையதாக இருக்கும்.

இணையம்

பல்கலைக்கழகங்கள்பற்றிய விபரங்களை இணையம் (Internet) மூலம் தெரிந்து கொள்ள முடியும். அந்தப் பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை (Admission) குறித்த விபரங்களை ஈ – மெயில் மூலம் கடிதங்களை அனுப்பி பதில் பெற வாய்ப்புகள் உள்ளன.

இரட்டைக் கல்வி

பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை இந்தியாவிலும் மறுபகுதியை அயல்நாடுகளிலும் படிக்கும் வகையில் இரட்டைக் கல்வித் (Twinning Educatio ) திட்டங்களை சில கல்வி நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இதற்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

இத்தகைய கல்வி நிறுவனங்களின் தரம், அங்கீகாரம் ஆகியன பற்றி முற்றாகத் தெரிந்து கொண்டு செயலில் இறங்குவது நல்லது.

அடிப்படைத் தகுதிகள்

வளர்ந்த நாடுகளுக்கச் சென்று கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் அடிப்படையாக சில தகுதிகளைக் கொண்டிருப்பது அவசியம்.

பள்ளியிலிரந்தே நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எந்த நாடுகளுக்கு படிக்கச் செல்கிறார்களோ அந்தப் பல்கலைக் க்கத்தின் பிற்று மொழியை அறிந்திருப்பது அவசியம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்று படிக்க ஆங்கிலமும், ஜெர்மனியில் படிக்க ஜெர்மன் மொழியும், ரஷ்யாவில் படிக்க ரஷ்ய மொழியும் அறிந்திருப்பது அவசியம்.

உதவித் தொகை (Fellowship) கிடைக்காவிட்டால் கல்விக்கட்டணம் மற்றும் செலவுகளுக்கு உரிய தொகையை ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.

தேர்வுகள்

ஆங்கிலத்தில் பயிலச் செல்கிறவர்கள், குறிப்பாக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுத, படிக்க, பேச திறன் பெற்றிருக்க வேண்டும். இத்திறனை சோதனை செய்யும் TOEFL (Test of English as a Foreign Language) தேர்வை எழுதி நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன் தொடர்பாக படிக்கச் செல்வதாயின் GMAT (Graduate Management Admission Test) தேர்வில் மிகுந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இது தவிர பிற துறைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் GRE (Graduate Record Examination) தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க SAT (Scholastic Aptitude Test) எழுதிட வேண்டும். TOFEL தேர்வை நடத்தும் அமைப்பே இந்தத் தேர்வையும் நடத்துகிறது.

பட்டப்படிப்பு

நான்கு ஆண்டு பட்டப்படிப்பைப் படித்து முடித்தவர்கள் மட்டுமே. முதுநிலைப் படிப்பில் சேர முடியும். இதற்கு முடிவில் ஓராண்டு அடிப்படைக் கல்வி (Foundation Course) யில் படிக்க வேண்டி இருக்கும்.

தட்பவெட்பம்

வெளிநாடுகளில் சென்று தங்கிப் படிக்க அந்த நாட்டு தட்பவெப்ப நிலை இருக்குமா என்று சிந்திக்க வேண்டும். இண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அங்கு தங்கிப் படிப்பதற்கு ஏற்ப நமது உடல் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

மருத்துவ சிகிச்சைக்கு அங்கு செலவு அதிகமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

படிக்கும் மாணவர்களுக்குக் கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்திலேயே காப்பீடு திட்டம் (Insurance) இருக்கும். ஆனால் படிப்பவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அவர்களேதான் காப்பீடு செய்து கொள்ளவேண்டும்.

பன்னாட்டு மாணவர் சேவை

சேர்ந்து படிக்க இருக்கும் கல்வி நிறுவனங்களில் பன்னாட்டு மாணவர் சேவைப்பிரிவு (International Students Sevrvice) உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அமைப்பு இருநுதால் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்வது முதல் தங்கும் இடம் போன்ற பல்வேறு செயல்களில் அவர்கள் உதவியாக இருப்பார்கள்.

சான்றிதழ்கள்

விண்ணப்பத்துடன் நமது படிப்பு தொடர்பான சான்றிதழ்களின் ஒளிநகல் (Xerox) களை அனுப்பினால் போதும். மேலும், மாணவர்தம் திறனுக்கும் ஒழுக்கத்திற்கும் அவருக்கு கற்பித்த பேராசிரியர்கள் மூவரிடம் இருந்து நற்சான்று கடிதங்கள் வாங்கி இணைந்து அனுப்ப வேண்டும்.

சேர்க்கை

அட்மிசன் கடிதம் கிடைத்ததும் உடனடியாக சேர முடியவில்லை என்றால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அடுத்த பருவத்தில் கூட சேர்ந்து படிக்கலாம்.

இது குறித்து அந்தப் பல்கலைக் கழகத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டால் போதுமானது.

மேலும் அட்மிசன் கடிதம் அனுப்பிய பிறகு A Certificat of Eligibility for Non – Imigrant Student Status என்ற கடிதமும் அனுப்பி வைப்பார்கள். இது இருந்தால்தான் அந்நாட்டிற்குச் செல்ல விசா பெற முடியும். சொந்தப் பணத்தில் படிக்கச் செல்வதாக இருந்தால் அதற்குரிய வங்கி ஆவணங்களும் தேவைப்படும்.

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்