Home » Articles » சாதிக்கச் செயல்புரி

 
சாதிக்கச் செயல்புரி


admin
Author:

– சிறுவயல் செயமணி

காற்றின் ஒவ்வொரு அசைவிலும்தான்
காற்று பிறக்கிறது

கடலின் ஒவ்வொரு துளியிலும்தான்
கடலே இருக்கிறது.

ஆற்றல் கொண்டே உழைக்கும் அளவு
வாழ்க்கை சிறக்கிறது.

அறிவு கருவியாக இருந்து வரும்
ஆபத்தைத் தடுக்கிறது.

சேற்றிலிறங்கிய கால்களின் கைகளில்
சோறு சிரிக்கிறது.

சிந்திக்கத் தெரிந்த மனிதனின் மூளையில்
ஓடு பிறக்கிறது.

ஆற்றில் இறங்கி ஆழம் பார்த்தவன்
கடலையும் கடக்கின்றான்

ஐயோ தண்ணி என்றவன்
யார்க்கோ அடமையாகின்றான்.

போனால் போகட்டும் என்றே வாழ்பவன்
புதுமைகள் புரிகின்றான்.

போனதை எண்ணிப் புலம்பித் திரிபவன்
பூமிக்கு பாரம் ஆகின்றான்.

நாளையப் போதில் நம்பிக்கையோடு
எழுந்துவா மகனே

நாடும் ஓடும் போற்றும் சாதனை
புரிவாய் அனுதினமே!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்