Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

சமூகம், அரசியல், பொருளாதாரம், ஆன்மீகம் என்று அத்தனை தளங்களிலும் பண்பாட்டு முதிர்ச்சி மிக்க காட்சிகள் மெல்ல மெல்ல அரங்கேறுகின்றன.

காலைக் கதிரவனின் கிரணங்கள் எழ எழ இருள் மெல்ல விலகுவது மாதிரி, தொய்வு தெரிந்த துறைகளில் கூட மறுமலர்ச்சிக்கான அடையாளங்கள் அரும்பியிருக்கின்றன.

நூதனக் குற்றங்கள் தோன்றியிருக்கின்றனதான். ஆனாலும் குற்றவாளிகள் தப்புவதில்லை. தலைவர்கள் மத்தியில் பொறுப்புணர்வும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டிய வேளையிது.

மதத்தின் பெயரிலான மோதல்கள் மறுபடியும் தலை தூக்கியுள்ள நிலை இந்தியாவை எச்சரிக்கும் குரலாக எழந்திருக்கிறது.பூமியின் பெயரால் காஷ்மீரிலும், சாமியின் பெயரால் அயோத்தியிலும் எழுகிற யுத்தங்கள், ஆயிரமாயிரம் ஆண்டுகால ஆன்மீகப் பக்குவத்திற்குப் பொருந்தாத நிகழ்வுகள்.

பொதுமக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதை ஊடக்கள் வாயிலாய் உணர்த்த வேண்டும். மனித நேயத்தை திசைகளிலெல்லாம் பணி மட்டுமல்ல. உடனடியாய் மேற்கொள்ள வேண்டிய பணியும் கூட!

நம்பிக்கையுடன்

ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2002

நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கேள்வி – பதில்
கோடை தரும் கொடை
“சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
"சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
உள்ளத்தோடு உள்ளம்
இயற்கை உங்கள் நண்பனா? விரோதியா?