Home » Articles » ஓ அன்றில் பறவைகளே!

 
ஓ அன்றில் பறவைகளே!


கந்தசாமி இல.செ
Author:

அவள் எல்லாவற்றையும் கனவாக்க் கருதிவிட்டாள். கருதியும் பயன் என்ன? இன்று அவள் கணவனையும் இழந்துவிட்டாளே, ஆனால், நானோ கனவையும் நனவாகக் கருதி அவ்வலா துன்புறுகிறேன்.

அந்த ஓராண்டில் எங்கள் ஊரை மிகவும் நேசிக்கத் தொடங்கி இருந்தேன்.

எங்கள் ஊர் சிறிய ஊர். நீர்வளம் வளமானதாக இல்லை. அங்கு எல்லோரும் உழவர்கள்தான். அவர்கள் வாழ்க்கை என்றும் பற்றியும் பற்றாமலே இருந்தது. பருவ மழையில் கிணற்றுக் கொஞ்சம் தண்ணீர் வரும். அதை நம்பி அதிகம் பயிரிட்டு விடுவார்கள். பிறகு அந்தப் பயிர் விளைவதற்குமுன் தண்ணீர் வற்றிவிடும். விளைவுக்கு வராத பயிர்கள் எல்லாம் தண்ணீர்யின்மையால் காய்ந்து போகும். இதுவே, அவர்களது நிரந்ர நிலையாக இருந்தது.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல் என்னைச் சிந்திக்க வைத்தது. என் ஆசிரியர் சொன்ன அந்தச் சொற்கள் “உங்கட்கு துன்பம் ஏற்பட்டபோது சத்திய சோதனையைப் படித்துப் பாருங்கள். துன்பம் தீராவிட்டாலும் உறுதியாக குறையவாவது செய்யும்” என்று கூறிய – அந்தச் சொற்கள் சத்திய சோதனையைப் படிக்கத் தூண்டியது. படித்த பிறகு என்னுள் பெரியமாற்றம் ஏற்பட்டதைக் கண்டேன்.

என்னுடைய துன்பத்தைவிட, எத்தனையோ பேர் படுகின்ற துன்பம் பெரிதாகப்பட்டது. மனம் இருந்தால் வழி உண்டு என்று சொல்வார்கள். அதுபோல் ஊரைப் பற்றிய சிந்தனையில் ஒரு புதிய செய்தி கிடைத்தது.

ஏக்கருக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் வருவாய் தரும். புதிய பருத்தி ரகம் ஒன்றை வேளாண் கல்லூரியில் கண்டுபிடித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது வாய்ப்பாக அமையுமானால் நம் அந்தஸ்த்தை ஏன் நம் ஊரின் அந்தஸ்தையே உயர்த்தி விடலாமே என்று எண்ணி, அதுபற்றி அறிந்துவர கோவைக்குச் சென்றேன்.

விதைகளை வாங்கிக் கொண்டு கல்லூரித் லைவரையும் சந்தித்தேன். என் ஊரைப்பற்றி நான் கொண்டுள்ள அக்கறையைக் கண்டு அவர் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினார். ‘எதுவரை படித்திருக்கிறாய்’ என்று கேட்டார்.

படிப்பையும் மதிப்பெண்களையும் கூறினேன்.

அடுத்த ஆண்டு விண்ணப்பிக்குமாறும், வேளாண் கல்லூரியில் இடம் பெறுவதற்குரிய மதிப்பெண்கள் இருப்பதாகவும் கூறினார். நன்றாகப் படித்தால் உதவித் தொகை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

எனக்கு ஒருவகையில் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய சொற்களை எனக்கு நம்பிக்கையைத் தருவதாகும் இருந்தன.

இருந்தாலும், தங்கம் என் மனக்கண்முன் நின்று “நான் நான்” என்றாள். அவளுக்காக, அளை அடைவதற்காக நான் மருத்துவக்கல்லூரியிலேயே சேர எண்ணினேன். ஆனால், கல்லூரித் லைவர முன்ந்து சொல்லும் போது? “விண்ணப்பிக்கின்றேன்” என்றன். வணக்கம் தெரிவித்து ஊர் வந்து சேர்ந்தேன்.

சிலரே அந்தப் பகுதியை பயிரிடமுன் வந்தார்கள். விதை விலையும் அதிகம். உரம் எல்லாம் போட முடியாது. நட்டம் ஏற்பட்டால் மீள முடியாது என்று பலர் பழைய முறையிலே இருந்தார்கள். சிலர் மட்டுமே பயிரிட்டார்கள்.

இடையிலே நோய்கண்டு எல்லோரும் என்னிடம் வந்தார்கள். நான் வேளாண் கல்லூரிக்குச் சென்று கல்லூரித் தலைவரை அணுகினேன். அவர் வல்லுநர் சிலரை என்னுடன் அனுப்பி மருந்தடிக்க ஏற்பாடு செய்தார்.

