Home » Articles » ஓ அன்றில் பறவைகளே!

 
ஓ அன்றில் பறவைகளே!


கந்தசாமி இல.செ
Author:

இரவே வந்திருக்கக்கூடாதா? காலையில் வருவதாகச் சொல்லி அனுப்பினார். பிறகு இரண்டுநாள் கழித்து வருவதாகக் கூறிச் சென்றுவிட்டார். இவ்வளவு ஆண்டுகட்குப் பிறகும் என்மேல் இருந்த கோபம் இன்னும் தீரவில்லையோ?

குறை என்னுடையதாக இருக்கும்போது அவரை நொந்து என்ன பயன்? எனக்காக அவர் எதையும் செய்யக் காத்திருந்தார். ஆனால், நானோ? அவர் இதயத்தைக் காலில் போட்டு மிதித்து நசுக்கிவிட்டேன்.

“யார் யாருக்கு எங்கு முடி போட்டிருக்கிறதோ அங்குதான் நடக்கும். நம் கையல் எதுவுமில்லைம என்று அம்மா டிக்கடி சொல்லும் போதெல்லாம் நான் கேலி செய்வேன். ஆனால், அது என் வாழ்வலேயே நிகழ்ந்து விட்டபோது…முன்னோர்கள் அனுபவத்தால் சொல்லிவைத்த சொற்கள் எவ்வளவு பொருள் பொதிந்தவை!

உயர்நிலைப் பள்ளிப்படிப்பு முடிந்ததும், அவருக்கு விருப்பமான கணக்குப்பாடம் கிடைத்ததும் அதை விடுத்து எனக்காகத் திருச்சியில் வந்து சேர்ந்தார். அவரோடு பழகிய அந்த நாட்கள் எவ்வளவு புனிதமானவை. ஒவ்வொரு ஞாயிறு மாலயும் தவறாமல் சந்திப்போம்.

எனக்குத் தேவையான பொருட்களை எல்லாம் அவர அழைத்துச் சென்றே வாங்கி வருவேன். எனக்கு ஆடம்பரமான பொருட்கள் மீது நாட்டம் செல்லும்போதெல்லாம் அவர் அவற்றை வாங்கத் தயங்குவார். எளிமையில் உள்ள மகிழ்ச்சி ஆடம்பரத்தில் இல்லை என்பார். விலை உயர்ந்த பொருட்கள் தொலைந்துவிட்டால் அதுவே பெரிய கவலையாகிவிடும். தாமாக ஏன் கவலைகளை விலைக்கு வாங்க வேண்டும் என்பார்.

ஒருநாள் தமிழ்ச் சங்கத்தில் நடந்த இலக்கிய நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார். “கலித்தொகை காட்டும் இல்லறநெறி’ பற்றிய பேசு சொற்பொழிவாள் மிக அழகாகப் பேசிக்கொண்டிருந்தார்.

6 மணி ஆகவே நாங்கள் எழுந்து வந்துவிட்டோம்.

“அவர் பேசியதிலை உனக்குப் பிடித்த கருத்து எது?” என்று கேட்டார்.

“மனமொத்து வாழும் இல்லற வாழ்வே, சிறந்தது என்றாரே அதுதான்” என்றேன்.

“ஓ ஒன்றன கூறாடை பாடல் கருத்தா? ஆமாம், எனக்கும் அதுதான் மிகுவும் பிடித்திருந்தது.” என்றார் அவர்.

அவர் சொலி முடிக்குமுன், நம் இருவர் மனமும் ஒன்றையே நினைப்பதில் ஒத்து இருக்கிறதே. அப்போ.. என்று முடிக்காமலேயே எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

அன்று இரவு எனக்கு வந்த கனவுகள், கற்பனைகள், இல்லை. அவை எல்லாம் நானாக விரும்பி விரும்பிச் செய்த கற்பனைகள். என் அறைத்தோழி – என்னடி தங்கள்! அது தலையணையடி’ – என்று கிண்டல் செய்த்து, அந்த நாட்கள் அவை எல்லாம் பழைய நாட்கள் ஆகிவிட்டனவே!

திருச்சி மலைக்கோட்டையில் ஏறும்போது நான் சோர்ந்து போனேன். ‘சற்று நேரம் உட்கார்ந்து ஓய்வு கொண்டு செல்ல்லாமா?’ என்றார்.

‘வேண்டாம். தொடர்ந்து செல்வோம்’ என்று அவர் கைகளைப் பற்றினேன். அன்று தான் ஒருவரை ஒருவர் தொட்டு உணர்ந்தோம்.

அந்த உணர்வில்தான் எவ்வளவு இன்பம். அப்பொழுதும் அவர் தயங்கத் தயங்கியே என் கைகளைப் பற்றினார். பின்னர் நான் விடுவித்துக் கொள்ளும்வரை அவராகக் கைகளை விடவில்லை.

எங்களுக்கு முன்னால், மலை ஏறிக் கொண்டிருந்த அந்தப் புதுமணத் தம்பதிகள் ஒருவர்மேல் ஒருவர் உராய்ந்து கொண்டு போவதுபோல் சென்றார்கள். “முன்னே போகிறவ்களைப் பாருங்கள்” என்றேன்.

“அவர்கள் மிகவும் வேகமாகப் போகிறார்கள். நாம் சற்று மெதுவாகவே செல்லலாம்” என்று புரிந்தும் புரியாததுபோல் கூறினார். எவ்வளவு பண்பாட்டோடு நடந்து கொண்டார்.

இந்த நினைவுகள் எல்லாம் ஏன்? திருமணமாகி, ஒரு பெண்ணுக்குத் தாயாகி, கணவனையும் இழந்து, பெண்ணும் திருமண வயதை அடைந்தபிறகு எல்லாம் எவ்வளவு விரைவாக நடந்து முடிந்துவிட்டன. எவ்வளவு கொடுமைகள் இழைத்துவிட்டேன் அவருக்கு.

அந்த இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. காவிரிக்கரையில் நடந்து சென்ற அந்த நாட்கள் தேர்வு நெருங்கிவிட்ட காலம். அவர் படித்து இளைத்துப் போயிருந்தார். என் உடம்பு பருவத்தால் செழித்து இருந்தது.

“என்ன இப்படி இளைத்துப் போய் விட்டீர்கள்? என்னைப் பாருங்கள் எப்படி இருக்கிறேன்” என்றேன்.

“உன்னைப் பார்த்தால் அவ்வளவுதான் என் படிப்பே கெட்டுப் போய்விடும்” என்றார்.

உண்மையில் எனக்குக் கோபம் வந்துவிட்டது. பிறகு ஏன் என்கூடப் பழகுகின்றீர்களாம்? என்றேன்.

மிகச் சாந்தமாகப் பதில் சொன்னார். ‘அதற்குள் அவசரப்படுகிறாயே? இப்போதெல்லாம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா? ஏற்கனவே உன் நினைவு எனக்கு அதிகம். அருகில் நின்று உன் அழகை ரசிக்கத் தொடங்கி ஏதேனும் விபரீதமாக நடந்துவிடக்கூடாதே என்றுதான்’ என்று என் கோபத்தை மாற்ற முயன்றார்.

உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியில் கோபம் கொண்டவள்போல் அவரை விட்டு விடுவிடு என்று நடந்தேன். சாலையில் கீழே இருந்த பள்ளத்தைத் பார்க்காமல் கால் இடறிக் கீழே விழுந்துவிட்டேன். ஓடோடி வந்து என்னை எடுத்தபோது, நான் அவர்மீது சாய்ந்து இருந்தேன். எனக்கு நல்ல அடி உடம்பு முழுவதும் சாலைப் புழுதி தன் கைக்குட்டையால் மண்ணை எல்லாம் துடைத்துவிட்டார்.

“சொன்னேனே கேட்டாயா? எதிலும் அவசரம் கூடாது நிதானம் வேண்டும்” என்றார். அன்றும் அதற்குப் பிறகும் சில நாட்கள் அவர் அணைப்பில் கிடப்பது போன்ற உணர்விலேயே இருந்தேன். அந்த நாட்கள்?

தேர்வெல்லாம் முடிந்து ஊருக்கு வருகின்றபோது? அது கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

நாங்கள் புறப்பட்டபோது பஸ் நிரம்பி இருந்தது. ரிசர்வ் செய்த இரண்டு பேரின் வருகைக்காக வண்டி நின்றது. கடைசியில் உரியவர்கள் வர இயலவில்லை என்று தெரிந்தபோது, அந்த இரண்டு சீட்டும் எங்கட்குக் கிடைத்தது. இரண்டு பேரும் அருகருகே அமர்ந்து கொண்டோம்.

அந்த நான்கு மணி நேரமும் என் நிலையில் நான் இல்லை. மெதுவாக அவர் தோள்மீது சாய்ந்தபோது அவர் சொன்னார். ‘தங்கம் வீட்டுக்குச் சென்றதும் குறைவாகச் சாப்பிடு. உடம்பு பருத்துவிடப் போகிறது’ என்றார்.

