Home » Articles » இயற்கை உங்கள் நண்பனா? விரோதியா?

 
இயற்கை உங்கள் நண்பனா? விரோதியா?


ஜெயச்சந்திரன்
Author:

நீங்கள் ஒரு விற்பனையாளரா? ஏதேனும் ஒரு வகையில் விற்பனையாளர்தான். நீங்கள் விற்பது கருத்தாக இருக்கலாம்; பொருளாக இருக்கலாம்; சேவையாக இருக்கலாம். எதை விற்பினும் விற்பனையாளரே!

விற்பனையாளர் என்பதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். பெருமை கொள்ளலாம். ஏனெனில், ஒருவர் செல்வந்தர் ஆவதற்குரிய சிறந்த வழி விற்பனைத் துறைதான்.

ஒரு விற்பனையாளர் பத்து ரூபாய் மதிப்புள்ள ஒரு சோப்புக்கட்டியை விற்று ஒரு ரூபாய் இலாபம் பெறலாம். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையை விற்று ஓரிரு லட்சம் தரகும் பெறலாம்.

நீங்கள் பத்து ஆண்டுகளில் விற்பனை மூலமோ, நூறு விற்பனை மூலமோ அத்தொகையை நீங்கள் பெற முடியும்.

நீங்கள் ஓரிடத்தில் இருந்து விற்பனை செய்பவராயின் ஒன்று அல்லது பத்து அல்லது நூறு வாடிக்கையாளர் உங்களைத் தேடி வந்து வாங்கும்படி செய்ய வேண்டும். அதற்கு விளம்பரம் போன்ற உத்திகள் உங்களுக்கு கை கொடுக்கும்.

நீங்கள் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்பவராயின் ஒன்று அல்லது பத்து அல்லது நூறு வாடிக்கையாளரைத் தேடிச்சென்று விற்பனை செய்ய வேண்டும். இதை நேரடி விற்பனை என்று கூறலாம்.

நேரடி விற்பனையை சுய விற்பனை என்றும் பல்நிலை விற்பனை என்றும் இருவகையில் செய்யலாம். பல்நிலை விற்பனை என்னும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் தற்போது இந்தியாவில் செல்வாக்குப் பெற்று வருகிறது.

தங்கி விற்பனை செய்பவராயினும், நகர்ந்து விற்பனை செய்பவராயினும், சுய விற்பனை செய்பவராயினும், பல்நிலை விற்பனை செய்பவராயினும் பத்து ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து வறுமையைத் துரத்தி அடித்துவிட முடியும்.

அவ்வாறு வறுமையை விரட்டுவதற்கு இயற்கையே உங்களுக்கு உதவுகிறது. இயற்கை உங்கள் நண்பனா? விரோதியா? நிச்சயமாக இயற்கை உங்கள் நண்பன்தான்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்பதும், உயர வேண்டும் என்பதும், முன்னேற வேண்டும் என்பதும் இயற்கைச் சட்டம்.

நீங்கள் வெற்றி பெறுவதற்கு, சாதிப்பதற்கு, விரும்பியதை அடைவதற்கு உதவி செய்ய இயற்கை, கரம் நீட்டிக் காத்திருக்கிறது. இயற்கையின் கரத்துடன் உங்கள் கரம் இணையும்போது இயற்கையின் கையிலுள்ள வெற்றி உங்கள் கைக்கு வந்துவிடுகிறது.

இயற்கையின் கரத்துடன் உங்கள்கரத்தை இணைப்பது எப்படி? ஒவ்வொரு நாளும் விற்பனைக்காக இருவர் அல்லது பத்து வாடிக்கையாளர்களைச் சந்தித்து ஆர்வத்துடனும், அக்கறையுடனும் முயற்சி செய்யாமல் நான் இரவுணவு சாப்பிட மாட்டேன் என்று நீங்கள் சபதம் எடுங்கள். நிறைவேற்றுங்கள்; இயற்கையின் கரத்துடன் உங்கள் கரம் இணைந்து விடுகிறது.

இதை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றால் மூன்று முதன்மையான இயற்கைச்சட்டங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

1. சராசரி விதி

நீங்கள் பேருந்தில் அமர்ந்திருக்கிறீர்கள். லாட்டரிச்சீட்டு விற்பனையாளர் பேருந்தில் ஏறுகிறார். சீட்டு விற்பனையாளர் பேருந்தில் ஏறுகிறார். அவருக்குத் தெரியாது. ஆயினும் “ஐந்து ரூபாய்க்கு ஒரு கோடி” என்று கூவிக்கொண்டே அனைவர் மடியிலும் லாட்டரிச் சீட்டுக்களைப் போடுகிறார்.