எதிர்பார்த்தபடி விளைச்சல் இல்லை என்றாலும் பழைய பருத்தியைவிட ஒவ்வொருவருக்கம் பயிரிட்ட அளவிற்கு ஏற்ப ஆயிர், ஆயிரத்து ஐந்நூறு என்ற அளவில் அதிகம் வருமானம் கிடைத்தது.

வந்த வல்லுநர்கள் ஊரைச் சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றேன். குறைந்த தண்ணீருக்கு ஏற்ற வகையில் காய் கறிகள், பயறு வகைகள் பயிரிடும்படி அறிவுரை கூறினார்கள். அந்த ஒரு ஆண்டில் அவர்கள் செலவில் இரண்டு முறை எங்கள் ஊருக்கு வந்த சென்றார்கள்.

ஊரில் செழுமை வராவிட்டாலும் ஊர் மக்களின் உள்ளத்தில் செழுமை ஏற்பட்டது. நாளடைவில் வேளாண்மை வல்லுநர்களுக்கு எங்கள் ஊர் ஆராய்ச்சி மையமாக அமைந்துவிட்டது.

அணமையில் ஒரு விழாவில் “புதுமுறை வேளாண்மையை உடனடியாக ஏற்கும் ஊரார்’ என்று சிறப்புப்பட்டத்தை எங்களூர் மக்கள்பெற்றார்கள் என்று அறிந்தபோது பெரிதும் மகிழ்ந்தேன்.

ஓராண்டு கடுமையாகப் பாடுபட்டு, அடுத்த ஓரிரண்டு ஆண்டுகள் படிப்பதற்கான வருவாயைத் தேடி வைத்திருந்தேன். ஆனால், எவ்வளவுதான் பொதுநலமனப்பான்மை என் உள்ளத்தில் குடிகொண்டிருந்தாலும், தங்கத்தை நினைக்கும்போது என் பொதுநலம் எங்கோ ஓடி ஒளிந்துகொண்டது.

ஒன்றும் அறியாத அவளை எப்படியேனும் முயன்று காப்பது – அடைவது நம் கடமையல்லவா? பெண்; அவளால் என்ன செய்ய முடியும்?

இப்படித்தான் அன்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அவள் உணர்த்திவிட்டாளே! வாழ்க்கை என்பது ஒரு கடுக்குள் அடங்காதோ? ஆனால், அடக்கி ஆண்டால்தானே அது வாழ்வாக இருக்கும்.

இன்று நான் பெரிய மனிதன். இந்தியா முழுவதும் படித்தர்கள் என்னை அறிவார்கள். அதுவும் குறிப்பாக வேளாண் துறையில் உள்ளோர் மிகவும் நன்றாக அறிவார்கள். எங்கள் ஊரில் அன்று தொடங்கிய ஆராச்சிப் பணி இன்று இந்திய அரசுக்கே வேளாண்மையில் அறிவுரை கூறும் அறிஞனாக என்னை ஆக்கி இருக்கிறது.

பட்டமும், பதவியும், பணமும் அவர் கூறிய அந்தஸ்தும் ஒருவனை மன அமைதி உடையவனாக ஆக்கிவிடுமா? இல்லை, இல்லவே இல்லை! அதறகு மேலும் என் உள்ளம் ஏங்கிக் கொண்டிருக்கிறதே எதற்காக?

அவள் வேறு ஒருவருகு உரியவள் என்று அறிந்த பிறகும் அவள் அன்புக்கக ஏங்குகிறேனே ஏன்? அவளை நினைக்கும் போதெல்லாம் என் இதயத்திலிருந்து இரத்தம் கசிவதுபோல் உணர்கிறேனே, என் உணர்வுகள் நியாயமானவைதானா?

இல்லை, சட்டப்படி தவறு என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும் என் உள்ளத்து உணர்வுகளை எந்தச் சட்டத்தாலும் தடுக்க இயலவில்லையே, ஏன்?

நீ என்னைப் பொறுத்த அளவில் என்றும் தங்கம்தான்; அதுவும் என் தங்கம்தான். ஆனால், அதை நான் வெளியில் சொல்ல முடியுமா…? முடியும். ஆனால் சொல்ல மாட்டேன். ஏன்? என் பட்டம்ம் பதவியும் என்னைத் தடுத்து விடுகின்றன. சமுதாயக் கட்டுப்பாடு எனும் போலித்தனமான வேலிக்குள் நான் அடைபட்டு முடங்கிக் கிடக்கின்றேன்.

படித்தவர்களில் பெரும்பாலும் எல்லோருமே கோழைகளாகிக் கிடக்கின்றனர். நல்லதை எண்ணுகிறார்கள். ஆனால், அதைச் சொல்லவே தயங்குகிறார்கள். பிறகு செய்து எங்கே?

விமானம் டில்லி பாலம் விமான நிலையத்திலை தரை இறங்கியபோதுதான், என் நினைவலைகளிலிருந்து நான் விடுபட்டேன்.

(தொரும்.. )

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்