பழைய நிகழ்ச்சியை நினைவில் கொண்டு “இப்போது மட்டும் அருகில் இருந்து ரசிக்கலாமே?” என்றேன்.

“இப்போதுதான் தேர்வு எழுதி முடித்துவிட்டோமே’ என்று கன்னத்தை லேசாக் தட்டினார். நான் அவர் கைகளைப் பிடித்துக்கன்னத்திலேயே வைத்துக் கொண்டேன். கண்டக்டர் அங்கு வரவே என் கைகளை எடுத்துக் கொண்டார்.

வண்டி முசிறி வந்து சேர்ந்தது. வண்டியில் யாரும் இல்லை. எல்லாரும் காபி குடிக்கச் சென்றுவிட்டனர். மடியில் படுத்துக்கொண்டேன். அவரது வலது கை எனது கூந்தலைக் கோதிக் கொண்டிருந்தது. என் கண்கள் அவர் இதழ்களைப் பார்த்து ஏங்கின. அதற்குள் யாரோ இருமும் சத்தம் கேட்டு எழுந்துவிட்டேன். என் உடம்பு உணர்ச்சி மேலிட்டுத் தணலாய்க் கொதித்தது.

பெண்மை தூண்டப்பட்டுவிட்டால் அதைத் தணித்தே ஆகவேண்டும். இல்லை என்றார்? அன்று அவரிடமிருந்து அன்பு ஒன்று – பெற்றிருந்தால்? ஒருவேளை என் வாழ்வு வேறு திசையில் திருப்பம் பெற்றிருக்குமோ? முடிந்துபோன வாழ்வுக்கு வீணான கற்பனை ஏன்?

என் ஏக்கம் பெருமூச்சாய் வெளிவந்த போது “இன்னும் சத்தம் கேட்டது. கடிகாரம் இரவு பன்னிரண்டு மணி என்பத்தை உணர்த்தியது. மீண்டும் மீண்டும் அவர் உருவமே என் கண்முன் நின்றது.

ஒருமுறை அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். அவருடைய ஆவேசம் மிகுந்த பேச்சைக்கேட்டு என் உள்ளம் பெருமகிழ்ச்சி அடைந்தது. அன்று பரிசாக புத்தகங்களும் கோப்பையும் பெற்றார். அன்று நானே வெற்றி பெற்றதுபோல் அல்லவா மகிழ்ந்தேன்.

“என் வெற்றிக்குக் காரணம் நீதான். நீ இருந்தால் உன் முன்னால் எதையும் சாதித்து விடுவேன்போல் இருக்கிறது. என் வெற்றிக்கெல்லாம் நீயே தான் காரணம். நீ இல்லாத பல கூட்டங்களில் நான் பரிசு பெறவில்லை” என்று கூறி ஆப்ரகாம்லிங்கன் தன் காதலிக்கு எழுதிய வரிகளைக் குறிப்பிட்டாரே.

“அன்பே, நான் எதைச் செய்து முடிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அதை நான் உறுதியாகச் செய்து முடித்து விடுவேன். உன் அன்பு அத்தகைய பெரும் ஆற்றலை எனக்குத் தந்துள்ளது” என்று. மீண்டும் அன்பே! என்று தொடங்கி தங்கம் என்று என் கைகளுக்கு முத்தமிட்டாரே. இந்தக் கைகள், அவரைத் தழுவித் தழுவி மகிழ்ந்திருக்க வேண்டிய இந்தக் கைகள் வேறு ஒருவருக்கு உரியதாகி விட்டதே.

என்ன பெண் பிறவி! நினைத்தைச் சொல்லவும் முடிவதில்லை. சொன்னதைச் செய்யவும் முடிவதில்லை.. ஏதோ ஒரு ஓரிருவர் உயர்ந்த நிலையில் இருந்துவிட்டால் பெண்கள் எல்லோரும் உரிமை பெற்றவர்கள் ஆகிவிடுவார்களா? சமுதாயத்தில் உயர்ந்த நிலையில்தான் இருந்தேன் நான். ஆனால்? நான் விரும்பியதைச் சொல்ல முடிந்ததா? அல்லது என் விருப்பத்தைக் கேட்டார்களா? எனக்குப் போதிய தைரியமிருந்திருந்தால் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு அவரை பின் தொடர்ந்து இருக்கலாமே?

