– 2002 – April | தன்னம்பிக்கை

Home » 2002 » April

 
 • Categories


 • Archives


  Follow us on

  பயிலரங்கம்

  மதுரை

  நாள் : 19.04.2009, ஞாயிற்றுக்கிழமை
  நேரம் :காலை 10.00 மணி முதல் பகல்1.00 மணி வரை
  பயிற்சியளிப்பவர் : முனைவர் திரு.பிரணதார்த்திஹரன், MA, Ph.D.,

  Continue Reading »

  நம்பிக்கையும் நானும்

  டாக்டர் கு. ஞானசம்பந்தன் பேசுகிறார்.

  உங்கள் இளமைக்காலம் பற்றி?

  மதுரைக்குப் பக்கத்திலுள்ள சோழவந்தான் எனது சொந்த ஊர். என் தந்தை திரு. குருநாதன் ஒரு தமிழிலக்கியங்களில் கடுமையான பயிற்சியுண்டு. என்னை தினம் தினம் சில பாடல்கள் ஒப்பிக்கச்சொல்வார். அவர் எனக்குச் சொன்னது மன்னம் செய் என்பதுதான்.

  Continue Reading »

  வெற்றியின் மனமே

  சாதனையின் அவசியம்

  இது ஒரு ராஜஸ்தானிய கதை.

  தாகூர் என்பவன், பானியா என்பவனிடம் நிறைய கடன் பெற்றுவிட்டான். பலமுறை கேட்டபோதும் தாகூர் திருப்பிக் கொடுக்கவில்லை.

  Continue Reading »

  ஓ அன்றில் பறவைகளே!

  நினைத்தபடி எல்லாம் நடந்துவிட்டால்? மனித இனம் எப்போதோ அழிந்திருக்கும்.அதனால்தான் ஒன்றை நினைத்தால் வேறொன்றாக நடக்கிறது. பல சமயங்களில் எதுவுமே நடக்காமலும் போய்விடுகின்றது. சில சமயங்களில் விபரீதமாகவும் நடந்துவிடுகிறது.

  Continue Reading »

  பொதுவாச் சொல்றேன்

  எல்லா விஷயங்களையும் யோசிச்சுப் பார்த்து எச்சரிகையா இருக்கிறது நல்லதுதான். அதுக்காக அளவு கடந்த முன் ஜாக்கிரதையா இருந்தா அது ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். நான் பொதுவாச் சொல்றேன், அச்சம், நம்ம ஆயுளைக் குடிகிற அபாயமான உணர்வு.

  நியாயமான, தேவையான பயங்கள் இருக்கலாம்.பலருக்கு பயவுணர்ச்சி எல்லை

  Continue Reading »

  கேள்வி – பதில்

  மனசுவிட்டுப் பேசுங்க

  சந்தேகம்

  எனக்கு மனதில் அடிக்கடி சந்தேகம் உண்டாகிறது. பிறர் எப்போதும் என்னை ஏமாற்ற திட்டமிடுவதாக எண்ணுகிறேன். சில சமயங்களில் அவ்வாறு ஏமாந்தும் போயிருக்கிறேன். அதனால் எப்பொழுதும் இனம்புரியாத ஒருவித பயத்துடனேயே இருக்கிறேன். இதனால் மன அமைதியின்மை உண்டாகிறது என்ன செய்யலாம்?

  (பெயர், ஊர் வேண்டாம்)

  சந்தேகம் குடி கொண்ட மனதில் அமைதி இருக்காது. ஏனெனில் அது ஒரு நோய். அடுத்து, மனதில் சந்தேகம் இருந்தா, மறவங்க உங்களை ஏமாற்றுவதும் ஈஸிதான். அதுக்கு ஒரு கதையை உதாரணமா சொல்றேன்.

  ஒரு பலவான் தன் தோளில் ஒரு ஆட்டை போட்டுகிட்டு போயிட்டிருந்தான். அந்த ஆட்டை பறிப்பதறகு நாலு திருடர்கள் திட்டம் போட்டார்கள்.

