Home » Articles » வணக்கம் தலைவரே!

 
வணக்கம் தலைவரே!


முத்தையா ம
Author:

வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொள்வது, வாழ்க்கைக்குப் பயன்படுவது இரண்டுமே ஒரு மனிதனை இலட்சியவாதியாய் மாற்ற வல்லவை.

இலட்சிய நோக்கம் ஒரு மனிதனுக்குள் வேர்விடும் போது, வெற்றிகள் கனியும் நேரம் வெகு தூரத்திலில்லை.

குடும்பம் – தொழில், சமூக மனிதனுக்குள் வேர்விடும் போது, வெற்றிகள் கனியும் நேரம் வெகு தூரத்திலில்லை.

குடும்பம் – தொழில், சமூக உறவுகள் எல்லாமே, மனிதன் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் தான். என்றாலும் கூட, ஒரு எல்லைக்குமேல், சமூகத்தில் சில மதிப்பியல்களையும் த்ததுவங்களையும் நிலைநிறுத்திவிட்டுச்செல்கிற அளவுக்கு மனிதன் வளர்கிறான். வாழ்க்கையின் விசுவரூபத்தைக் கண்டு வியந்து, மிரண்டு, விலகிப்போகிறவர்கள் சராசரி மனிதர்கள்.

பொது நோக்கம் என்ற ஒன்று எல்லார் மனதிலும் இருக்கிறது. அதனை மேலும் வளர்த்தெடுக்கும் போதும், அதற்கான திறமைகளைக் கூர்மைப்படுத்தும் போதும், அது “பொதுவாழ்க்கை” என்று அழைக்கப்படுகிறது.

தனக்கோ, தன் குடும்பத்திற்கோ தனிப்பட்ட சொத்தாக தன் செயல்களைக் கருதாமல், பொதுவானதாய் தனது வாழ்வை மடைமாற்றம் செய்யும்போது வாழ்க்கைப் பொருளுடையதாகிது.

இறைவனை முதலில் “தலைவன்” என்று அழைத்தார்கள். “தலைவ! நினைப்பிரியாத நிலைமையும் வேண்டுவனே” என்று பாடினார்கள். காதலனை காதலி “தலைவன்” என்றழைப்பதும் சங்ககாலக் கவிதைகளில் காணக்கிடைக்கிறது.

அடியவர்கள் வாழ்வுக்கு பொறுப்பேற்கும் கடவுள் – காதலி தன்னை முழுவதும் ஒப்படைத்தப் பிறகு அவள் வாழ்வுக்குப் பொறுப்பேற்கும் காதலன் – இவர்கள் நம் மரபில் தலைவர் என்று அழைக்கப்படுகிறார்கள். நம்மோடு நேரடித்தொடர்பும், நம் வாழ்க்கை மீது கலப்பில்லாத அக்கறையும் கொண்டவரே தலைவர்.

தலைவராய் விளங்கும் விருப்பமுள்ளவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.முதலில் தங்கள் தகுதியை வரையறை செய்வது. உதாரணமாக, “நமக்குப் பொது வாழ்க்கை எல்லாம் சரிப்படாதுங்க! நான் ண்டு குடும்பம் உண்டு – வீடு உண்டு” என்று சொல்லக் கூடியவராய் இருக்கலாம். ஆனால்,குறைகளே இல்லாத குடும்பத் தலைவராய் அவர் திகழ வேண்டும்.

வீட்டில் ஒவ்வொருருக்கும் விருப்பமான மனிதராய் – அன்பான கணவராய், ஆதரவான அப்பாவாய், நேசமிக உறவினராய் வாழ்வாராயானால் முழுமையான குடும்பத் தலைவர் என்ற பெயரையும் – பெயரைவிட மன நிறைவையும் பெறலாம்.

குடும்பம் தாண்டி, ஒரு தொழில் தொடங்குபவராக இருந்தால், அந்த்த தொழிலின் தன்மைகள் – தன்னிடம் உள்ள திறமைகள் இரண்டும் ஒத்துப் போகிறதா என்று பார்த்து, தகுந்த பணியாளர்களைத் தேர்வு செய்து, உரிய பயிற்சி கொடுத்து அவர்களின் செயல்திறனைக் கண்காணிப்பது வரை பொறுப்பேற்க வேண்டும்.

சில தொழிலகங்களில் தலைவர்கள், நிகழும் தவறுகளுக்கு முழுக்க முழுக்க பணியாளர்களே பொறுப்பு என்று சொல்லி விடுவார்கள். அத்தகைய அணுகுமுறை தவறான தலைமையின் அடையாளம்.

தவறு செய்தவர்கள் பணியாளர்களானாலும், அவர்களைத் தேர்வு செய்த்து, பயிற்சி தந்தது எல்லாம் நிறுவனத்தின் பொறுப்பு என்பதால் அவர்கள் செயல்களுக்கும் பொறுப்பேற்கும் தலைவரே சிறந்த தலைவர்.

இத்தகைய எல்லைகளைக் கடந்து சமூகத் தலைவர்களாக வருபவர்கள் தகுதிகளின் உச்சத்தில் திகழ வேண்டும். சுவாமி விவேகானந்தர் சொன்னார் “உலகத்தின் வரலாறு என்றால் அது தனிமனிதர்களின் வரலாறுதான்! ஆனால் அந்தத் தனிமனிதர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள்” என்று.

ஒரு சில மனிதர்களின் வரலாறே உலக வரலாறு என்றால், அதில் நாமும் சேர்ந்து கொள்ள நிறைய இடமிருக்கிறது. உண்மையான தலைவர்களுக்கென்று இந்த உலகத்தில் தேவையும் இருக்கிறது.

நிறைவு பெறுகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment