Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

சாதனையின் அவசியம்

இது ஒரு ராஜஸ்தானிய கதை.

தாகூர் என்பவன், பானியா என்பவனிடம் நிறைய கடன் பெற்றுவிட்டான். பலமுறை கேட்டபோதும் தாகூர் திருப்பிக் கொடுக்கவில்லை.

ஒருமுறை தாகூர் வீட்டிற்குச்சென்று பணத்தைக் கொடுக்குமாறு பானியா கேட்டான். அப்போது வீட்டில் உறவினர்கள் பலரும் இருந்தனர். இது தாகூருக்கு அவமானமாகப் பட்டது. பானியாவை பழிவாங்கத் திட்டமிட்டான்.

பணம் கொடுப்பதாகச் சொல்லி, யாருமே இல்லாத ஒரு பாலைவனத்திற்கு பானியாவை அழைத்துச் சென்றான்.

“பணம் கேட்டு என்னை என் உறவினரகள் முன் அவமானப்படுத்தினாயே, இப்போது என்ன செய்ய போகிறாய்” என்று சொல்லி கத்தியை எடுத்தான் தாகூர்.

முன் ஜாக்கிரதையாய் இருந்த பானியா சொன்னான், “நீ இப்படி ஏடாகூடாம எதையாவது செய்வேனு தெரிஞ்சுதான், வரும்போதே ஒரு கடிதம் எழுதி வெச்சிட்டு வந்தேன்.அதுல, நான் வீடு திரும்பலைனா, தாகூர் பணத்தை என்னிடம் கொடுக்காமல், என்னை ஏமாற்றி கொலை செய்திருக்கலாம், இதை உடனே அரசருக்குத் தெரிவிக்கவும் என்று எழுதியுள்ளேன்” என்றான்.

ஓங்கிய கத்தியை கீழே இறக்கினான் தாகூர். குற்றம் செய்தவர்களுக்கு கடுந்தண்டனை கொடுப்பவன் அவர்களுடைய அரசன் என்பதை தாகூர் அறிவான்.

“சரி உன்னை உயிரோடு விடுகிறேன். ஆனால், மூக்கை மட்டும் வெட்டிவிடுவேன்” என்றான்.

“நீ வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டாய் என்று எழுதிக் கொடுத்துவிட்டால் என்னை விட்டுவிடுவாயா?” – பானியா.

“சரி விட்டுவிடுகிறேன். ஆனால், சாட்சிக்கு யாருமில்லையே” – தாகூர்.

“சரி நீ பணம் கொடுத்த ரசீதை கொடு”

“சாட்சி இல்லாத எந்த ரசீதுக்கும் மதிப்பில்லையே, சரி எதுக்கும் இந்த பாலைவன மரத்தையே சாட்சியாக வைப்போமா?”

“அதுவும் சரிதான். ஏனெனில் மனிதர்களைவிட மரமே நல்லது” என்ன நடந்ததென சொல்ல முடியாது என தாகூர் நினைத்தான்.

சரி என்று ஏற்றுக்கொண்டு அந்த மரத்தடியிலேயே ரசீதை எழுதி வாங்கிக்கொண்டு அவனை விட்டு விட்டான்.

ஆனால், அடுத்த நாளே அரசனிடமிருந்து ஒரு சம்மன் வந்தது தாகூருக்கு.

உடனே, அரசரிடம் விரைந்தான் அவன். அங்கே, பானியாவும் இருந்தான்.

“ஏன் வாங்கின பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை” அரசன் கேட்டான்.

“நான் கொடுப்பதற்கான ரசீது இருக்குது” என அந்த ரசீதை எடுத்து நீட்டினான்.

“உனக்கு அந்த பாலைவன மரந்தான் சாட்சியா?”

“ஆமாம், அங்கேதான் மனிதர்கள் இல்லையே!”

“அப்போ… மனிதர்களில்லாத பாலைவனத்திற்கு பானியாவை அழைத்துச் சென்றதை நியே ஒப்புக்கொண்டாய்” அரசன்.

“இல்லை. இல்லை. அங்கு எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது”.

“எப்படியிருந்தாலும் இந்த ரசீது செல்லாதே. ஏன்னா, அதுல பானியாவுடைய கையெழுத்தே இல்லை. பாலைவன மரம் சாட்சி என்று மட்டுந்தானே எழுதியுள்ளது”

அதைக்கேட்டதும் அதிர்ந்துவிட்டான் தாகூர். பானியா சாமர்த்தியமாக தன்னையும் காப்பாற்றி, அரசனிடமும் அவனுடைய எதிரியை அடையாளம் காட்டிவிட்டான்.

சிக்கல் என்பது என்ன?

வாழ்க்கையின் ஒரு அங்கம்.

அவ்வப்போது வரக்கூடியது.

முற்றிலும் தவிர்க்க முடியாதது.

எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்க இயலாத்து.

தட்டிக்கழிக்கக் கூடாதது.