  ஆட்டைக் கொண்டு வந்தவன்கிட்ட முதல் திருடன் சொன்னான், “என்ன இது, ஓநாய் மாதிரி இருக்குது. அதை தோளில் போட்டிருக்கியே?”

  இதைக்கேட்டதும், ஆட்டுக்காரனுக்கு சிரிப்பு வந்தது. இது ஓநாய் இல்லை; ஆடுதான் என்று சொல்லிட்டு அதைப்பத்தி கவலைப்படாமல் போயிட்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம்கூட சந்தேகம் வரல.

  இன்னும் கொஞ்ச தூரம் போனதும் இரண்டாவது திருடன் எதிர் பட்டான். “என்னங்க இது ஓநாயை கழுத்திலே போட்டிருக்கீங்க” என்றான்.

  இப்போது அவனுக்கு ஒரு சிறு சந்தேகம். ஒருவேளை ஓநாயா இருந்துட்டா என்ன பண்றதுன்னு மனசுக்குள்ள ஒரு நெருடல். இருந்தாலும் ஆடுதானேன்னு மனசுக்கு சமாதானம் சொல்லிட்டு போய்க் கொண்டிருந்தான்.

  இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மூன்றாவதுதிரடன் எதிர்பட்டான். “என்னங்கண்ணே! பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கீங்க. ஓநாயை கழுத்தில் போட்டுட்டு போறீங்களே. போனமாசம் கூட ஒருத்தனை ஓநாய் கடிச்சு செத்துட்டான். இதுகூட தெரியலையா?” என்றான்.

  இப்போ அவனுக்கு அந்த ஆடு ஒருவேளை ஓநாய்தான் போல இருக்கு என்ற சந்தேகம் நல்லா வந்திடுச்சு.

  மனசுல பயம் இருந்தாலும் அதை இழக்க மனசில்லை. படபடப்போட நடந்துபோயிட்டிருந்தான்.

  இன்னும் கொஞ்சம் போனதும் நான்காவது திருடன் எதிர்பட்டான். “ஐயோ.. ஓநாய்.. ஓநாய்..” என கத்த ஆரம்பித்தான்.

  இப்போ அவனோட சந்தேகம் உறுதியாச்சு. ஐயோ… சாமி! எனக்கு இந்த வம்பு எதுக்குன்னு சொல்லிட்டு கழுத்திலிருந்த ஆட்டை தூக்கி வீசிவிட்டு போயிட்டான்.

  இதைப்போல எந்த ஒரு சந்தேகம் மனசில வளர்ந்துட்டாலும் அது நம்மை இழப்பில் கொண்டுபோய் விட்டுவிடும்.

  இனி அடுத்தமுறை சந்தேகம் மனசுல வந்தா அது சரிதானா என்று ஆராயுங்கள். அந்த சந்தேகம் சரியில்லை என்றால் ஒதுக்கித் தள்ளிவிடுங்கள்.

  ஒருவேளை சரியான்னு தெரியலைன்னா எச்சரிக்கையா மட்டும் செயல்படுங்க.

  அதையும் மீறி சிலர் ஏமாற்றிவிட்டால் ஒரு உலக நியதியை நினைச்சு சமாதானம் அடையுங்கள். பிறரை ஏமாற்றுகிற மனிதன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான் என்பதே உண்மை. அடுத்த முறை அவரிடம் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

  ஒருவேளை உங்களுடைய சந்தேகம் உங்களை இயல்பாக செயல்படாத அளவுக்கு பாதிச்சிருந்தா மனநல சிகிச்சையை செய்வதுதான் நல்லது.

  இங்கு சிலருடைய சந்தேகங்களை பார்ப்போம்.