அவரைப் பின் தொடர்ந்தாலும் சமுதாயம் என்னைச் சும்மா விட்டிருக்குமா என்ன? அப்படி ஓடிய பெண்களில் பலர் எந்தெந்த நிலைக்கோ ஆளாகவில்லையா? என்ன கொடுமை! ஆனால் என்னுடை வேள் அப்படி என்னை கைவிட்டு இருப்பாரா? அப்படி வருபவராக இருந்தால் கல்லணையைப் பார்க்கச் சென்றபோது நான் கால் வழுக்கி அந்த் ஆழமான கால்வாயில் விழுந்துவிட, வேகமாக ஓடிய தண்ணீர் என்னை மதகருகில் கொண்டு போய் சேர்த்துவிட்டது. தன் உயிரையும் பொருட்படுத்தாது என்னைக் காப்பாற்றத் தண்ணீரீல் குதித்தாரே மேலே நின்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

ஒரு கையில் என்னைப் பிடித்துக்கொண்டு நெடுநேரம் அந்த நீரோடு போராடினார். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிலர் கயிற்றைக் கட்டி இறக்கி எங்களை ஏற்றிவிட்டார்கள். அன்று அவர் என்னைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால்? நான் ஆற்றோடு போயிருப்பேன்.

கண்களிலிருந்து சூடான கண்ணீர் வெளிவந்த பிறகே, நான் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் என்பதை உணர்ந்தேன்.

அந்தக் கால்வாயிலிருந்து ஏறிவந்த பிறகுதான், அவர் நெற்றியில் ரத்தம் வடிந்தது. தெரிந்தது. அவர் தலை அந்தக்கம்பியில் மோதியபோதுதான் அதைப் பற்றிக்கொண்டாராம். அந்த கம்பி மட்டும் கைக்குக் கிட்டாமல் இருந்திருந்தால் நாம்மீண்டிருக்கவே மாட்டோம் என்றார். எல்லோரும் போனபிறகு நான் எத்தனை முறை அவர் நெற்றியைத் தடவிக் கொடுத்தேன். அந்தக் காயம் நெடுநாள்வரை ஆறாமல் இருந்து பின்னர்தானே ஆறியது.

பட்டமளிப்பு விழாவில் அவர் உரை நிகழ்த்தும்போது அந்தத் தழும்பைப்பார்த்ததும் என்னையறியாமல் என் கை என் நெற்றியை ஒருமுறை தடவிக் கொண்டதே ஏன்? என்னால் அவருகுக்கொடுக்க முடிந்த அழியாத நினைவுச் சின்னம் அது ஒன்றுதான்.

“உங்கள் அழகான நெற்றியில் வடு ஏற்பட்டு அழகைக் கெடுத்துவிட்டதே’ என்றேன்.

‘இதற்குத்தான் விழுப்புண் என்று பெயர். உன் நினைவு எனக்கு உள்ளத்தில் மட்டும் இல்லை அது உடலிலும் கலந்து இருக்கிறது.நெற்றியில் கை படும்போதெல்லாம் உன் நினைவில் என் மனம் மகிழும்” என்றார்.

அவரா என்னைக் கைவிட்டு இருப்பார்? உன் நினைவு எனக்கு உள்ளத்தில் இருக்கிறது. நெற்றியில் கை படும்போதெல்லாம் உன் நினைவில் என் மனம் மகிழும்’ என்றார்.

அவரா என்னைக் கைவிட்டு இருப்பார்? மாட்டவே மாட்டார். என் வாழ்க்கை உள்ளே ஒன்றும் வெளியே ஒன்று மாக ஆகிவிட்டதே. சமுதாயமே உடல் தூய்மையைத்தானே போற்றுகிறது. உள்ளத்தூய்மையைப் போற்றவில்லையே சமுதாயம் என்ன? நானும் அப்படித்தானே.

கனவு என்பது விருப்பத்தின் விளைவுகள் தானே. கனவில் அவரோடு எத்தனையோ முறை வாழ்ந்தேனே. கற்பனையாக எத்தனைமுறை அவர் நெற்றிக்குப் பற்றுப்போட்டிருப்பேன். அதனால் என் உள்ளம் தூய்மையை இழந்து விடவில்லையா? ஆனால், அது யாருக்குத் தெரியும்? எனக்குத் தெரிந்தும் என்னவாயிற்று?

பால்காரர்களின் சைக்கிள் ஒலி கேட்டது. ஓ மணி ஐந்து ஆகிவிட்டதே இன்றை இரவு என்னை என்னவெல்லாமோ நினைக்கச் செய்துவிட்டது. ஆமாம் நினைவுக்குத் தடைபோடுவார் யார்?

தொடரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2002

வணக்கம் தலைவரே!
வாசகர் கடிதம்
வேலை தேடுகிறீர்களா?
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
ஓ அன்றில் பறவைகளே!
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
கேள்வி பதில்
சிறந்த விற்பனையாளர் யார்?
பொதுவாச் சொல்றேன்
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்