Home » Articles » கேள்வி – பதில்

 
கேள்வி – பதில்


admin
Author:

மனசுவிட்டுப் பேசுங்க

சந்தேகம்

எனக்கு மனதில் அடிக்கடி சந்தேகம் உண்டாகிறது. பிறர் எப்போதும் என்னை ஏமாற்ற திட்டமிடுவதாக எண்ணுகிறேன். சில சமயங்களில் அவ்வாறு ஏமாந்தும் போயிருக்கிறேன். அதனால் எப்பொழுதும் இனம்புரியாத ஒருவித பயத்துடனேயே இருக்கிறேன். இதனால் மன அமைதியின்மை உண்டாகிறது என்ன செய்யலாம்?

(பெயர், ஊர் வேண்டாம்)

சந்தேகம் குடி கொண்ட மனதில் அமைதி இருக்காது. ஏனெனில் அது ஒரு நோய். அடுத்து, மனதில் சந்தேகம் இருந்தா, மறவங்க உங்களை ஏமாற்றுவதும் ஈஸிதான். அதுக்கு ஒரு கதையை உதாரணமா சொல்றேன்.

ஒரு பலவான் தன் தோளில் ஒரு ஆட்டை போட்டுகிட்டு போயிட்டிருந்தான். அந்த ஆட்டை பறிப்பதறகு நாலு திருடர்கள் திட்டம் போட்டார்கள்.

ஆட்டைக் கொண்டு வந்தவன்கிட்ட முதல் திருடன் சொன்னான், “என்ன இது, ஓநாய் மாதிரி இருக்குது. அதை தோளில் போட்டிருக்கியே?”

இதைக்கேட்டதும், ஆட்டுக்காரனுக்கு சிரிப்பு வந்தது. இது ஓநாய் இல்லை; ஆடுதான் என்று சொல்லிட்டு அதைப்பத்தி கவலைப்படாமல் போயிட்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம்கூட சந்தேகம் வரல.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் இரண்டாவது திருடன் எதிர் பட்டான். “என்னங்க இது ஓநாயை கழுத்திலே போட்டிருக்கீங்க” என்றான்.

இப்போது அவனுக்கு ஒரு சிறு சந்தேகம். ஒருவேளை ஓநாயா இருந்துட்டா என்ன பண்றதுன்னு மனசுக்குள்ள ஒரு நெருடல். இருந்தாலும் ஆடுதானேன்னு மனசுக்கு சமாதானம் சொல்லிட்டு போய்க் கொண்டிருந்தான்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மூன்றாவதுதிரடன் எதிர்பட்டான். “என்னங்கண்ணே! பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கீங்க. ஓநாயை கழுத்தில் போட்டுட்டு போறீங்களே. போனமாசம் கூட ஒருத்தனை ஓநாய் கடிச்சு செத்துட்டான். இதுகூட தெரியலையா?” என்றான்.

இப்போ அவனுக்கு அந்த ஆடு ஒருவேளை ஓநாய்தான் போல இருக்கு என்ற சந்தேகம் நல்லா வந்திடுச்சு.

மனசுல பயம் இருந்தாலும் அதை இழக்க மனசில்லை. படபடப்போட நடந்துபோயிட்டிருந்தான்.

இன்னும் கொஞ்சம் போனதும் நான்காவது திருடன் எதிர்பட்டான். “ஐயோ.. ஓநாய்.. ஓநாய்..” என கத்த ஆரம்பித்தான்.

இப்போ அவனோட சந்தேகம் உறுதியாச்சு. ஐயோ… சாமி! எனக்கு இந்த வம்பு எதுக்குன்னு சொல்லிட்டு கழுத்திலிருந்த ஆட்டை தூக்கி வீசிவிட்டு போயிட்டான்.

இதைப்போல எந்த ஒரு சந்தேகம் மனசில வளர்ந்துட்டாலும் அது நம்மை இழப்பில் கொண்டுபோய் விட்டுவிடும்.

இனி அடுத்தமுறை சந்தேகம் மனசுல வந்தா அது சரிதானா என்று ஆராயுங்கள். அந்த சந்தேகம் சரியில்லை என்றால் ஒதுக்கித் தள்ளிவிடுங்கள்.

ஒருவேளை சரியான்னு தெரியலைன்னா எச்சரிக்கையா மட்டும் செயல்படுங்க.

அதையும் மீறி சிலர் ஏமாற்றிவிட்டால் ஒரு உலக நியதியை நினைச்சு சமாதானம் அடையுங்கள். பிறரை ஏமாற்றுகிற மனிதன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான் என்பதே உண்மை. அடுத்த முறை அவரிடம் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

ஒருவேளை உங்களுடைய சந்தேகம் உங்களை இயல்பாக செயல்படாத அளவுக்கு பாதிச்சிருந்தா மனநல சிகிச்சையை செய்வதுதான் நல்லது.

இங்கு சிலருடைய சந்தேகங்களை பார்ப்போம்.

வீட்டைப் பூட்டிவிட்டு வந்ததும் “பூட்டினேனா?” என்ற சந்தேகம் இதனைச் சிறிது தூரம் போனவர் திரும்பி வந்து பூட்டைப்பார்ப்பார். “ஆம் பூட்டித்தான் இருக்கும என்று திரும்பவும் புறப்படுவார்.

“அட்டே, அந்தப் பூட்டை இழுத்துப்பார்க்காமல் விட்டுட்டேனே” என மீண்டும் திரும்பி விடுவார்.

பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டு சென்றபின், “அட்டே அது தாழிட்டுப் பூட்டியிருந்ததா? திறந்து வெச்சு பூட்டியிருந்ததா? எனக் கதவை தள்ளிப்பார்க்காமல வந்துட்டேனே” என மீண்டும் திரும்பி விடுவார்.

இப்படி சந்தேகத்தின் மேல் சந்தேகம் தொடர்ந்து வருவது ஒரு நோய்.

இன்னும் சிலருக்கு சற்று வித்தியாசமான சந்தேகங்கள் வரும். பிறர் எதைச் செய்தாலும் தம்மை எதிர்த்து திட்டமிட்டு செய்கிறார்கள் என நினைப்பார்கள். தன்னைக் கொலை செய்ய சதித்திட்டம் நடக்கிறது என்பார்கள்.

அல்லது பிறர் எதேச்சையா செய்கின்ற செயலை நமக்காகத்தான் செய்தார்கள் என்றும் நினைப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு இளம்ப எண் அவரது வீட்டின் வழியாக சென்றாள், அவள் தன்மீது காதல் கொண்டுதான் அவ்வழியே வருகிறாள் என நினைப்பார்கள்.

ஒருவளை அடுத்தநாள் அவள் வராவிட்டால், தான் காதலுக்கு சம்மதிக்க வில்லை என நினைத்துதான் அவள் வரவில்லை என நினைப்பார்கள்.

இதெல்லாம் பாதிக்கப்பட்ட மன நிலையே. அவசியமான சிகிச்சை செய்தல் வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2002

நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கேள்வி – பதில்
கோடை தரும் கொடை
“சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
"சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
உள்ளத்தோடு உள்ளம்
இயற்கை உங்கள் நண்பனா? விரோதியா?