பேருந்திலுள்ள ஐம்பத்தைந்து பேரும் வாங்குபவர்கள் என்று அவர் நினைக்கவில்லை. வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. விற்றுவிட்டு இறங்கிவிடுகிறார். பத்து ரூபாய் வருமானம் கிடைத்துவிட்டது. இருபது பேருந்தில் ஏறி இறங்கினால் இரு நூறு ரூபாய் வருமானம் வந்துவிடுகிறது.

இருபது பேருந்துகளில் ஆயிரம் பேரிடம் முயற்சி செய்து நூறு விற்பனை செய்து வெற்றி பெற்றுவிட்டார். நீங்கள் பத்து பேரைச் சந்தித்து முயல, வேண்டும். நூற்றுக்கு பத்து, பத்திற்கு ஒன்று சராசரி விதி உங்களுக்கு வெற்றி தேடித்தர தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறது. செயல்படுங்கள். வெற்றி பெறுங்கள்.

2. வெற்றி மனப்பான்மை விதி

உங்கள் துணைவியார் துணி துவைத்து மொட்டை மாடியில் காயப்போடுகிறார். உங்களுக்கு அபிமானமுள்ள வெள்ளைச் சட்டை ஒன்று தவறி வீட்டோரம் இருந்த குட்டையில் விழுந்துவிட்டது. குட்டையில் விழுந்துவிட்டது. குட்டையில் பாசிபிடித்த பச்சை நீர் தேங்கி நிற்கிறது. உங்கள் சட்டை ஒரு மாத்த்தின் ஏழுநூற்றிருபது மணி நேரம் நீரில் ஊறிவிடுகிறது.

அதன் பின்னர் அச்சட்டையைக் கண்டுபிடித்து எடுத்து வந்து பச்சை வண்ணத்தைப் போக்க உங்கள் துணைவியார் பலவாறும் முயல்கிறார். ஆனால் முடியவில்லை.

நீங்கள் விற்பனைக்காக தினமும் பத்து பேரிடம் பேசினீர்கள். ஒவ்வொவரிடமும் அரை மணிநேரமாக ஐந்து மணிநேரம் பேசினீர்கள். மாத்த்தில் நூறு மணி நேரம்பேசினீர்கள். அந்நேரம் முழுதும் நீங்கள் வெற்றி, சாதனை, இலட்சம், கோடி என்று எண்ணிக்கொண்டே இருந்தீர்கள்.

அதாவது உங்கள் மனமாகிய மட்டை அல்லது சட்டை வெற்றிச் சிந்தனை என்னும் குட்டையில் ஊறிவிட்டது. இனி உங்களை விட்டு வெற்றியைப் பிரிக்க முடியாது.

3. பழக்க விசை விதி

தட்டெழுத்துப் பயிற்சிக்கு செல்கிறீர்கள். கீ போர்டில் விரலால் அழுத்துவது சிரம்மாக தோன்றுகிறது. விரல்கள் வலிக்கின்றன. தொடர்ந்து செய்யும்போது செயல் பழக்கமாக, வழக்கமாகி, பயிற்சியாக, முதிர்ச்சி அடந்து விசை உருவாகி கீ போர்டை பார்க்காமலே டைப் செய்யும் அளவுக்கு வெற்றி தேடித் தந்துவிடுகிறது.

விற்பனை செய்வதற்காக ஒரு நாளில் பத்துப் பேரிடம் பேசுகிறீர்கள். முப்பது நாளில் முன்னூறு பேர், ஓராண்டில் மூவாயிரத்து அறுநூறுபேர், பத்து ஆண்டில் முப்பத்தாறாயிரம் பேரை அணுகி குறைந்தது ஐயாயிரம் பேரிடம் விற்பனை செய்து விடுவீர்கள். ஆண்டுக்கு ஆண்டுக்கு உங்கள் வெற்றியின் சதவீதம் அதிகரிக்கும். நீங்கள் பத்து ஆண்டுகளுக்குள் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுவீர்கள்.

ஆக, சராசரி விதியும், வெற்றி மனப்பான்மை விதியும், பழக்கவிசை விதியும், இன்னும் இதுபோன்ற இயற்கை விதிகளும் உங்களுக்கு வெற்றித்தேடித்தர தயாராக காத்திருக்கின்றன.

இன்று விற்பனைத்துறையில் சிலர் தோற்பதற்குக் காரணம் ஒருவர், இருவரை அணுகி “வேண்டாம்” என்னும் பதிலைப் பெற்றவுடன் பீதி அடைந்து பின்வாங்கிவிடும் அவர்தம் மனப்பான்மையே.

விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் ஒவ்வொரு நாளும் பத்துப்பேரை அணுகுவேன். விற்க முயல்வேன் என்றுமுடிவெடுத்துச்செயல்படுகிறவரிடம் பின்வாங்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லாமற் போய்விடுகிறது.

ஒவ்வொரு நாளும் முயற்சி தொடர்வதால் விட முயற்சியும், தொடர் முயற்சியும் இயல்பாகவே வந்துவிடுகின்றன.

தொடர் முயற்சியின்றி வெற்றி இல்லை என்று விற்பனையாளர் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

அம்மையார் ஒருவர் மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் அடிநீர்க் குழாய் ஒன்று இருந்தது. வழிப்போக்க் ஒருவர் அம்மையாரிடம் கேட்டார். “ஏம்மா! இதில் தண்ணீர் வரும்?”

அம்மையார் சொன்னார் “ஐயா! வரும். அடிங்க..! வழிப்போக்கர் இருபது முறை அடித்தார். “ஏம்மா! தண்ணீர் வரலையே!” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“ஐயா! வரும் அடிங்க” என்று அம்மையார் சொல்ல மீண்டும் இருபத்தைந்து தடவை அடித்தார். மீண்டும் ஒரு சந்தேகத்துடன் நிறுத்திவிட்டு முப்பது தடவை அடித்தார். தண்ணீர் வரவில்லை. ஏமாற்றத்தின் உச்சிக்கே போய்விட்டார்.

அதைப் பார்த்த அம்மையார் “ஐயா நான் அடிக்கிறேன்!” என்று கூறி முத்தோராவது தடவை அடிக்கும்போது தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டியது.

வழிப்போக்கர் மொத்தம் எழுபத்தைந்து தடவை அடித்திருந்தார். ஆனால் விட்டுவிட்டு அடித்தார். தோல்வியினால் ஏமாற நேர்ந்தது.

அம்மயார் முப்பத்தொரு தடவைதான் அடித்தார். ஆனால், தொடர்ச்சியாக விடாமல் அடித்தார். வெற்றியடைந்து மகிழ்ந்தார்.

நீங்கள் என்ன பொருளை விற்பனை செய்கிறீர்களோ, அதை நம்பிக்கையுடன், எதிர்பார்ப்புடன், விடாமல், தொடர்ச்சியாக விற்கமுயலும்போது இயற்கைச் சட்டங்களில் படி நீங்கள் வெற்றிபெறும் உரிமை பெற்றுவிடுகிறீர்கள்.

உங்கள் மகன் சைக்கிள் ஓட்டிப் பழகியபோது கவனித்தீர்களா? தொடக்கத்தில் கீழே விழுந்து முட்டியை உடைத்துக்கொண்டான். இருப்பினும், சைக்கிள் ஓட்டும் முயற்சியை அவன் கைவிடவில்லை. விழுந்ததும் எழுந்தும் மீண்டும் மீண்டும் ஓட்ட முயற்சித்தான். செயல், பழக்கம், வழக்கம், பயிற்சி, முதிர்ச்சி, விசை, வெற்றி என்று படிப்படியாக மாறி சைக்கிளின் கைப்பிடி கம்பியைப்பிடிக்காமலே ஓட்டுமளவுக்கு வெற்றி அடைந்துள்ளான்.

விற்பனையிலும் இவ்வாறே வெற்றி அடைய முடியும் எதை விற்பனை செய்கிறீர்களோ, எதில் பத்து ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க விரும்புகிறீர்களோ எதை விற்று வருமானம் தேடி வறுமையை விரட்ட வேண்டும் என்று திட்டமிட்டீர்களோ அந்தப் பொருளை விற்பதற்காக, ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்துப் பேரையாவது சந்தியுங்கள். ஆர்வத்துடன், அக்கறையுடன் விற்க முயலுங்கள்.

அம்முயற்சி விடாமுயற்சியாகவும், தொடர் முயற்சியாகவும் அமையும்போது இயற்கைச் சட்டங்களின்படி வெற்றி உங்கள் கைக்கு வந்துவிடும்.

நீங்கள் வறுமையை விரட்டிவிடுவீர்கள். வளமையைத் திரட்டிவிடுவீர்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2002

நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கேள்வி – பதில்
கோடை தரும் கொடை
“சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
"சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
உள்ளத்தோடு உள்ளம்
இயற்கை உங்கள் நண்பனா? விரோதியா?