Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

எல்லா விஷயங்களையும் யோசிச்சுப் பார்த்து எச்சரிகையா இருக்கிறது நல்லதுதான். அதுக்காக அளவு கடந்த முன் ஜாக்கிரதையா இருந்தா அது ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். நான் பொதுவாச் சொல்றேன், அச்சம், நம்ம ஆயுளைக் குடிகிற அபாயமான உணர்வு.

நியாயமான, தேவையான பயங்கள் இருக்கலாம்.பலருக்கு பயவுணர்ச்சி எல்லை தாண்டியும் போயிடுது. உதாரணமாக, சில பெரிய அதிகாரிகள், தங்கள்பணிகளிலே ஏதாவது செய்யக்கூடாத்தை செய்து மாட்டிக்கிறாங்க. உடனே நல்ல அதிகாரிக கூட வலை செய்தாலே வில்லங்கம் வந்துடுமோ அப்படீன்னு பயந்து செய்ய வேண்டிய வேலேயையே செய்யாம விட்டுடறாங்க.

நான் பொதுவாச் சொல்றேன், ரயிலிலே டிக்கட் வாங்காத பயணி தண்டைக்கு ஆளாகிறபோது, டிக்கெட் வாங்கியவரும் தேவையில்லாம பயப்படற மாதிரி வீண் கற்பனைகளை வளர்த்து வேண்டாத அச்சத்தை ஏற்படுத்திக்கறதிலே எந்த லாபமும் கிடையாது.

அச்சத்தில் ஏற்படுகிற சக்தி விரயம், ரொம்ப அதிகம். சின்னதா பயவுணர்ச்சி ஏற்பட்டாலே முகம் வியர்த்து, கை கால், நடுங்கி, தலை சுற்றி, பி.பி. எகிறி, என்னென்னமோ ஆயிடுது.

அதனாலதான் மகாகவி பாரதி அச்சமில்லை, அமுங்கதில்லை நடுங்குதலில்லை, நாணுதலில்லை அப்படீன்னு பாடினார்.

பயம் என்பதே அடிப்படையிலே பாதுகாப்பில்லாத மனநிலையோட அடையாளம்தான். மற்றவர்களுக்கு ஏற்படா துன்பம், வீழ்ச்சி இதையெல்லாம் பார்த்து, இது நமக்கும் வந்திடுமோ அப்படீங்கற நடுக்கம்தான் இதுக்கெல்லாம் காரணம், நான் பொதுவாச்சொல்றேன், இது ஒருமன நோய மாறக்கூட வாய்ப்பிருக்கு.

ஆரோக்கியமாக இருக்கிறவர் ஆம்புலன்ஸைப் பார்த்தா பயப்படறது, குற்றமே செய்யாதர் காவல் துறையைப்பார்த்தா நடுங்கறது. நேர்மையான நிறுவன அதிபர் மோசடி செய்திகள் வந்தாலே மனம் பதர்றது, இதெல்லாம் அளவு கடந்த முன் ஜாக்கிரதை உணர்ச்சி காரணமா ஏற்படதுதானே தவிர வேறில்லை.

அரைகுறை ஜோசியர் யாராவது எச்சரிச்சிருந்தா இன்னும் கேட்கவே வேண்டாம். அச்சம், உச்சம் தொட்டுடும். நான் பொதுவாச் சொல்றேன், மத்தவங்க துன்பத்தை விட இன்பத்தை அதிகம் பார்த்து ரசிக்க ஆரம்பிச்சாலே இந்த மனநிலை மாற வாய்ப்பு அதிகமிருக்கு.

முட்களை மறந்து மலர்களைப் பார்க்கிற மனநிலையை வளர்த்தா வாழ்க்கை ரொம்ப சுகமாயிடும். மெல்ல மெல்ல அச்சத்திலிருந்து விடுபட்டு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதுதான் வெற்றக்கு வழி.

அச்சம் எப்போதும் அயர்வைக் கொடுக்கும்
ஊக்கம் ஒன்றே உயர்வைக் கொடுக்கும்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2002

நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கேள்வி – பதில்
கோடை தரும் கொடை
“சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
"சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
உள்ளத்தோடு உள்ளம்
இயற்கை உங்கள் நண்பனா? விரோதியா?