Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

பத்தாயிரம் ஓட்டு அதிகமாக உங்களுக்கு!

நம் தினசரி வாழ்க்கையைப் பார்ப்போம்.

கண் விழிப்பு

காலைக் கடன்கள்;

டிபன்;

சிலவற்றைப் படித்தல்;

மாலையில் களைத்துப்போய் வீடு திரும்புதல்;

டி.வி.யில் சில காட்சிகள்;

உறக்கம்.

அடுத்த நாள் கண்விழிப்பு;

அதே தொடர்கதை

என்னய்யா வாழ்க்கை இது?

வாழ்க்கையே சலப்பாகாதா?

உயிரோட்டம் வேண்டாமா? ஒரு புதுமை, ஒரு புத்துணர்வு வேண்டுமல்லவா?

அதைச் செய்வது எப்படி?

மற்றவர்களைக் கவர்வது எப்படி?

பிறர் நம்மை ஆதரிப்பது எப்படி?

இப்படி கேட்கும்போது நமக்குள் பல குறுக்கு கேள்விகள்.

நான் என்ன ஸ்டார் நடிகரா? கவர்ச்சியில் மற்றவர்கள் மயங்கிவர;

தேவையில்லை!

நான் என்ன கோடீஸ்வரனா? என்னை மற்றவர்கள் மதிப்பதற்கு.

அவசியமில்லை!

நான் என்ன விளையாட்டு வீரனா? எனக்கு விசிறிகள் கிடைப்பதற்கு.

அதுவும் தேவையில்லை!

நான் படிப்பில் அறிவாளியா? என் அறிவைப் பார்த்து பலர் ஆச்சரியப்பட,

அதுவும் கட்டாயமில்லை!

நான் மேடைப் பேச்சாளரா? மற்றவர்களை கேட்க வைப்பதற்கு.

வேண்டியதில்லை!

நான் பெரிய தொழிலதிபரா? எனக்குக் கீழ் நூற்றுக் கணக்கில் பணியாளர்கள் பணிபுரிய,

யாரும் அதை எதிர்பார்க்கவில்லை.

எனக்கு பெரிய பதவி எதுவும் இல்லையே? மற்றவர்கள் என்னை அண்டி வருவதற்கு.

அதுவம் வேண்டாம்.

எனக்கு எந்த அரசியல் கட்சியின் உயர் பொறுப்பும் இல்லையே.

என்னைத்தேடி கூட்டம் வர.

அதற்கும் அவசியமில்லை.

சரி, என்னதான் வேண்டும்?

ஒரு மனிதனின் உள்ளத்தைக் கவர ஒரு சில நிமிஷங்களே போதும்.

எப்படி? எப்படி?

அது ஒன்றும் பெரிய கம்ப சாஸ்திரமும் இல்லை.

அன்புக்கா ஏங்கும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் நம்மை சுற்றி அலைகிறார்கள். நம் குடும்பத்திலுள்ளவர்களில் தொடங்கி எல்லாம் துறந்துவிட்ட சன்யாசி வரை அன்புக்காத் தான் ஏங்குகிறார்கள்.

ஒரு சில அன்பு வார்த்தைகளைப் பேசினால் போதும்; அவர்கள் ஆனந்தப்பட்டு நம்மை ஆதரிப்பார்கள்.

கஷ்டத்தில் மூழ்கிவிட்ட பல மனிதர்களுக்கு நாம் செய்கின்ற சிறிய உதவியும் பெரிய நன்றியாக வெளிப்படும்.

புதிதாக குடியேறிய மனிதர்கள், புதிதாக வேலைக்கு வந்தவர்கள், யாராவது ஒட்டி உறுவாடுவார்களா என எதிர்பார்க்கிறார்கள். அவர்களிம் ஒரு சில நிமிடங்கள் பேசினால் போதும், உயர்வோடு நினைப்பார்கள்.

நம்மைவிட வாய்ப்புக்குறைவான மனிதர்கள், வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நியாயமான ஆலோசனையைச் சொன்னால் போதும், ஆபத்திலிருந்து மீண்டு அனபு காட்டுவார்கள்.

துக்கம் தாளாமல் தவிக்கின்ற மனிதர்கள் பலர். அவர்களைத்தேடி, சில கணங்கள் உடனிருந்தால் மன அழுத்தம் குறைந்து மகிழ்வார்கள்.

பிறந்தநாள், வெற்றிபெற்ற நாள் என பிறர் பாராட்டுக்காக பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களை மனம்விட்டுப் பாராட்டனால் மறக்கவே மாட்டார்கள்.

இப்படி இன்னும் பல.. பல….

எழுதிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் பணமோ, பதவியோ, பகட்டோ தேவையே இல்லை. ஒருவேளை அப்படி இருந்தால் அதுவும் ப்ளஸ்தான். இன்னும் நிறையவே செய்யலாம்.

பிறரிடம் அன்பு காட்டும் இளகிய மனம் தேவை.

இப்படி யாரையாவது தினமும் ஒருவரைச் சந்தித்தால் போதும், ஓராண்டில் 365 பேர் நம்மை ஆதரிப்பார்கள். அதுவே இரண்டு மூன்று பேரென ஆகிவிட்டால் ஓராண்டில் ஆயிரம் பேர் சேர்ந்து விடுவார்கள். அடுத்த பத்தாண்டுகளில் பத்தாயிரம்பேர் நம்மை உயர்ந்தராக போற்றுவார்கள். ஆம். பத்ததாயிரம் ஓட்டு நம்மைத் தேடி வரும்.

(தொடரும்..)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்