  வீட்டைப் பூட்டிவிட்டு வந்ததும் “பூட்டினேனா?” என்ற சந்தேகம் இதனைச் சிறிது தூரம் போனவர் திரும்பி வந்து பூட்டைப்பார்ப்பார். “ஆம் பூட்டித்தான் இருக்கும என்று திரும்பவும் புறப்படுவார்.

  “அட்டே, அந்தப் பூட்டை இழுத்துப்பார்க்காமல் விட்டுட்டேனே” என மீண்டும் திரும்பி விடுவார்.

  பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டு சென்றபின், “அட்டே அது தாழிட்டுப் பூட்டியிருந்ததா? திறந்து வெச்சு பூட்டியிருந்ததா? எனக் கதவை தள்ளிப்பார்க்காமல வந்துட்டேனே” என மீண்டும் திரும்பி விடுவார்.

  இப்படி சந்தேகத்தின் மேல் சந்தேகம் தொடர்ந்து வருவது ஒரு நோய்.

  இன்னும் சிலருக்கு சற்று வித்தியாசமான சந்தேகங்கள் வரும். பிறர் எதைச் செய்தாலும் தம்மை எதிர்த்து திட்டமிட்டு செய்கிறார்கள் என நினைப்பார்கள். தன்னைக் கொலை செய்ய சதித்திட்டம் நடக்கிறது என்பார்கள்.

  அல்லது பிறர் எதேச்சையா செய்கின்ற செயலை நமக்காகத்தான் செய்தார்கள் என்றும் நினைப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு இளம்ப எண் அவரது வீட்டின் வழியாக சென்றாள், அவள் தன்மீது காதல் கொண்டுதான் அவ்வழியே வருகிறாள் என நினைப்பார்கள்.

  ஒருவளை அடுத்தநாள் அவள் வராவிட்டால், தான் காதலுக்கு சம்மதிக்க வில்லை என நினைத்துதான் அவள் வரவில்லை என நினைப்பார்கள்.

  இதெல்லாம் பாதிக்கப்பட்ட மன நிலையே. அவசியமான சிகிச்சை செய்தல் வேண்டும்.

  கோடை தரும் கொடை

  கோடை வந்துவிட்டாலே குழந்தகளுக்குக் கொண்டாட்டம்தான். பள்ளிக்குச்செல்லத் தேவையில்லை. புத்தக மூடைகளைச் சுமக்கத் தேவையில்லை. வீட்டுப்பாடம், தேர்வு போன்ற சுமையான தொல்லைகள் இல்லை.

  Continue Reading »

  "சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்

  1. இந்த உலகமே ஒரு விதமான சிறைச்சாலைதான்.

  2. வாழ்க்கையில் அவரவர் அறிவு, மனோ பலத்திற்கு தகுந்தவாறு கஷ்டங்கள் வருவதால், ஒவ்வொருவருக்கும் அவரவர் கஷ்டங்கள் பெரிதாக தோன்றும்.

  Continue Reading »

  “சிந்தனைச்சிற்பி சி.கொ.தி.மு.வின் சிந்திக வைக்கும் கருத்துகள்

  1. இந்த உலகமே ஒரு விதமான சிறைச்சாலைதான்.

  2. வாழ்க்கையில் அவரவர் அறிவு, மனோ பலத்திற்கு தகுந்தவாறு கஷ்டங்கள் வருவதால், ஒவ்வொருவருக்கும் அவரவர் கஷ்டங்கள் பெரிதாக தோன்றும்.

  Continue Reading »

  வணக்கம் தலைவரே!

  வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொள்வது, வாழ்க்கைக்குப் பயன்படுவது இரண்டுமே ஒரு மனிதனை இலட்சியவாதியாய் மாற்ற வல்லவை.

  இலட்சிய நோக்கம் ஒரு மனிதனுக்குள் வேர்விடும் போது, வெற்றிகள் கனியும் நேரம் வெகு தூரத்திலில்லை.

  Continue Reading »