Home » Articles » கேள்வி பதில்

 
கேள்வி பதில்


admin
Author:

மற்றவர்கள் நினைத்து போலித்தனமாக வாழாமல் உங்களுக்குள் இருக்கிற தனித்தன்மையை வளர்க்க வேண்டும்.’ என்று சொல்கிறார்கள். ஆனால், மற்றொருபுறம், முன்னேறியவர்களைப் பாருங்கள் அவர்களைப் போல உயர்ந்து காட்ட முடியும்’ என்று எழுதுகிறார்கள். இது முரண்பாடாக இல்லையா? விளக்கவும்.

(கே. குமரேசன், சேவூர்)

ஒப்பிடுதல் என்பது இரண்டு வகை. ஒன்று பாசிடிவ் வகை. மற்றொன்று நெகடில்வ வகை.

பாசிடிவ் வகையில், முன்னேறியவர்களின் செயல்முறைகள் மற்றும் திட்ட முறைகளை அறிந்து அவர்களைப் போல முன்னேற முடிவெடுத்தால் அது ஆக்கப்பூர்மானது. அதில் தவறில்லை.

நெகடிவ் ஒப்பிடுதலில் மற்றவர்களைப் பார்த்து நமக்கு அப்படி இல்லையே; நம்மால் அவரைப்போல் வர முடியாது என்று நினைத்தால் தாழ்வு மனப்பான்மை வந்து விடும். அல்லது அவன் அப்படி உயர்ந்து விட்டானே என்று எண்ணினால் மற்றவர்மீது பொறாமை வந்துவிடும். அதனால் நம்மை உயர்த்திக்காட்ட போலித்தனமான செயல்களைச் செய்து நம்மையே அவதிக்குள்ளாக்கிவிடுவோம்.

இதற்கு நம்முன்னோர்கள் சில வரைமுறைகளைச் சொல்லியுள்ளனர்.

அறதில் தன்னைவிட மேலானவர்களோடு ஒப்பீடு செய்ய வேண்டும். அப்போது நம் செயல்கள் உயர்ந்ததாக அமையும்.

பொருளில் தன்னைவிட வசதி குறைவானர்களோடு ஒப்பீடு செய்ய வேண்டும். அப்போது நம்மைப்பற்றி மன திருப்தி உண்டாகும்.

இன்பத்தில், சம வயதுக்காரர்களோடு ஒப்பீடு செய்யவேண்டும். அது தான் நடைமுறை சாத்தியம். அறுபது வயது மனிதர் இருபது வயது மனிதனின் சந்தோஷம் தனக்கில்லையே என நினைத்தால் மன அமைதி போய்விடும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2002

வணக்கம் தலைவரே!
வாசகர் கடிதம்
வேலை தேடுகிறீர்களா?
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
ஓ அன்றில் பறவைகளே!
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
கேள்வி பதில்
சிறந்த விற்பனையாளர் யார்?
பொதுவாச் சொல்றேன்
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்