Home » Articles » விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..

 
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..


முத்தையா ம
Author:

“விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்று பழைய பாடல் ஒன்று!

இன்று உயிரோடிருந்தால், கவியரசு கண்ணதாசன் தனது பாடலுக்கு, தானே கூட திருத்த மசோதாத் தீர்மானம் கொண்டு வந்திருப்பார். அந்த அளவுக்கு விளம்பர உலகம்.. தயாரிப்புகளை உயர்த்துவதோடு, தானே ஒரு பெரும் துறையாகத் திகழ்ந்து வருகிறது. விளம்பரத்தால் நிரந்தரமான உயர்வுகள் சாத்தியமாக வருகின்றன.

ஒரு பொருளை பிரபலப்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் நிறையவே வேற்றுமை உண்டு. பிரபலப்படுத்துவதில் பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. அதே நேரம், வெறுமனே பிரபலப்படுத்தும் போது அதிகம் பயனிருப்பதில்லை.

உதாரணத்திற்கு, சாலையோரங்களில் சிலர் நின்றுகொண்டு, வந்துபோகும் மனிதர்கள் கைகளில் எல்லாம் ஒரு காகித்த்தைத் திணிப்பாரகள. இது விளம்பர முயற்சியல்ல. பிரபலபடுத்தும் முயற்சி (Publicity)

அந்தக் காகிதத்தில் மாபெரும் விலைக்குறைப்பு என்று 200 ரூபாய்க்கு விற்பனையாகிற 400 ரூபாய் மதிப்புள்ள “டீ ஷர்ட்” ஒன்றைப் பற்றிய விபரங்கள் இருப்பதாக வைத்த்துக்கொள்வோம்.

அந்தக் காகிதம் திணிக்கப்பட்ட கைகள் ஆண்கள் – பெண்கள் – முதியவர்கள் – ஏழைகள் – பேருந்து பிடிக்க நடந்து போகும் நடுத்தர வர்க்கம் – காரை நிறுத்திவிட்டு சாலையைக் கடந்து போகும் செல்வந்தர்கள் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இவர்களில் அந்த டீ ஷர்ட்டை வாங்கக் கூடியவர்கள் 30% மட்டுமே இருப்பார்கள். மற்றவர்கள், நாலடி எடுத்து வைத்ததும் அந்தக் காகிதத்தை கசக்கி எறிபவர்களாய் இருப்பவர்கள். எனவே, பிரபலப்படுத்தும் முயற்சியில் பயன் குறைவு.

விளம்பரப்படுத்துவது அப்படியல்ல. ஒரு தயாரிப்பு யாரால் வாங்கப்படும் – அவர்கள் வாழ்க்கைத் தரம் எது? – அவர்கள் விரும்பிப் பார்க்கும் ஊடகம் எது – என்பது போன்ற ஆய்வுகளை நிகழ்த்தி அதற்கேற்ப விளம்பரங்களை வடிவமைப்பதும், வெளியிடுதும் மேற்கொள்ளப்படும். இதற்குத்தான் விளம்பரம் (Advertisement) என்று பெயர்.

உதாரணத்திற்கு, ஒரு சோப் விளம்பரம். அது இளம் பெண்களுக்கு என்று முடிவு வசீகரிக்கும் விதமாக வாசகங்கள் எழுதப்படும். அற்கேற்ற புகைப்டங்கள், ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டு கவர்ச்சிகரமாய் விளம்பரம் வடிவமைக்கப்படும்.

அதற்குப்பிறகு யாரைக் குறி வைத்து அந்தத் தயாரிப்பு விற்பனைக்கு வருகிறதோ அந்தப் பிரிவினர் (Target SEgment) கண்ணில்பட்டு அந்த ஊடகம் வழியாக விளம்பரங்கள் வெளியாகும். தொலைக்காட்சி விளம்பரம் என்றால், இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இந்த சோப் விளம்பரம் திரையிடப்படும்.

எனவே, விளம்பரம் என்பது வெற்றுக் கற்பனைகளின் விளையாட்டுக் கூடமல்ல, பரிமாற்றம். பல நிறுவனங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் விளம்பரங்களால் திட்டமிடப்பட்டன என்பதே உண்மை.

விளம்பர உலகின் வியப்பூட்டும் அம்சங்கள் பற்றி நாம் விரிவாக சிந்திக்கப் போகிறோம். அதற்கு முன்னால் விளம்பர உலகின் முக்கிய துறைகள் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

படைப்பாக்கத் துறை (Creative Department) விளம்பர எழுத்தாளர்கள் – ஓவியர்கள் – கணினி வடிவமைப்பு நிபுணர்கள் என்று விதம் விதமான திறமையுள்ள தலைகள் இங்கே கூடியிருக்கும் இவர்களுக்கொரு படைப்பாக்கக் குழுத் தலைவர் (Creative Group Head) இருப்பார்.

வாடிக்கையாளர் சேவைத்தறை (Client Servicin Department) வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்கள் தேவைகளைக் கேட்டறிவதோடு, விளம்பரப்படுத்தப்படும் பொருள் குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொண்டு அதனை படைப்பாக்கத் துறையிடம் துல்லியமாக எடுத்துரைக்கும் உற்சாகமும் சுறுசுறுப்பும் மிக்கவர்களின் பாசறை இந்தப் பிரிவு.

இந்த அலுவலர்கள் Client Servicing Executive என்றோ Account Executive என்றோ அழைக்கப்படுவார்கள். கள ஆய்வுப் பிரிவு, (Research Groups) இதன் கிளையாக சில இடங்களில் செயல்படும்.

ஊடகத் துறை (Media Department) ஊடகங்களோடு உறவு கொண்டாடி, உரிய ஊடகங்களில் உரிய நாளில் உரிய நேரத்தில் விளம்பரங்கள் வெளிவரும் விதமாக செயல்படுவது ஊடகத் துறை. இதற்கு ஊடகப் பிரிவு இயக்குநர் (Media Director) தலைமை தாங்குவார்.

பொது நிர்வாகம் (Administrator) எல்லாத்துறைகளில் இருப்பதுபோலவே அலுவலக நிர்வாகம், நிதி, அலுவலர்கள், போன்றவற்றைக் கண்காணிக்கும் பிரிவு இது.

அறிமுகம் போதும்! அடியெடுத்து வைப்போமா விளம்பர உலகிற்குள்?

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்