Home » Articles » வேலை தேடுகிறீர்களா?

 
வேலை தேடுகிறீர்களா?


admin
Author:

வழிகாட்டுகிறார் ரமேஷ் பிரபா

(திருச்சியில் நடைபெற்ற தன்னம்பிக்கை வாசகர் வட்ட துவக்க விழாவில் பங்கேற்ற திரு. ரமேஷ் பிரபா, வேலை வாய்ப்புத் தேடுதல், தகுந்த துறையைத் தேர்வு செய்தல், வேலை விட்டு வேலை மாறுதல் போன்றவை குறித்து விரிவாகப் பேசினார். அவற்றிலிருந்து சில பகுதிகள்.. உங்களுக்காக)

போட்டிகள் குறைவாகவும், பயன் கூடுதலாகவும், உள்ள பல துறைகளையும், அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே, அது கடினமாயிருக்கும் என்று நாமாகவே கருதிக்கொண்டு தவிர்த்து விடுகிறோம்.

நான் – கலெக்டர் கனவுகள்’ என்கிற தொடரை எழுதியதன் நோக்கமே, போதிய பின்புலம் இல்லாமலேயே மின்வசதி, பஸ் வசதி இல்லாத கிராமங்களிலிருந்து முயற்சியை அடிப்படையாகக் கொண்டு பல ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவானவை ஆதாரமாக உணர்த்தத்தான்.

இன்னும் கூட “கல்வி” என்றால் டாக்டர் அல்லது இன்ஜினியர் கல்விதான் என்கிற தவறான எண்ணம் நிலவுகிறது. ஆயிரக் கணக்கில்மருத்துக் கல்லூரிகளும் உருவாகியுள்ள நிலையில் இந்தக் கல்விக்கன்று வேலை வாய்ப்பு அதிகம் இல்லை.

பல புதுமையான துறைகள் தோன்றியுள்ளன. உதாரணத்துக்கு டிரைகிளீனிங் எனும் சலவைத் தொழிலுக்கு பிரத்யேகப் பட்டப்படிப்பே உள்ளது. அந்தப் பட்டம் பெற்றவர்கள் நட்சத்திர விடுதிகளில் பல்லாயிரக் கணக்கான ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர முடியும்.

ஆனால், இதுபோன்ற புதிய துறைகளின் சிறப்புத் தெரியாமல் புறக்கணிப்பதால் நஷ்டம் என்னவோ நமக்குத்தான். விளம்பரத்துறையில் 4000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகின்றன. இதில் பல பிரிவுகளில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் உங்கள் தகுதிக்கும், ஆர்வத்திற்கும் பொருத்தமான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தனியார் துறையை தேர்வு செய்வதில் இன்னும் தயக்கம் இருக்கிறது. அரசு வேலையும் இப்போது அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. கால்காசு என்றாலும் கவர்மெண்ட் காசு என்றிக மனோபாவம் உள்ளது. இதையே திருப்பிச் சொல்லிவிடலாம். கவர்ன்மென்ட் காசு என்றால் கால் காசு தான். முழுக்காசு தேவை என்றால் தனியார் துறைக்குத்தான் வரவேண்டும்.

விண்ணப்பங்களுக்கு என்று பொதுவான ஒரு படிவத்த அனுப்பவதும் தவறு. உங்கள் தகுதிகள், நிறுவனத்தில் நீங்கள் கோரும் பணியிடம் ஆகியவற்றைத் தெளிவாகவும், குறிப்பாகவும் எழுதி அனுப்புவதே சிறந்தது. விண்ணப்பம் எழதுவதில் நீங்கள் காட்டும் அக்கறை, உங்கள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும். சிலர் சிறுசிறு விஷயங்களில் கூட அலட்சியம் காட்டுவதுண்டு. அவசரத்தில் கையெழுத்து கூட போடாமல் விண்ணப்பத்தை அனுப்பி வைத்து விடுவார்கள்.

ஐந்து வருட அனுபவம் இருந்தால் நல்லது என்று சில நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும். உடனே, மூன்று வருட அனுபவம் உள்ளவர்கள், நான்கு வருடம் அனுபவம் உள்ளவர்கள், நான்கு வருடம் 11 மாதம் அனுபவம் உள்ளவர்கள்கூட விண்ணப்பிக்காமல் இருந்து விடுவார்கள். இது தவறு. எதற்கும் முயற்சி செய்வோம் என்று விண்ணப்பம் ஒன்று அனுப்பி வைப்பதே புத்திசாலித்தனம்.

தனித் திறமைகள் என்கிற பகுதியில் உங்கள் உண்மையான தனித் திறமைகளை மட்டுமே குறிப்பிட வேண்டும். ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக தபால் தலை சேகரித்தல் என்று இல்லாத ஒரு பழக்கத்தை சிலர் குறிப்பிடுவார்கள்.

தேர்வாளர் அதுவரை துறை சார்ந்த கேள்விகளையே மற்றவர்களிடம் கேட்டு அலுத்துப் போய் உங்களிட்ம தபால் தலைகள் பற்றிக்கேட்கலாம். அல்லது அவருக்குத் அந்தத் துறையில் ஈடுபாடு இருந்து உங்களிடம் ஆர்வமாகக் கேட்கத் துவங்கலாம். அப்போது நீங்கள் தடுமாறினால் உங்கள் மீதான மதிப்பு குறையும்.

எதிர்பார்க்கும் சம்பளம் என்பதில் அளவுக்கதிகமாக கேட்பது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தாது. ஒரு நிறுவனத்திற்குள் முதலில் நுழைந்து விடுவதே முக்கியம். வேலை வாய்ப்பில் பாதுகாப்பு அவ்வளவு அவசியமில்லை தகுதியும், திறமையும் இருந்தால் வேலை எங்கேயும், எப்போதும் கிடைக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2002

வணக்கம் தலைவரே!
வாசகர் கடிதம்
வேலை தேடுகிறீர்களா?
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
ஓ அன்றில் பறவைகளே!
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
கேள்வி பதில்
சிறந்த விற்பனையாளர் யார்?
பொதுவாச் சொல்றேன்
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்