Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


இராமநாதன் கோ
Author:

இது இருப்பத்தி ஒன்றான் நூற்றாண்டு நாகரீக வேகத்தின் உச்சகட்டம். பெற்றோர் – பிள்ளை உறவில் தூரம் அதிகமானால் தலைமுறை இடைவளி உள்ளே புகுந்துவிடும்.

இன்று பெற்றோர்களுகு பிள்ளைகளை சந்திக்கவே பெரும்பாலும் நேரமிருப்பதில்லை.சந்தித்தாலும் பிள்ளைகளுடன் மனம்விட்டு பேச முடிவதில்லை. இவர்களுக்கிடையே வெள்ளித் திரை, சின்னத்திரை, கணித்திரை என பல திரைகள் குறுக்கே வந்துவிட்ட கால கட்டம்.

இதற்கான ஆய்வைப் பார்க்கும் முன் முல்லாவின் நகைச்சுவையப் பார்ப்போம்.

முல்லா ஒரு நகைச்சுவையாளன் என்பது அனைவருக்கும் தெரியும். அவனுடைய மனைவி அழகே இல்லாதவள். ஒவ்வொரு உறுப்பும் எப்படி இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருக்கும்.

முல்லாவுக்கு திருமணமான முதல் நாள், மனைவி பர்தாவோடு அருகில் வந்தாள்.

“உங்களுடைய நண்பர்களில் யார் வந்தால் நான் பர்தாவை விலக்கி மூகத்தைக் காட்டிப் பேசலாம்?”

முல்லா, “அன்பே நீ யாரிடம் வேண்டுமானாலும் முகத்தைக் காட்டு. ஆனால் என்னிடம் மட்டும் காட்டிவிடாதே!” என்றார்.

மனைவிக்கோ மிகுந்த வருத்தம். “என் முகத்தை ஒருமுறை கூட தினமும் பார்க்கவில்லையானால் சில நாட்கள் கழிந்ததும் யார் என்றே உங்களுக்கு நினைவில் இருக்காதே! அதனால் தினமும் ஒரே ஒரு முறை மட்டும் உங்களிடம் காட்டுகிறேன்”

“ஐயோ, அது மட்டும் வேண்டாம். நான் தினமும் பார்த்தேனேயானால் என்னுடைய ஊக்கமும் உற்சாகமும் அத்தோடு போய்விடுமே” என்றார் முல்லா.

முல்லாவின் கதைக்கு நேர் மாறான ஒன்றை பெற்றோர்கள் தினமும் கட்டாயமாக பிள்ளைகளுக்கு செய்தாக வேண்டும். தம் பிள்ளைகள் எப்படியிருந்தாலும் அவர்களை தினமும் ஊக்குவிக்கவும் உற்சாகபடுத்தவும் தவறக்கூடாது.

அதற்கு என்ன செய்வது?

– அன்புடன் அரவணைக்கலாம்.
– முத்தமிடலாம்.
– தோளில் தட்டிக் கொடுக்கலாம்.
– கைகுலுக்கிப் பேசலாம்.
– அவர்களுடன் விளையாடலாம்.
– இயன்றவரை சாப்பிடும்பது இணைந்தே சாப்பிடலாம்
-திருமணம் மற்றும் விழாவிற்கு செல்லும்போது உடன் அழைத்துச் செல்லலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்