தொடர்கதையானது.

நம் திறமையை சோதனை செய்வது.

இத்தனை சொன்னாலும் வெற்றியின் திருப்புமுனைக்கு நம்மை அழைத்துச் செல்வது சிக்கல்தான்.

இனி, ஒரு உரையாடலைப் பார்ப்போம்.

“உங்களுக்கு என்னாச்சு?”

“மனசுல அமைதியில்லை”

“வேறென்ன?”

“தூக்கமேயில்லை”

“எதனால்?”

“என்னுடைய தலையெழுத்தே தோல்வி என்பதுதான்”

“ஏன் அப்படி?”

“நான் இதுவரை செய்த்தெல்லாமே தோல்வியில்தான் முடிந்து”>

“ஏன்?”

“அதைச் செய்யாதே. இதைச் செய்யாதே, என என்னைச் சுற்றியுள்ளவங்க எல்லாரும் சொல்வாங்க. ஆனாலும், எதைச் செய்தாலும் தோல்விதான். உடனே, அப்பவே சொன்னேனே கேட்டியா? என்பார்கள்?”

“சரி, இப்போ என்னதான் நலை?”

“நான் ஒரு திவாலா, உலகே என்னைப்பார்த்துசிரிக்குது. நான் தோல்வியாளன் என்பதற்கு இது ஒன்று போதாதா?”

“வெற்றிபற முடியும் என எப்போதாது நினைதீர்களா?”

“நினைப்பதுதண்டு, ஆனாலும் தோல்வி எண்ணமே என்னை ஆட்டுவிக்கும்”

“ஏன் அப்படி?”

“நான் எதைச் செய்தாலும் எங்கேயாவது தவறு நடக்குதே!”

“தவறு நடந்தால் அது தோல்வியா?”

“அப்படியில்லை, அடுத்ததா எதைச் செய்யவும் பயமாத்தானே இருக்குது.”

“பயம் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையாக உள்ள இயல்புதான்”

“ஆனா என்னுடைய பயம் மற்றவங்க போலல்லவே, என்னுடைய பிரச்சினை தனியானது என்பதைவிட உங்களுக்கென்று தனித்தன்மை உண்டு என்பதை உணர்ந்து, நீங்க நீங்களாகவே இருங்க. உங்களுக்கு மற்றவர்களைவிட ஒரு சில விஷயங்களில் திறமை குறைவாக இருக்கலாம். ஆனால் பல விஷயங்களில் மற்றவர்களைவிட திறமை அதிகமாகவே இருக்கும். இதுதான் நியதி. அந்தத் திறமை இதுவரை வெளிப்படாமல் இருந்திருக்கும். பயன்படுத்தி சிக்கலைச் சந்தியுங்கள்.”

“எதுவானாலும் எதிர்கொள்ளுங்கள்”.

“சமாளித்துப் பாருங்கள்”

“அதிலிருந்து வெளிவருவதை கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் வெற்றி காண முடியும். எதையும் சமாளிக்க முடியும்.”

“கேட்கும்போது நல்லாத்தான் இருக்குது. ஆனா, நேரா சந்திக்கும்போதுதான் உலகமே சூன்யமா தெரியுது?”

“என்ன அசம்பாவிதம் ஆகுமோன்னு பயப்படறீங்களா? சரி என்ன நடக்கும்னு எதிர்பார்க்கிறீர்களோ அதை முன்பே எழுதுங்கள். ஒருவேளை அப்படி வந்தால் அதைத் தீர்க்க என்ன வழி என்பதையும் யோசியுங்கள். குழப்பமில்லாமல் தெளிவாக முடிவெடுங்கள்.

அதைத் தடுப்பதற்கான வழியிருந்தால் அதை நடைமுறைப்படுத்துகள். தவிர்க்க முடியவில்லையேல் நிதானமாகவும் துணிச்சலுடனும் எதிர்கொண்டு சமாளியுங்கள். வெற்றி நிச்சயம்.”

சில பொன்மொழிகளைப் பார்ப்போம்.

“விழிப்பதற்கே உறக்கம்”

“வெல்வதற்கே தோல்வி”

“எழுவதற்கே வீழ்ச்சி”

எப்படி விழுந்தோம் என்பதைப் பற்றி கவலையில்லை. அதிலிருந்து எப்படி எழுந்தோம் என்பதே வெற்றியை நிர்ணயிக்கும்.

“நேற்று என்பது அனுபவம்.

நாளை என்பது எதிர்பார்ப்பு

இன்று ஒன்றுதான் வாய்ப்பு – அதை பயன்படுத்திக்கொள்”.

அப்படி ஒவ்வொரு இன்றையும் செயல்படுத்தினால், ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பாகிவிடும்.

உயிர்வாழ உணவும், காற்றும் எப்படி அவசியமானதோ அதைப்போலவே சாதனைகளுக்கு சிக்கல்களைச் சமாளிக்கும் திறமையும் அவசியமே.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment